தேமுதிக கிச்சன் காபினெட்டில் முக்கிய ஆலோசனை!
பதினஞ்சாயிரம் கோடி கொடுத்தால்
கட்சியைக் கலைக்கத் தயார்!
-----------------------------------------------------------------------------------------------------
தேமுதிக கிச்சன் காபினெட் நேற்று மாலை கூடியது.
சுத்தீஷின் மாமியார் கூட்டத்திற்குத் தலைமை
தாங்கினார். சுத்தீஷின் கொழுந்தியாள், மைத்துனி
உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து
கொண்டனர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேமுதிகவுக்கு
எதிர்காலமே இல்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
அனைவரும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில்
தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டிய அவசியம்
என்ன என்ற கேள்வியை சுத்தீஷின் மைத்துனி
முன்வைத்தார்.
சரிதானே, எதுக்கு வெட்டியா நாம கட்சியை
நடத்தணும் என்றார் சுத்தீஷின் மாமியார். இதைத்
தொடர்ந்து கட்சியைத் தொடர்ந்து நடத்துவதில்
உள்ள சாதக பாதகங்கள் அலசப்பட்டு இறுதி முடிவு
எடுக்கப் பட்டது.
ஜெயலலிதாவும் கலைஞரும் ஆளுக்கு பத்தாயிரம்
கோடி கொடுத்தால் கட்சியைக் கலைத்து விடலாம்
என்ற யோசனை முன்வைக்கப் பட்டது. அப்போது
குறுக்கிட்ட பிரேமலதா, ஜெயலலிதா ஆட்சியில்
இருப்பதால் பதினஞ்சாயிரம் கோடி தரலாமே
என்ற கருத்தை முன்வைத்தார். அது ஏற்கப் பட்டது.
ஆக, ஜெயலலிதா 15,000 கோடி, கலைஞர் 10,000 கோடி
ஆக மொத்தத்தில் 25,000 கோடி கிடைத்தால் தேமுதிக
கட்சியைக் கலைத்து விடலாம் என்றும், தொகை
கிடைக்காவிட்டால், கிடைக்கும் வரை கட்சியைத்
தொடர்ந்து நடத்துவது என்றும் தேமுதிக கிச்சன்
காபினெட் முடிவு செய்தது.
வைகோவுக்கு 1500 கோடி கொடுத்த அம்மா, நமக்கு
15,000 கோடி தருவார் என்று நம்பிக்கையை வெளிப்
படுத்தினார் சுத்தீஷின் கொழுந்தியாள்.
***********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக