திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில்
அதிமுக ஆதரவுடன் தா பாண்டியன் போட்டி!
இரட்டை இலைச் சின்னத்தில் நிற்பாரா?!
--------------------------------------------------------------------------------
தீவிர ஜெயலலிதா விசுவாசியான தா பாண்டியன்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு
சட்டமன்றம் செல்ல ஆசைப்படுகிறார். தற்போது
அவர் இடம் பெற்றிருக்கும் மக்கள் நலக்
கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்டால்
டெப்பாசிட் கந்தலாகி விடும் என்பதை அறிந்துள்ள
தா பாண்டியன் அதிமுக ஆதரவுடன் போட்டியிட
விரும்புகிறாராம்.
இதுகுறித்து ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற
அவரைச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுக்
காத்திருக்கிறார் தா.பா.
இதுபற்றிக் கருத்துக்கூறிய ஓபிஎஸ், "பாண்டியன்
சாருக்கு சீட்டுக் கொடுக்க அம்மா விரும்புவாங்கதான்,
ஆனால் அவர் இரட்டைஇலைச் சின்னத்தில் நிற்க
வேண்டும்" என்றாராம்.
"இரட்டை இலைச் சின்னத்தில் நிற்பதற்கு தா.பா.வுக்கு
அதிக விருப்பம் உண்டு; ஏற்கனவே அவர் கைச்
சின்னத்தில் நின்றவர்தானே"என்று சுட்டிக் காட்டினராம்
தா.பா ஆதரவாளர்கள்.
ஆக, கூடிய விரைவில் இரட்டை இலைச் சின்னத்தில்
தா பாண்டியன் போட்டி இடுவதை நாம் காணலாம்.
********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக