வியாழன், 12 ஜூலை, 2018

அமைப்பே கூடாது என்பதுதான் பின்நவீனத்துவம்.
 பெருமாள் முருகன் அமைப்பு சார்ந்து
இயங்கியவர் அல்ல.கலை இலக்கியப்
பெருமன்றத்திலோ அல்லது தமுஎகச
அமைப்பிலோ அவர் சேர்ந்து செயல்பட்டவர் அல்ல.
இருப்பினும் அவருக்குப்  பிரச்சினை வந்தபோது,
தமுஎகசவின் தமிழ்ச்செல்வன் அவர் சார்பாக
நின்றார். ஆக, மார்க்சியரே அல்லாத பெருமாள்
முருகனைப்போய் மார்க்சியர் என்று கூறுவது
சரியல்ல.

குட்டி முதலாளித்துவ அன்பர்கள் தங்களின்
அறிவின் குறுகிய வரம்புக்குள் விவாதித்துத்
தீர்க்கக்கூடிய விஷயம் அல்ல இது. உங்களின்
புரிதலின் மட்டத்துக்கு அப்பாற்பட்ட
விஷயங்களில் உங்களுடன் மல்லுக்கட்டுவது
எங்களுக்கு வீண் வேலை.

நாகரிகம் கருதி discreetஆக அதாவது நாசூக்காகச்
சொல்வதில் உள்ள சிக்கல் என்னவெனில், அது
கேட்பவருக்குப் புரியாமல் போய்விடும் ஆபத்தைக்
கொண்டது. எனவே தேங்காயை உடைத்தது
போல சொல்ல வேண்டி இருக்கிறது.

மா தொல்காப்பியன் அவர்களே,

இது மார்க்சியம் அறிந்த மார்க்சியர்கள், மற்றும்
மார்க்சியம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கான
இடம். அவர்களை மனதில் கொண்டே இங்கு
பதிவுகள் எழுதப் படுகின்றன. குட்டி
முதலாளித்துவத்திற்கு உவப்பான விஷயங்கள்
இங்கு கிடைக்காது. சுருங்கக் கூறின், இது
இரும்பு அடிக்கிற இடம். இங்கு ஈக்களுக்கு
என்ன வேலை?

பெருமாள் முருகனையும் படிக்காமல்,
மார்க்சியமும் அறியாமல், பின்நவீனத்துவம்
என்றால் என்னவென்றே தெரியாமல், சொல்லப்படும்
கருத்துக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.
அருள்கூர்ந்து நேர விரயம் வேண்டாமே!

மார்க்சியப் பார்வை என்பது எந்த ஒரு தனி
மனிதனுக்குமான பார்வை அல்ல. அது உலகப்
பார்வை. பெருமாள் முருகனுக்கும் லியோ
டால்ஸ்டாய்க்கும், ஜெயகாந்தனுக்கும்
அனைவருக்குமான பார்வை. மார்க்ஸ் வெறும்
தனிமனிதர் அல்லர். அவர் உலகளந்த பெருமாள்!
    

அலைநீளம் என்ன?
பொருள்முதல்வாதப் பாடம்!
மார்க்சியம் கற்க விரும்புவோருக்கானது!
----------------------------------------------------------------------
கிரிக்கெட் பந்தின் அலைநீளம் = 3.4x 10^-34m.
அதாவது அலைநீளம் இல்லை என்றே எடுத்துக்
கொள்ளலாம். இங்கு 10 to the power of minus 34  என்பதன்
பொருளைப் புரிந்து கொண்டால் மட்டுமே
அலைநீளம் உண்டா இல்லையா என்பதைப்
புரிந்து கொள்ள இயலும்.

எலக்ட்ரானின் அலைநீளம் =0.1 நானோமீட்டர்.

பெரிய பொருட்களின் (macro objects) அலைநீளம்
என்பது மிக மிகக் குறைவானது. 10 to the power of minus 34
என்ற ரேஞ்சில் இருப்பது. இதைப் புரிந்து
கொள்ள வேண்டும்.
  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக