திங்கள், 30 ஜூலை, 2018

மெதுவாக ஓடும் கடிகாரம்!
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
காலம் என்பது பிரபஞ்சம் முழுவதற்கும்
பொதுவானது அல்ல. அது மாறக் கூடியது.
Time is not constant.

இயங்குகிறபோது காலம் மாறும். அதாவது
உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு நாற்காலியில்
அமர்ந்து இருக்கிறீர்கள். உங்கள் கையில்
ஒரு கடிகாரம் இருக்கிறது. இதை A என்க.

ஒரு விண்கலம் விண்ணில் பறக்கிறது.
அதன் வேகம் ஒளியின் வேகத்தில் பாதி என்க.
அதாவது ஒரு நொடிக்கு ஒன்றரை லட்சம் கிமீ
வேகத்தில் அந்த விண்கலம் பறக்கிறது. அந்த
விண்கலத்தில் ஒரு கடிகாரம் இருக்கிறது.
அதை B என்க.

இரண்டும் ஒரே மாதிரி நேரம் காட்டக்கூடிய
கடிகாரங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது கடிகாரம் A, கடிகாரம் B என்ற இரண்டும்
ஒரே நேரத்தைக் காட்டுமா? காட்டாது.

பூமியில் இருக்கும் கடிகாரம்-Aஐ விட
விண்கலத்தில் உள்ள கடிகாரம்-B மெதுவாக ஓடும்.
அதாவது அதிக வேகத்தில் செல்லச் செல்ல
கடிகாரம் மெதுவாக ஓடும்.

எவ்வளவு மெதுவாக ஓடும்? இரண்டு  கடிகாரமும்
காட்டும் நேரம் எவ்வளவு வேறுபடும்?
இதுதான் கணக்கு. இதைச் செய்ய வேண்டும்.
விடைகள் வரவேற்கப் படுகின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக