வியாழன், 26 ஜூலை, 2018

யாம் பயன்படுத்தும் தமிழ்க் கலைச்சொற்கள்!
தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்! 
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
துறை: வானியல், இயற்பியல்.

கலைச்சொற்கள்:
------------------------------
1. apogee = புவிச்சேய்மை
2 .perigee = புவியண்மை
3. major axis = பேரச்சு
4. minor axis =  சிற்றச்சு 
5. semi major axis = அரைப்பேரச்சு
6, semi minor axis = அரைச்சிற்றச்சு
7. perihelion = சூரிய அண்மை
8. aphelion =  சூரியச் சேய்மை
9. eccentric orbit = பிறழ்மையச் சுற்றுப்பாதை
10. eccentricity = மையப்பிறழ்வு.
--------------------------------------------------------
சூரிய அண்மை, சூரியச் சேய்மை என்ற சொற்களை
ஞாயிற்றண்மை, ஞாயிற்றுச் சேய்மை என்று
மாற்றக் கூடாது. இவை புரிதலுக்குத் தடங்கலை
விளைவிக்கும்.

அது போலவே, கதிரவவண்மை, கதிரவச் சேய்மை
என்றும் மாற்றி பொருள் உணர்தலில் தடங்கலை
ஏற்படுத்த வேண்டாம்.

கதிரவ வண்மை என்று எழுதினால் கதிரவனின்
வள்ளல் தன்மை என்று பொருளாகும்.
(வண்மை = வள்ளல் தன்மை)
"வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்" 
என்ற கம்பரின் கூற்றை ஓர்க.
*************************************************

தனித்தமிழ் என்பது சரிவராது!
=================================
மனிதர்கள் இன்றி மொழி இல்லை. பெருவழக்கு
என்பதே மொழியின் உயிர்நாடி. நல்ல
உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள் வங்கியின்
பேழைக்குள் (லாக்கர்) இருக்குமேயானால்
பயனில்லை. அவை மக்களால் பேசப்பட
வேண்டும். தமிழ்க் கலைச்சொற்கள் பெருவழக்காய்
மாறுவதற்குத் தடையாய் இருப்போர் தனித்தமிழ்
என்று பிடிவாதம் பிடிப்போரே

சோவியத் ஒன்றியத்தில் பின்தங்கிய மொழிகளை
சொல்வளம் மிக்க மொழிகளாக மாற்றிக் காட்டினார்
லெனின்.கண்மூடித்தனமான மொழிவெறுப்பை
லெனின் அனுமதிக்கவில்லை. எனவே மொழியின்
மீது குறையில்லை. எனினும் மொழியை
மக்களிடம் இருந்து பிரித்துத் தனித்துப் பார்க்கக்
கூடாது என்கிறது மார்க்சியம்.

நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

இது சங்க கால ஒளவையாரின் பாட்டு. இதில்
ஈற்றுச்சொல்லை மொழியே என்று மாற்றிப்
பார்த்தால் என்ன வருமோ அதையே நான்
சொல்கிறேன். மொழி பேசுவோரின் தவறுகள்
மொழியின் மீதுதான் விடியும். இதுவே உண்மை.
எனவே மொழியைக் குறைகூறுதல் என்பது
மொழிபேசுவோர் மீதான கண்டனமே ஆகும்.


அடி உதவுகிற மாதிரி
அண்ணன் தம்பி உதவ மாட்டான்!
-----------------------------------------------------------
மார்க்சிய மொழியில் Third rated philistine என்று
சொல்வார்கள். குட்டி முதலாளித்துவ மூன்றாந்தர
அற்பப்பயல் என்று இதை மொழிபெயர்க்கலாம்.

அப்படி ஒரு அற்பத் தற்குறி மார்க்சிஸ்ட் கட்சியை
(CPM) விமர்சிக்கற சாக்கில், ஒட்டு மொத்த
மார்க்சியத்தையுமே அவதூறு செய்து வருகிறான்.

இத்தகைய இழிநிலையை மார்க்சிஸ்ட் கட்சி
அடைந்ததற்குக் காரணம் கடந்த காலத்தில்
திராவிடப் பிழைப்புவாதக் கட்சிகளுக்கு
வால் பிடித்ததும் பல்லக்குத் தூக்கியதுமே ஆகும்.

மார்க்சியத்தை விட்டு விலகினால், கண்ட நாயும்
குரைக்கும்தான். அதே நேரத்தில், புழுவினும் இழிந்த,
மூன்றாந்தர, குட்டி முதலாளித்துவ அற்ப நாய்
குரைக்குமேயானால், அதை எப்படி எதிர்கொள்வது?

நடப்பது தத்துவார்த்த விவாதம் என்றால்.
மறுப்புகளை  ,CPMன் நிலைபாடுகளை
விளக்கி, அறிக்கைகள் பிரசுரங்கள் வெளியிடலாம்.
ஆனால் நடப்பது தத்துவார்த்த அல்லது அரசியல்
விவாதம் அல்ல. இழிந்த பொய்களும் அவதூறுகளும்
மிகுந்த தைரியத்துடன் CPM மீது வீசப் படுகின்றன.

இதைக் கண்டிப்பது என்பதில் அர்த்தமில்லை.
ஏனெனில் இது தண்டிக்கப்பட வேண்டியது.
(to be punished).

A word for a wise and a rod for a fool  என்ற அடிப்படையில்
கனக்குத் தீர்க்க வேண்டிய விஷயம் இது.

அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி
உதவ மாட்டான் என்பது வெறும் பழமொழி
மட்டுமல்ல, வழிகாட்டும் தத்துவமும் ஆகும்.

எனவே குட்டி முதலாளித்துவ மூன்றாந்தர
மதிகெட்ட அற்பப் பயல்களுக்குப் புரிகிற
மொழியில் பதில் சொல்ல வேண்டும்.
அடித்து உதைத்து ஆறு மாதம் ஆஸ்பத்திரியில்
இருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதை CPM தலைமை செய்யுமா? செய்யாது.
புழுவினும் இழிந்த அருணன் செய்வானா?
மாட்டான். தொழிலாளி வர்க்க குணாம்சம்
உள்ள தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகச்
செய்ய வேண்டும். அது ஒன்றே தீர்வு.
***********************************************     
விஜி, ராஜி, உஷா, ஜானகி ஆகிய சொற்களை மக்கள்
எப்படி உச்சரிக்கிறார்கள்? விசி, ராசி, உசா, சானகி
என்றா? கிரந்தம் தவிர்க்கக் கூடியதா?
தவிர்க்க முடியாததா?
********************************************* 

பழமைவாதப் பார்வையாக உள்ளதே.
தமிழ் தனித்தியங்க கிரந்தம் உதவும்.
கிரந்த மறுப்பு தமிழை வேறு மொழியைச்
சார்ந்து  நிற்க வேண்டியதாக்கி விடும். 
வளர்ச்சி அடைந்த மொழியான ஆங்கிலம் 
பிற எழுத்துக்களைச் சேர்ப்பதில்லை. நல்லது.
தமிழும் அதே போல் நிற்க வேண்டுமெனில்
வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். வளர்ச்சி
அடையாத நிலையில் பிடிவாதம் பிடிக்க இயலாது.  


       
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக