சனி, 14 ஜூலை, 2018

கோள்கள் சூரியனைச் சுற்றி வருவது
கடவுளின் அருளால் அல்ல! கெப்ளரின் விதிகளால்!
பொருள்முதல்வாதிகள் வணங்க வேண்டிய
ஜெர்மன் வானியல் அறிஞர் கெப்ளர்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
ஜோஹன்னஸ் கெப்ளர் (1571-1630) ஜெர்மனியைச்
சேர்ந்த வானியல் கணித நிபுணர். இவரின் ஆசிரியர்
டைக்கோ பிராகி.

கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் விதிகளை கெப்ளர் கண்டுபிடித்தார். இது குறித்து மூன்று விதிகளை
கெப்ளர் கூறியுள்ளார்.

நியூட்டனின் மூன்று இயக்க விதிகளைப் போல
(Newtons laws of motion) கெப்ளரின் விதிகள் இயற்பியலில்
அடிப்படையான முக்கியத்துவம் உடையவை.
இன்றும் பயன்பட்டு வருபவை.

நியூட்டனின் ஈர்ப்புவிசை விதி உருவாக
கெப்ளரின் விதிகள் காரணமாக இருந்தன.

கடவுளின் அருளால்தான் கோள்கள் சூரியனைச்
சுற்றி வருகின்றன என்ற கருத்துமுதல்வாதிகளின்
உளறலுக்கு மரண அடி கொடுத்தவர் கெப்ளர்.
அந்த வகையில் ஒவ்வொரு மெய்யான
பொருள்முதல்வாதிக்கும் கெப்ளரை நினைவு
கூறுவதும், அவரின் விதிகளை மக்களிடம்
கொண்டு செல்வதும் கடமை ஆகும்.
********************************************************

எரோட்டஸ்தீனஸ் என்னும் அலெக்ஸாந்திரிய
விஞ்ஞானி பொது சகாப்தத்திற்கு முந்திய
2ஆம் நூற்ராண்டிலேயே  பூமியின் அளவைக்
கண்டு பிடித்தார். இவர்தான் முதன் முதலில்
கண்டு பிடித்தவர். சூரியனின் நிழல் பூமியில்
விழும் இடங்களை அளந்து, trigonometry  மூலம்
கண்டறிந்தார்.  தனிக்கட்டுரையில் பின்னர்
விரிவாக எழுதுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக