ஞாயிறு, 8 ஜூலை, 2018

நயன்தாராவின் காரைப் பழுதாக்கிய சிஐஏ!
அமித் ஷா தூண்டுதல் என ராகுல் குற்றச்சாட்டு!
செயல் தலைவரின் கண்டன அறிக்கை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
திரிஷா, நயன்தாரா இருவரும் ஒரு நடன
நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருந்து தங்கள் காரில்
ஏறுகின்றனர். இன்ன நேரத்தில் அங்கு இருக்க
வேண்டும் என்றால் இன்ன வேகத்தில் செல்ல
வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி
ஒரே இடத்தில் இருந்து ஒரே நேரத்தில் இருவரும்
காரை எடுத்தனர். திரிஷாவின் கார் புறப்பட்டு
விட்டது. ஆனால் நயன்தாராவின் கார் கிளம்ப
மறுத்தது. மெக்கானிக் வந்து பழுது நீக்கிய
பின்னரே நயன்தாராவால் காரை ஓட்ட முடிந்தது.
இதற்குள் அரைமணி நேரம் ஓடி விட்டது. நிகழ்ச்சி
நடைபெறும் இடமோ 150 கி.மீ தொலைவில் உள்ளது.
எனவே காரின் வேகத்தை முன்பு திட்டமிட்டதை விட
மணிக்கு 25 கி.மீ அதிகரித்த நயன்தாரா சரியான
நேரத்திற்கு நிகழ்ச்சிக்குச் சென்றார்.
இப்போது கேள்வி இதுதான்! திட்டமிட்ட வேகத்தை விட
அதிகமான வேகத்தில் சென்றாரே நயன்தாரா,
அவரின் திட்டமிட்ட வேகம் என்ன?
(பத்தாம் வகுப்பின் எளிய கணக்கு.
வாசகங்கள் சற்றே மாற்றப் பட்டுள்ளன)
******************************************************************

எவ்வளவு காலம்தான் நம்பரை நம்பரால்
வகுத்துக் கொண்டு இருப்பீர்கள்?
ஒரு கோவையை இன்னொரு கோவையால்
வகுக்க வேண்டாமா?
அல்ஜீப்ரா வகுத்தல்! அஞ்ச வேண்டாம்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
வகுத்தல் என்பது கணிதத்தின் நான்கு அடிப்படைச் 
செயல்களில் ஒன்று. ஆறாம் வகுப்பிலேயே வகுத்தல்
கற்றுக் கொடுக்கப் படுகிறது.
இன்று ஒரு வகுத்தல் கணக்கைப் பார்ப்போம்.
ஆனால் ஒரு எண்ணை வேறொரு எண்ணால்
வகுக்கும் பாரம்பரியமான வகுத்தல் அல்ல இது.
ஒரு கோவையை, அதாவது ஒரு அல்ஜீப்ரா கோவையை
(algebraic expression) இன்னொரு கோவையால் வகுக்கும்
கணக்கு இது. இது அடிப்படையானது.
இதுதான் செய்ய வேண்டிய கணக்கு.
----------------------------------------------------------------------
3x^3+ 8x^2+ 8x+12 என்ற கோவையை (x-4) ஆல் வகுத்து
ஈவு மீதி காண்க.
Divide (3 x cubed + 8 x squared + 8x +12) by (x -4) and find the quotient
and the remainder.
(Taken from XI std Maths book; year 1970)
*****************************************************************
மாதிரிக் கணக்கு:
இந்தக் கணக்கு எப்படிச் செய்யப்பட்டு உள்ளதோ
அதே போல் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக