வியாழன், 26 ஜூலை, 2018

யாருக்காக?
---------------------
அதிரடியான தலைப்புகள் தங்களைப்
போன்றோருக்கானவை அல்ல. அவை அறிவியல்
தலைப்பைப் பார்த்த மாத்திரத்திலேயே
கடந்து போவோர்க்கானவை. குட்டிச் சாத்தானைக்
கையாள்வதும் குட்டி முதலாளித்துவத்தைக்
கையாள்வதும் ஒன்றே. இயல்பான வழியில் 
இவ்விரண்டையும் கையாள இயலாது. 

முற்றிலும் உண்மை


வேல்முருகன் பார்வைக்கு!
-----------------------------------------------
தொடர்ந்து இயங்குவது மொழியின் பண்பு.
பின்நிலவுடைமைக் காலத்தின் (post feudal) 
உற்பத்திக்கு ஏற்றவாறு, தமிழ்
வளர்க்கப் படவில்லை. அதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப் படவில்லை. இதன் விளைவாக
இயங்குநிலையில் இருந்து கொண்டிருந்த தமிழ் இயங்காநிலைக்குச் சென்று விட்டது.
மனித முயற்சி இல்லாமல் மொழி தானே வளராது.
அது இயற்கைத் தாவரம் அன்று.

பின்நிலவுடைமைக் காலத்துக்கு ஏற்றவாறு
தமிழை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமே
தமிழ்ச் சமூகத்திடம் இல்லாதபோது, தமிழ்
எங்ஙனம் சமகாலத்தமிழாக இருக்க இயலும்?
எனவே சமகாலத் தேவைகளுக்கு ஈடு
கொடுக்க இயலாமல் தமிழ் மிகுதொலைவு
பின்தங்கி உள்ளது என்பதே உண்மை.

இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள்
இல்லை. இதேநிலை நீடிக்கவே வாய்ப்பு
உள்ளது. இச்சூழலில்  காலத்தின் தேவைக்கு ஈடு
கொடுக்க முடியாமல் தமிழ் பயனற்றுப்
போவது தவிர்க்க இயலாதது. இந்த உண்மையை
துணிந்து நான் கூறுகிறேன்.

பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் இன்று வேறொரு
பதிவில் ஏறத்தாழ என்னுடைய கவலையையே
பகிர்ந்து கொண்டுள்ளார் வேறு சொற்களில்.

மானுட முயற்சியால் (manuel efforts) தமிழைக்
காலத்தின் தேவைக்கேற்ப மாற்றுவது, புதுப்பிப்பது
என்பதற்கு ஆதரவில்லை என்ற உண்மையை
உணர்ந்த மொழியியல் அறிஞர் தெய்வசுந்தரம்
போன்றோர் கணிணியைச் சார்ந்து அதைச்
செய்வதில் ஈடுபட்டு உள்ளனர். அதில் அவர் கண்ட
கசப்பை இப்பதிவில் கூறுகிறார். எங்கு போனாலும்
இடிக்கிறது என்ற நிலையில் என்ன செய்வது?
 

மொத்த சமூகத்தையும் கூறுகிறேன். சுட்டி ஒருவர்
பெயர்கொளா மரபு தமிழ் மரபாகும். சமூகத்தின்
பொருள் உற்பத்தியில் தமிழ் இல்லாமல் போகுமானால்,
தமிழுக்கு எதிர்காலம் இல்லை. தமிழின் இந்த
அவலத்தைச் சுட்டிக்காட்டி ஐநா மன்றம் முன்பே
ஓர் அறிக்கையை  வெளியிட்டு உள்ளது
அதைப்படித்த குமரி அனந்தன், வைரமுத்து
ஆகியோர் தமிழின் கையறுநிலையை வெளிப்படுத்தி
உள்ளனரே. நான் ஒன்றும் புதிதாகக் கூறவில்லை.
குமரி அனந்தன், வைரமுத்து கூறுவதைத்தானே
நானும் கூறுகிறேன்.

தோழர் ரவீந்திரன் அவர்களே,
நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன். தமிழ்நாட்டில்
முதன் முதலாக தொலைக்காட்சி வந்தபோது,
அதற்கு "பட ரேடியோ" என்ற சொல்லைப்
பயன்படுத்தினார் சி பா ஆதித்தனார். ரேடியோ
மட்டுமே மக்களுக்குத் தெரிந்திருந்த நிலையில்,
"ரேடியோவும் கேட்கலாம், படமும் தெரியும்" என்று
மக்களுக்கு தொலைக்காட்சி என்றால் என்ன
என்று உணர்த்தினார். அதன் பிறகே இன்று நாம்
பயன்படுத்தும் தொலைக்காட்சி என்ற சொல்
வந்தது.

ஆதித்தனார் எளிய மக்களின் புரிதலில் இருந்து
தொடங்கினார். அவரின் சொல்லாக்கக் கொள்கை
தலைசிறந்தது. நான் அவரின் கொள்கைகளை
இன்று வரை பின்பற்றி வருகிறேன்.

ஆனால் இன்றுவரை இந்த முயற்சிக்கெல்லாம்
எதிராக இருப்பது தனித்தமிழ் .ஆசாமிகளே.    

புவிச்சேய்மை (apogee), புவியண்மை (perigee) போன்ற
சொற்களை நான் அந்தரத்தில் இருந்து பெறவில்லை.
அல்லது எந்த ஒரு பட்டறையிலும் உருவாக்கவில்லை.

"சேய்மை அண்மையில் உயிர்க்கொரு
துணையெனச் சிறந்த
வாய்மையால் அறம் தூய்மையாம்" என்ற இலக்கியப்
பாடமே புவிச்சேய்மை புவியண்மை என்ற
கலைச்சொற்களாக மாறியது.     




    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக