வெள்ளி, 20 ஜூலை, 2018

நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
அறிவியல் செயல்பாடுகள்!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
1) கல்விப்புலம் சார்ந்த செயல்பாடு!
---------------------------------------------------------------
VAO தேர்வு, TET தேர்வு போன்ற எளிய தேர்வுகள்
முதல் IIT JEE mains, நீட், UPSC, TNPSC போன்ற  பெரிய
தேர்வுகள் வரை பல்வேறு போட்டித் தேர்வுகளை
எழுதும் மாணவர்கள், இளைஞர்களுக்கு
பயன் தரும் விதத்தில் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் அறிவியல் பதிவுகள் எழுதப்
படுகின்றன.

தேர்வுகளை எதிர்கொள்ளும் மன வலிமையை 
நம்பிக்கையை எமது பதிவுகள் தருகின்றன.

இவ்வாறு கல்விப்புலம் சார்ந்து (academic) எமது
அறிவியல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. 

2) சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை ஏற்படுத்தல்!
-------------------------------------------------------------------------------------------
பள்ளி கல்லூரிகளில் அறிவியலைக் ,கற்றிராத,
அறிவியல் பின்னணி இல்லாதோரும் பயன்படும்
வண்ணம் பல்வேறு அறிவியல் செய்திகள்,
கருத்துக்களை எமது பதிவுகளில் தந்துள்ளோம்.

சமூகத் தாக்கம் உடைய (social impact) விஷயங்களில்
சரியான அறிவியல் நிலைப்பாடு என்ன என்பதையும்
எமது பதிவுகள் விளக்கி உள்ளன. இதன் மூலம்
சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை
ஏற்படுத்துவதில் பெரும்பங்கை ஆற்றி வருகிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.

3) பொருள்முதல்வாதத்தைப் பரப்புதல்!
---------------------------------------------------------------------
பொருள்முதல்வாதம் என்பது அறிவியலோடு
இணைந்தது. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் 
பொருள்முதல்வாதம் என்பது  அறிவியலில் இருந்து
துண்டித்துக் கொண்ட நிலையில் இருந்து
வருகிறது. இந்த நிலையை மாற்றுவதிலும்
பொருள்முதல்வாதத்தை அறிவியலுடன்
இணைப்பதிலும் எமது பதிவுகள் முழுமையாகப்
பங்காற்றி உள்ளன. நியூட்டன் அறிவியல்
மன்றத்தைத் தவிர வேறு யார் எவரும்
பொருள்முதல்வாதத்தை அறிவியல்படுத்துவது
பற்றிச் சிந்தித்தது கூடக் கிடையாது என்ற
நிலையில், நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே
அறிவியல் பொருள்முதல்வாதத்தை உருவாக்கிப்
பரப்பி உள்ளது.

இன்னும் பல்வேறு அறிவுச் செயல்பாடுகளில்
நியூட்டன் அறிவியல் மன்றம் ஈடுபட்டு
இருந்தாலும், பிரதானமாக மேற்கூறிய
மூன்று விதமான செயல்பாடுகளில் குவிந்த
கவனம் செலுத்தி இருந்தது நியூட்டன் அறிவியல்
மன்றம்.
****************************************************


இனி அறிவியல் பதிவுகள் மட்டுமே
வெளியிடப்படும்! பிற பதிவுகள் நிறுத்தப்படும்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
தத்துவம், மார்க்சியம், பொருள்முதல்வாதம்
ஆகிய தலைப்புகளில் எழுதப்படும்
கட்டுரைகளை நிறுத்திக் கொள்வது என்றும்
இனிமேல் பிரதானமாக அறிவியல் பதிவுகளை
மட்டும் வெளியிடுவது என்றும்
நியூட்டன் அறிவியல் மன்றம் முடிவு செய்துள்ளது.

:காரணங்கள்:
---------------------------
1) கருத்துத் திருட்டு மற்றும் அறிவுத்  திருட்டு.

2) தலைமறைவு வாசகர்களின் எண்ணிக்கை
மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்காடு
போட்டுக்கொண்டு படித்து விட்டுப்
போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க
வேண்டிய அவசியமில்லை.

3) ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காசு
கொடுக்காமல் சிலர் போய்விடுவது உண்டு.
அப்படிப்பட்ட வாசகர்களால் பயனில்லை.

 மேலும் நட்புப் பட்டியலில் சேர விரும்பும்
புதிய இளைஞர்கள், மாணவர்களைச் சேர்க்கும்
பொருட்டு, தலைமறைவு வாசகர்கள் சுமார் 50
பேரை முதல் கட்டமாக நீக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
**********************************************  
பின்குறிப்பு: Don't cast pearls before swine....Bible.
----------------------------------------------------------------------------
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக