புதன், 11 ஜூலை, 2018

பொருள்முதல்வாதிகள் கவனத்திற்கு!
கிரிக்கெட் பந்தின் அலைநீளம் என்ன?
எலக்ட்ரானின் அலைநீளம் என்ன?
இரண்டையும் கண்டு பிடிக்க வேண்டும்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
ஒரு கிரிக்கெட் பந்து என்பது பெரிய பொருள்
(MACRO OBJECT), ஒரு எலக்ட்ரான் என்பது
நுண்பொருள் (MICRO); அதாவது துகள்.
எலக்ட்ரானுக்கு அலைநீளம் உண்டு.
கிரிக்கெட் பந்துக்கு அலைநீளம் உண்டா?

மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காண
இரண்டு கணக்குகளைச் செய்ய வேண்டும்.
கணக்குகள்  என்பவை இயற்பியல்
கோட்பாடுகளைப்  புரிந்து கொள்ள உதவுபவை.

கணக்கு-1
------------------
140 கிராம் நிறையுள்ள ஒரு கிரிக்கெட் பந்து
மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் விக்கட்டை
நோக்கிச் செல்கிறது. அப்பந்தின் அலைநீளம் என்ன?

கணக்கு-2
------------------
நொடிக்கு 7.5x10^6 மீட்டர் வேகத்தில் செல்லும்
ஒரு எலக்ட்ரானின் அலைநீளம் என்ன?

இந்த இரண்டு கணக்குகளையும் சரியாகச்
செய்தால், பருப்பொருளின் அலைப்பண்பு
பற்றியும் குவான்டம் தியரி பற்றியும் உள்ள
ஏகப்பட்ட சந்தேகங்கள் தீர்ந்து போகும்.

வாசகர்களிடம் இருந்து, குறிப்பாக
பொருள்முதல்வாத வாசகர்களிடம் இருந்து
விடைகள் வரவேற்கப் .படுகின்றன.

அறிவியல் கால்குலேட்டரைப்  பயன்படுத்துவது
அனுமதிக்கப் படுகிறது. mass of electron,
value of Planck's constant ஆகியவை கால்குலேட்டரில்
உள்ளன.

கணக்கைச் செய்யாமல் இயற்பியலும் புரியாது;
பொருள்முதல்வாதமும் புரியாது.
**********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக