திங்கள், 30 ஜூலை, 2018

நிறை வரம்பிலி ஆகுமா?
Will the mass become infinity?
-----------------------------------------
Fermilab, CERN ஆகிய ஆய்வகங்களில்
துகள் முடுக்கிகள் (particle accelerators) உள்ளன.
இவற்றில் துகள்கள் தங்களின் ஓய்வுநிறையை
விடப்  பல்லாயிரம் மடங்கு, லட்சம் மடங்கு
அதிகமான kinetic energyஐ அடையும் விதத்தில்
முடுக்கி விடப்பட்டன. (துகள் இயற்பியலில்
துகள்களின் நிறையை energy unitல் குறிக்கும்
வழக்கமே உள்ளது).

அந்தக் கணக்கீடுகள் அனைத்திலும் முன்சொன்ன
சூத்திரமே பயன்படுகிறது. எனவே இந்தக்
கணக்கில் நான் கொடுத்திருப்பது கற்பனையான
நிலைமை அல்ல. இது real time situationல் இருந்து       
எடுக்கப்பட்ட கணக்கே ஆகும்.

v = c என்பதை physical event என்று கருத வேண்டாம்.
ஏனெனில் இன்று வரை v = c நிலையில் mass = infinity
என்ற நிலை not achieved physically. அது கோட்பாட்டு
மட்டத்திலேயே உள்ளது. 

===============================================
ஆய்வு நோக்கில் மார்க்சியம்!
-----------------------------------------------------------------
ஐரோப்பிய நாடுகளில் அறிவுப்புலம் சார்ந்து
மார்க்சியக் கோட்பாடுகள் அனைத்தும்
அறிவுபூர்வமான விவாதத்துக்கு உட்படுத்தப்
படுகின்றன.Political science கல்விப்புலம்
சார்ந்து மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் உள்ளிட்ட
அனைத்து மார்க்சிய ஆசான்களின்
கோட்பாடுகளும்  அவை எழுதப்பட்ட காலம்,
சமூகச் சூழல் சார்ந்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளன.
இதன் மூலம் மார்க்சியத்தின் அனைத்து
அம்சங்கள் மீதும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு
உள்ளது. இந்தியாவில் இப்படி ஒரு  நிலையை
கற்பனையில் கூடக் காண முடியாது.

ஆய்வு நோக்கிலான சில கட்டுரைகளை
எழுதியதன் மூலம், நியூட்டன் அறிவியல் மன்றம்
மார்க்சியத்தின் சிறப்பை ஒளிவீச்சுக்கு
உட்படுத்துகிறது. எனினும் ஆய்வு நோக்கில்
மார்க்சியம் என்பதற்கே பழக்கப்படாத
தமிழ் மார்க்சியச் சூழலில் இத்தகைய
கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுவது எளிதல்ல. 


மருதுபாண்டியன் இரா

குட்டி முதலாளித்துவத் தற்குறிகளும், அரை
வேக்காட்டு ஆசாமிகளும்  மார்க்சியம்
கற்றல் மற்றும் கற்பித்தல் என்னும் இரண்டுக்கும்
எதிராக இருந்து கொண்டு சூழலை நச்சுப்
படுத்துகிறார்கள். இவர்களை அப்புறப் படுத்தாமல்
மார்க்சிய ஆய்வு என்பதோ மார்க்சியம் கற்பது
என்பதோ சாத்தியமில்லை. 

மாபெரும் பாய்ச்சல் (great leap forward) பற்றி
 கூறவில்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக