வியாழன், 5 ஜூலை, 2018

LIFE WITHOUT QUALITY!
-------------------------------------
நாலைந்து ஆண்டாக முகநூலில் இந்த
அறிவியல் கவிதையை வெளியிட்டு வருகிறேன்.
asymptote, torque போன்ற சொற்களும் அவை உணர்த்தும்
பொருளும் பலருக்குத் தெரியாது என்பதும்
உண்மைதான். தெரியாதவற்றைத் தெரிந்து
கொள்ள வேண்டும் அல்லவா?

இந்தக் கவிதை அறிவியலைக் கற்பிக்கும்
ஒரு கவிதை. கற்பித்தலில் இது ஒரு புதிய
முயற்சி; மரபுக்கு அப்பால் உள்ள முயற்சி.
கற்றல், கற்பித்தல், கவித்துவம் ஆகிய மூன்றின்
சேர்க்கையே இந்தக் கவிதை.

இந்தக் கவிதையைப் புறக்கணிக்கிறவர்கள்
அறிவியலின் பயன்களை நுகர்வதற்கு
அருகதை அற்றவர்கள் .இவர்கள். கற்றலுக்கும் கற்பித்தலுக்கும்
எதிரிகள். அறியாமையைப் போற்றும் செக்கு
மாடுகள்.

அறிவியலின் வெளிச்சம் பட்டாலே, இவர்களின்
உடம்பில் தடிப்புகள் ஏற்பட்டு விடும் போலும்!  
Perhaps they lead a life unmindful of its lack of quality.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக