திங்கள், 23 ஜூலை, 2018

1) மார்க்சும் எங்கல்சும் உலகம் முழுதும் உள்ள
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான வேலைத்திட்டத்தை
(programme) வகுத்துக் கொடுத்துள்ளனர். அதுதான்
கம்யூனிஸ்ட் அறிக்கை (Communist manifesto). 

2) அதே நேரத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை
எப்படிக் கட்டுவது என்பது பற்றிய
திட்டவட்டமான வரையறையை அவர்கள்
வழங்கவில்லை. இது மார்க்சியம் அறிந்த
அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும்.

3) திட்டவட்டமான வரையறை (categorical definition)
என்றால் என்ன என்று தெரிந்து கொண்டால்
இதைப் புரிந்து கொள்வது எளிது.

4) திட்டவட்டமான வரையறையை லெனின் வழங்கி
உள்ளார். vanguard party உள்ளிட்ட பல்வேறு
போதனைகளை லெனின் வழங்கி உள்ளார்.

5) மார்க்சும் எங்கல்சும் திட்டவட்டமான
வரையறையை வழங்கி இருந்தால், அது
என்ன என்று எவரும் கூறலாம்.  பொதுவாகச்
சொல்வது வேறு; திட்டவட்டமான வரையறையை
வழங்குவது வேறு. என்னுடைய பதிவில் உள்ள
திட்டவட்டமான வரையறை என்பதைப்
புரிந்து கொள்ளாவிட்டால் பிறழ்புரிதல் நேரும்.


இந்தக் கட்டுரையின் மையக் கருத்தில் இருந்து
விவாதத்தை திசை திருப்புதல் முறையல்ல.

மார்க்ஸ் கூறிய திட்டவட்டமான வரையறை என்ன?
அதைக் கூறவும்.

மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை யாருக்காக ஏ

திட்டவட்டமான வரையறை என்றால் என்ன என்று
அருள்கூர்ந்து முதலில் புரிந்து கொள்ள முயற்சி
செய்யுங்கள். திட்டவட்டமான வரையறை
என்பது கோட்பாட்டை இறுதி செய்யும் கட்டத்தில்
வரையறுக்கும் விஷயங்கள் ஆகும். எனவே
முதலில் இருந்தா என்று நீங்கள் கேட்பது
உங்களுக்கு திட்டவட்டமான வரையறை என்றால்
என்னவென்றே புரியவில்லை என்பதைக்
குறிக்கிறது. சரி இப்போதாவது சொல்லுங்கள்,
மார்க்ஸ் கூறிய திட்டவட்டமான வரையறை என்ன?


தோழரே,
திட்டவட்டமான வரையறையை மார்க்ஸ்
வழங்கவில்லை  என்று எனது பதிவு கூறுகிறது.
அதை மறுக்கும் நீங்கள் அல்லவா உங்கள்
மறுப்பை நிரூபிக்க வேண்டும். நேர்மையாக
வாதம் செய்யவும்.

இதனால்தான் முதலிலேயே கூறினேன்: இது
அறிவுப்புலம் சார்ந்து விவாதிக்க வேண்டிய
விஷயம் என்று. தங்களின் இந்த விவாதத்தால்
யாருக்கு என்ன லாபம்? உங்களுடைய
காழ்ப்புணர்வை வெளிப்படுத்தி அதை ஊர்
அறியச் செய்தது தவிர.

மார்க்சுக்கு தனிச்சிறப்பான பங்களிப்பு உண்டு.
அது போல எங்கல்சுக்கும் லெனின், மாவோ,
ஸ்டாலின் ஆகிய மூல ஆசான்களுக்கு உண்டு.
கட்சி கட்டுதல் என்பது லெனினியத்தின் உயிர்நாடி.
உங்களுக்கு கட்சி கட்டுதல் பற்றிய லெனினியக்
கோட்பாடே புரியவில்லை. அதுதான் சிக்கல்.

மார்க்சியம் என்பது ஒரு சில புத்தகங்களைப்
படித்துத் தெரிந்து கொள்வது என்று நீங்கள்
நினைத்தால் அது மாபெரும் தவறு. மார்க்சியத்தை
பிரயோகித்த, பிரயோகிக்கும் நடைமுறை (practice)
இல்லாமல் மார்க்சியம் கற்க முடியாது. இதை
முதலில் புரிந்து கொள்ளுங்கள். 
  

ஈஸ்வரன் அவர்களே,
1) எல்லோருக்கும் தெரிந்த உண்மையை ஏதோ
நீங்கள்தான் கண்டு பிடித்தது போலப் பேசும்
பரிதாபத்தை நினைத்து வருந்துகிறேன்.

2) மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ
என்று தொடர்ச்சியாக உள்ளதுதான் மார்க்சியம்
என்பது சிறுபிள்ளைகளும் அறிந்த விஷயமே.
லெனினியம் என்பது மார்க்சியத்தின் தொடர்ச்சி
என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே லெனினை
தனித்து யாரும் பார்ப்பதில்லை.

3) மார்க்ஸ் கூறிய திட்டவட்டமான வரையறை
என்ன என்பது பற்றி நீங்கள் இன்னும்
கூறவில்லை. உங்கள் பின்னூட்டத்தின்
மையக்கருத்தை உங்களால் இன்னும்
நிரூபிக்க இயலவில்லை.

4) தங்கள் காலத்தில் எது எதற்கு முன்னுரிமை
கொடுக்க வேண்டுமோ அது அதற்கு மார்க்சும்
லெனினும் முன்னுரிமை கொடுத்தார்கள்.
கட்சி கட்டுவது பற்றிய திட்டவட்டமான
வரையறையை வகுக்க வேண்டிய தேவை
மார்க்சுக்கு இல்லை. அது லெனினுக்கு
இருந்தது.

5) மார்க்சுக்கு அந்தத் தேவை இருந்திருந்தால்,
அந்த வேலையை மார்க்சே செய்திருப்பார்.
ஆனால் வரலாறு கட்சி கட்டுதலின் பொறுப்பை
லெனின் மீது செலுத்தியது. லெனின் அதைச் செய்து
முடித்தார். இதைச்  சொல்வது மார்க்சுக்கு பங்கம்
விளைப்பதாக பொருள் ஆகாது. அப்படிப்
பொருள் கொள்பவர்களின் மனநிலை
ஆரோக்கியமாக இல்லை என்று பொருள். 

6) இதுதான் என் கட்டுரையில் சொல்லப் பட்டதன்
பொருள். அறிவுப்புலம் சார்ந்தோர் இப்பொருளை
எளிதில் அறிய முடியும்.

7) மார்க்சியம் இல்லாமல் லெனினியம் இல்லை
என்பதும் மார்க்சியத்தின் தொடர்ச்சியே
லெனினியம் என்பதும் நீங்கள் சொல்லித்தான்
இந்தத் தமிழகம் தெரிந்து கொள்ளப் போகிறதா?

8) அறிவியலிலும் அப்படித்தான் என்பது அறிவியல்
படித்திருந்தால் தெரியும். கெப்ளர் இல்லாமல்
நியூட்டன் இல்லை. கலிலியோ இல்லாமல்
நியூட்டன் இல்லை. என்றாலும் ஒவ்வொருவருக்கும்
ஒரு தனிச் சிறப்பான பங்களிப்பு உண்டு.
தொடர்ச்சியையும் மறுக்க முடியாது. தனிச்
 பங்களிப்பையும் மறுக்க முடியாது.

8) தங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.
இனிமேல் அருள்கூர்ந்து உங்களின் மொத்த
மறுப்பையும் ஒரே ஒரு கட்டுரையாக எழுதித்
தாருங்கள். அதாவது இனிமேல். எனக்கும்
ஒரே கட்டுரையாக பதிலளிப்பது சுலபம்.
இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கலாம்.  

      






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக