ஞாயிறு, 29 ஜூலை, 2018

ஒரு எலக்ட்ரானின் நிறை
ஓய்வில் இருக்கும்போது குறைவாகவும்
இயக்கத்தில் இருக்கும்போது அதிகமாகவும்
இருப்பது ஏன்?
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
நிறை (mass) என்றால் என்ன என்று பலரும்
அறிந்திருப்பர். நியூட்டனின் இயற்பியலில்
ஈர்ப்பு நிறை (gravitational mass), சடத்துவ நிறை
(inertial mass) என்று இரண்டு உண்டு. நிறை என்பதை
இரண்டு விதமாக வரையறுப்பதால் இரண்டு வித
நிறை உள்ளது. எனினும் இரண்டும் ஒன்றே.

சார்பியல் கொள்கை வந்தவுடன் நிறை என்பது
இரண்டு வகைப்பட்டது என்ற கருத்தும்  கூடவே
வந்தது.
1. ஒய்வு நிறை (rest mass)
2. இயக்கத்தின் போது உள்ள நிறை (mass while on motion).
இவ்விரண்டும் ஒன்றல்ல; வேறுபட்டவை.

இவற்றை mass என்றும் rest mass என்றும்
குறிப்பிடுகிறோம். ஓய்வுநிலையில் உள்ள
நிறையை rest mass என்கிறோம்.

இந்த வேறுபாடு சார்பியலில் மிகவும் முக்கியமானது.
இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள ஒரு
கணக்கைச் செய்வோம்.

கணக்கு இதுதான்!
---------------------------------- 
ஒரு எலக்ட்ரானின் ஒய்வு நிறை 9.1 x 10^-31
(9.1 multiplied by 10 to the power of minus 31). அந்த எலக்ட்ரான்
ஒளியின் வேகத்தில் 4/5 பங்கு வேகத்தில்
செல்லும்போது அதன் நிறை என்ன?

The rest mass of an electron is 9.1 x 10^-31 (9.1 multiplied by 10 to the
power of minus 31). What will be its mass if it moves with 4/5th of
the speed of light?

மனக் கணக்காகச் செய்யலாம். செய்கிறார்கள்
என்னிடம் பிசிக்ஸ் கற்றவர்கள்.

ஐன்ஸ்டினின் பிரசித்தி பெற்ற
square root of 1 minus v squared divided by c squared சூத்திரத்தைப்
பயன்படுத்தவும்.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இது 12ஆம் வகுப்பு இயற்பியல்
(TN State board) பாடப் புத்தகத்தில் (old syllabus)
உள்ள கணக்கு)
**************************************************
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக