ராஜீவ் காந்தி கொலை தமிழ் மண்ணில்
நடந்து இருக்கக் கூடாது!
----------------------------------------------------------------------------
மனிதகுல வரலாற்றிலேயே எடுக்கப்பட்ட மிக
முட்டாள்தனமான முடிவு எது? ராஜீவ் காந்தியைத்
தமிழ் மண்ணில் வைத்துப் படுகொலை செய்வது
என்ற முடிவுதான் அது.
ஈழப்போருக்கு உறுதுணையாக ஓர் அற்புதமான
பின்புலமாக தமிழகம் இருந்து வந்தது. குறிப்பாக
கோடியக்கரையில் இருந்து யாழ்ப்பாணம்
செல்வதும், யாழில் இருந்து கோடியக்கரை
வருவதும் அதிகாலை வாக்கிங் மாதிரி அவ்வளவு
எளிதாக இருந்தது.
புலிகளுக்குத் தேவையான அனைத்தும் தமிழகத்தில்
தயாரிக்கப்பட்டு கடல் வழியாக ஈழத்துக்குச் சென்றன.
ராஜீவ் கொலைக்குப் பின், கடல் வழியானது
முற்றிலுமாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு
கடல்வழிப் போக்குவரத்து அறவே தடை செய்யப்பட்டது.
இது புலிகளுக்கு ராணுவ, வர்த்தக ரீதியில் பெரும்
பின்னடைவைத் தந்தது. கடைசி வரை இந்த
இழப்பை ஈடுகட்டப் புலிகளால் முடியவில்லை.
இந்த இழப்பால் காவு கொள்ளப்பட்ட உயிர்கள் ஏராளம்.
ஜெயின் கமிஷன் அறிக்கையில் பின்வருமாறு
கூறப்படுகிறது: "தமிழகத்தில் திமுக ஆட்சி
நடந்து இருக்காவிட்டால், ராஜீவ் கொலையும்
தமிழ்நாட்டில் நடந்தே இருக்காது".
ஜெயின் சொல்வது உண்மைதான். திமுக ஆட்சி
நடந்திருக்காவிட்டால், ராஜீவ் கொலை தமிழகத்தில்
நடந்து இருக்க முடியாதுதான்.
ஆக, ராஜிவை தமிழ்நாட்டில் வைத்துக் கொலை
செய்வது என்ற முடிவு இமாலயத் தவறு என்று
வரலாறு நிரூபித்துள்ளது. இந்த முடிவை யார்
எடுத்திருந்தாலும், அது முட்டாள்தனமானதே.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக