(2) ரோமாபுரி ஒரேநாளில் கட்டப் பட்டதல்ல!
அதே போல GSTயும் மோடி-ஜெட்லியால்
ஒரேநாளில் கொண்டுவரப் பட்டதல்ல!
GST குறித்த மார்க்சியப் பிரகடனம்: பகுதி-2.
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
1) GST என்பது நடப்பில் உள்ள பொருளாதாரக்
கொள்கைக்கு மாற்றாக முன்மொழியப்படும்
புதியதொரு பொருளாதாரக் கொள்கை அல்ல.
அல்லது வணிகம் சார்ந்தோ சந்தை சார்ந்தோ
புதிய கொள்கைகளை முன்மொழிவது அல்ல.
எனவே ஏற்கனவே நடப்பில் உள்ள கொள்கைகள்
அப்படியே நீடிக்கின்றன.

2) GST என்பது மறைமுக வரியே. அதாவது பல்வேறு
மறைமுக வரிகளின் தொகுப்பு. பொருளாதாரக்
கோட்பாடுகளின்படி, மறைமுகவரி என்பது
எப்போதுமே குறைபாடு உடையது.
(An indirect tax is always IMPERFECT). எனவே அதை
அவ்வப்போது முடிந்த அளவுக்கு PERFECTIONஐ
நோக்கிச் செலுத்த வேண்டும் என்பது சமூகத்தில்
எழும் நிர்ப்பந்தமாகும். GSTயின் பிறப்புக்கு
இதுவும் ஒரு காரணம் ஆகும்.

3) ஆயின், GSTதான் என்ன? அது வெறும் சீர்செய்
இயக்கம் (Rectification Exercise). வரி விதிப்பு, வரி வசூல்
ஆகிய முனைகளில் தற்போது நிலவும் பல்வேறு
சீர்கேடுகளை அகற்றி, குறிப்பாக வரி ஏய்ப்பைக்
குறைக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் ஒரு
நடவடிக்கை. ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி,
GST என்பது வரிவிதிப்பு மற்றும் வரிவசூலில்
மேற்கொள்ளப்படும் ஒரு நிர்வாக சீர்திருத்தம்
(Administrative Reform).

4) விதிக்கப்பட்ட வரிகள் மூலம் கிடைக்க வேண்டிய
வரி வருவாய்க்கும் (estimated tax revenue) உண்மையில்
கிடைக்கிற வரிவசூலுக்கும் (actual tax collection)
இடையிலான பெரும் பள்ளத்தை இட்டு நிரப்புவது
GSTயின் நோக்கங்களில் ஒன்று.
வரி வருவாய்க்கும் (estimated tax revenue) உண்மையில்
கிடைக்கிற வரிவசூலுக்கும் (actual tax collection)
இடையிலான பெரும் பள்ளத்தை இட்டு நிரப்புவது
GSTயின் நோக்கங்களில் ஒன்று.
5) 1990களில் நரசிம்மராவ் பிரதமராகவும்
மன்மோகன்சிங் நிதியமைச்சராகவும் பிரணாப்
முகர்ஜி வணிக அமைச்சராகவும் இருந்தபோது
இந்தியாவில் LPG கொள்கைகள் நடைமுறைப்
படுத்தப் பட்டன. WTOவில் இந்தியா உறுப்பினர்
ஆனது. இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த
பாரிய, தீவிரமானகொள்கை மாற்றம் இது
(paradigm shift).

6) இந்தக் கொள்கையைச் செயலாக்கும் பொருட்டு
சாத்தியமான அனைத்துத் துறைகளிலும், புதிய
பொருளாதாரக் கொள்கைகளை உள்வாங்கிய
மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால்
மறைமுக வரிகளைப் பொறுத்தமட்டில், வரிவிதிப்பு
மற்றும் வரிவசூல் முறைகள் பெரிய
மாற்றமின்றி அப்படியே நீடித்தன. தற்போது
GST மூலம் இவற்றில் வடிவமைப்பு மாற்றங்கள்
(STRUCTURAL CHANGES) கொண்டுவரப்பட்டுள்ளன.

7) உலகமயம் என்பதன் பொருள் முதலாளித்துவம்
நாடு, தேசம், அரசு என்ற எல்லைகளைக் கடந்து
ஒன்றிணைவதாகும். உள்நாட்டு முதலாளிக்கும்
அந்நிய முதலாளிக்கும் இருந்த வேற்றுமைகளைக்
களைவதாகும். உள்நாட்டுச் சந்தை என்பது
பெரிதும் உள்நாட்டு முதலாளிகளுக்கானது என்ற
கட்டுப்பாடுகள் தகர்த்தெறியப்பட்டு, எந்த ஒரு
உள்நாட்டுச் சந்தையிலும் அந்நிய முதலாளிகளுக்கு
இடமளிப்பதாகும். சுருங்கக் கூறின், உலகமயம்
சந்தையை மறுபங்கீடு செய்வதாகும்.

8) உலகமயத்தைத் தொடர்ந்து இந்தியாவின்,
நாடு முழுமைக்குமான பொருளாதார, வணிக,
சந்தைக் கொள்கைகள் மாறின. சட்டங்கள்
திருத்தப்பட்டன. இதற்கு இசைவாக நாட்டின்
வெளியுறவுக் கொள்கைகளும் மாறின. இந்தியாவின்
அரசமைப்புச் சட்டப்படி, இந்த மாற்றங்களை
மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசுக்கே
உண்டு. மாநில அரசுகளுக்கு இல்லை.

9) எனவே மத்திய அரசில் அதிகாரம் குவிவதும்,
அதிகாரம் மென்மேலும் மையப் படுத்தப்
படுவதும் நிகழ்கிறது. அதாவது உலகமயம்
மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பெருமளவில்
பறித்து விடுகிறது. அதாவது, உலகமய சகாப்தத்தில்
(era of globalisation) மாநில சுயாட்சி என்பதெல்லாம்
வெற்றுச் சொல்லாடலே. எனவே GSTயில் மாநில
அரசுகளின்அதிகாரம் பறிக்கப் படுகிறது
என்பதன் பொருள் உலகமயம் அதைப் பறித்து
விட்டது என்பதுதான்.

10) இதற்கு மாறாக, யாரோ ஒரு பாசிச உளவியல்
கொண்ட ஒரு ஆட்சியாளர் மாநில அரசுகளின்
அதிகாரத்தைப் பறித்து விட்டார் என்று பார்ப்பது
அறியாமை. இது உலகமயத்தின் விளைவுகளைப்
பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பதன்
அடையாளம் ஆகும்.
கொண்ட ஒரு ஆட்சியாளர் மாநில அரசுகளின்
அதிகாரத்தைப் பறித்து விட்டார் என்று பார்ப்பது
அறியாமை. இது உலகமயத்தின் விளைவுகளைப்
பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பதன்
அடையாளம் ஆகும்.
11) GST என்பது ஒரு கருவி (tool). என்ன வேலை செய்ய
வேண்டுமோ அதற்கேற்ற கருவியை ஒருவன்
கைக்கொள்வான்.செய்ய வேண்டிய வேலையை
கருவி தீர்மானிப்பதில்லை. அதுபோல, GSTயானது
எந்தக் கொள்கையையும் தீர்மானிப்பதில்லை.
மாறாக, ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட
கொள்கைளைச் செயலாக்கம் செய்யப் பயன்படும்
கருவியே GST. அவ்வளவே.

12) நடப்பில் உள்ள LPG பொருளாதாரக்
கொள்கைகள் இயற்கையாகவும் தர்க்கரீதியாகவும்
GST என்ற கருவியின் தேவையை உணர்கின்றன.
அதனால் GST பிறந்தது.
கொள்கைகள் இயற்கையாகவும் தர்க்கரீதியாகவும்
GST என்ற கருவியின் தேவையை உணர்கின்றன.
அதனால் GST பிறந்தது.
13) அமெரிக்க ஏகாதிபத்தியமோ உலக வங்கியோ
கட்டளை இட்டதால்தான் இந்தியாவில் GST
கொண்டுவரப் படுகிறது என்பதெல்லாம்
பொருளாதாரம் அறியாதோரின் கூற்று.
உலகவங்கி கட்டளை இடாவிட்டாலும்
GST வரத்தான் செய்யும். ஏனெனில் இது
இந்தியப் பொருளாதாரத்தின் தேவை.
இந்திய ஆளும் வர்க்கம் தன் இயல்பான தேவையில் இருந்து GSTயைக் கொண்டு வருகிறது.
14) மூலதனம் உலகமயம் ஆகி விட்டது. முதலாளித்துவமும் உலகமயம் ஆகிவிட்டது.
எனவே உலக மூலதனத்தின் கட்டளைகளை
ஒவ்வொரு முதலாளித்துவ நாடும் பின்பற்றுவது
இயல்பானதே.பின்பற்றியே ஆக வேண்டும். இதற்காக அருண் ஜேட்லியோ
சிதம்பரமோ தும்மல் போட்டாலும் உலக வங்கியின் கட்டளைக்கு இணங்கவே தும்மல் போடுகிறார்கள்
என்று விளக்கம் அளிப்பது அறிவுடைமை
ஆகாது.
15) ரோமாபுரி ஒருநாளில் கட்டப் பட்டதல்ல.
(Rome was not built in a day). அதே போல GSTயும்
மோடி-ஜெட்லியின் படைப்பு அல்ல. அது
ஒட்டு மொத்த இந்திய முதலாளித்துவத்தின்
படைப்பு. அது இந்திய ஆளும் வர்க்கத்தின்
கூட்டுப் படைப்பு.
16) உண்மையில் GSTக்கு அடிக்கல் நாட்டியவர்
மன்மோகனே. சிதம்பரம் அதைப் பரவலாக்கினார்.
இந்தியாவில் முதன் முதலில் GSTயை அறிமுகப்
படுத்தியவர் மன்மோகன் சிங். 1994 ஜூலையில்
மன்மோகன் நிதியமைச்சராக இருந்தபோது,
இந்தியாவில் முதன் முதலில் GSTயைக் கொண்டு
வந்து மொத்தமே மூன்று சேவைகளுக்கு 5 சதம்
சேவை வரி விதித்தார்.
17) தொலைபேசி சேவை (Telephone Bills),
ஆயுள் இன்சூரன்ஸ் அல்லாத பிற இன்சூரன்ஸ்
(Non life insurance) மற்றும் வரித்தரகு (tax brokerage)
ஆகிய மூன்றுமே அவை.
18) மொத்த GDPயில் (GDP = Gross Domestic Product)
சேவைத்துறை 40 சதம் பங்களிப்பதால், சேவை
வரியைக் கொண்டு வருவதாக மன்மோகன்
.
19) ஆக, GST என்பது 1994ல் தொடங்கி, 2016ல்தான்
நிறைவடைகிறது என்பதை அறிய வேண்டும்.
குறைந்தது 22 ஆண்டுகளின் படிப்படியான
முயற்சியில்தான் இன்று GST நடைமுறைக்கு
வந்துள்ளது. இதைத்தான் ரோமாபுரி ஒரு
நாளில் கட்டப் பட்டதல்ல என்று கூறினோம்.
20) இந்தியாவின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ்,
பாஜக, இடதுசாரிகள் அனைவரும் ஒரே குரலில்
GSTயை வரவேற்றனர்; ஆதரித்தனர். மேலும்
இந்தியாவின் அனைத்து மாநிலக் கட்சிகளும்
(முலாயம் கட்சி, மாயாவதி கட்சி, திமுக, அதிமுக
முதலியன) GSTயை வரவேற்றன.

21) இந்தியாவில் எந்த ஒரு மாநிலக் கட்சிக்கும்
சொந்தமாகப் பொருளாதாரக் கொள்கை கிடையாது.
மத்திய ஆளும் கட்சிகளின் பொருளாதாரக்
கொள்கைகளை அவை அப்படியே ஏற்றுக் கொள்ளும்.
எனவேதான் GST அனைத்துக் கட்சிகளின் ஏகோபித்த
ஆதரவைப் பெற்றது.
சொந்தமாகப் பொருளாதாரக் கொள்கை கிடையாது.
மத்திய ஆளும் கட்சிகளின் பொருளாதாரக்
கொள்கைகளை அவை அப்படியே ஏற்றுக் கொள்ளும்.
எனவேதான் GST அனைத்துக் கட்சிகளின் ஏகோபித்த
ஆதரவைப் பெற்றது.
22) இக்கட்டுரை கோட்பாட்டு ரீதியாக GSTயை
அணுகுகிறது; GST குறித்து ஒருங்கிணைந்த
முழுமையான கோட்பாட்டுப் பார்வையை
முன்வைக்கிறது. 130 கோடி மக்களைக் கொண்ட
மொத்த இந்தியாவிலும் இந்த முழுமையான
பார்வையை எம்மைத் தவிர வேறு யாரும்
முன்வைக்கவில்லை என்பதையும் இங்கு
பதிவு செய்ய விரும்புகிறோம்.
அணுகுகிறது; GST குறித்து ஒருங்கிணைந்த
முழுமையான கோட்பாட்டுப் பார்வையை
முன்வைக்கிறது. 130 கோடி மக்களைக் கொண்ட
மொத்த இந்தியாவிலும் இந்த முழுமையான
பார்வையை எம்மைத் தவிர வேறு யாரும்
முன்வைக்கவில்லை என்பதையும் இங்கு
பதிவு செய்ய விரும்புகிறோம்.
23) இதற்கு மாறாக, பின்நவீனத்துவப் பார்வையில்
அமைந்த GST குறித்த கருத்துக்கள் பரவலாக
வருகின்றன. GSTயின் ஆயிரம் ஷரத்துகளில்
ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு, பிறவற்றுடன்
தொடர்பற்றவாறு பிரித்துப் பிரித்து
(COMPARTMENTALISATION) அணுகுகிறது பின்நவீனத்துவம்.

24) ஆக மொத்தத்தில், GST பற்றிய விவாதம் என்றாலே, Uniform Taxation, Differential Taxation என்னும்
இரண்டு விதமான வரி விதிப்பு முறைகளைப் பற்றி
விவாதித்தாக வேண்டும். இவற்றைப்
பற்றி விவாதிக்காமல், வேறு எதை
எதையோ விவாதிப்பது GST பற்றிய விவாதம் ஆகாது.
இரண்டு விதமான வரி விதிப்பு முறைகளைப் பற்றி
விவாதித்தாக வேண்டும். இவற்றைப்
பற்றி விவாதிக்காமல், வேறு எதை
எதையோ விவாதிப்பது GST பற்றிய விவாதம் ஆகாது.
25) அருண் ஜேட்லியின் GST என்பது
Amalgamation of taxes plus Differential taxation. .
உண்மையில் இது GSTயே அல்ல. .
Amalgamation of taxes plus Differential taxation. .
உண்மையில் இது GSTயே அல்ல. .
**************************************************************
வாசகர்கள் புரிந்து கொள்ள வசதியாக....
------------------------------------------------------------------------
தற்போது நடப்பில் உள்ள GST வரி விகிதங்கள்
மற்றும் எந்தெந்தப் பொருட்கள் மற்றும் சேவைகள்
எந்தெந்த வரிப்பிரிவில் (TAX SLAB) உள்ளன
என்பதை விளக்கும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ்
ஆங்கில ஏட்டின் கட்டுரை (19 ஜனவரி 2018)
இங்கு தரப்பட்டு உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியமோ உலக வங்கியோ
கட்டளை இட்டதால்தான் இந்தியாவில் GST
கொண்டுவரப் படுகிறது என்பதெல்லாம்
பொருளாதாரம் அறியாதோரின் கூற்று.
உலகவங்கி கட்டளை இடாவிட்டாலும்
GST வரத்தான் செய்யும். ஏனெனில் இது
இந்தியப் பொருளாதாரத்தின் தேவை.
இந்திய ஆளும் வர்க்கம் தன் இயல்பான தேவையில் இருந்து GSTயைக் கொண்டு வருகிறது.
மூலதனம் உலகமயம் ஆகி விட்டது. முதலாளித்துவமும் உலகமயம் ஆகிவிட்டது.
எனவே உலக மூலதனத்தின் கட்டளைகளை
ஒவ்வொரு முதலாளித்துவ நாடும் பின்பற்றுவது
இயல்பானதே.பின்பற்றியே ஆக வேண்டும். இதற்காக அருண் ஜேட்லியோ
சிதம்பரமோ தும்மல் போட்டாலும் உலக வங்கியின் கட்டளைக்கு இணங்கவே தும்மல் போடுகிறார்கள்
என்று விளக்கம் அளிப்பது அறிவுடைமை
ஆகாது.
ரோமாபுரி ஒருநாளில் கட்டப் பட்டதல்ல.
(Rome was not built in a day). அதே போல GSTயும்
மோடி-ஜெட்லியின் படைப்பு அல்ல. அது
ஒட்டு மொத்த இந்திய முதலாளித்துவத்தின்
படைப்பு. அது இந்திய ஆளும் வர்க்கத்தின்
கூட்டுப் படைப்பு.
உண்மையில் GSTக்கு அடிக்கல் நாட்டியவர்
மன்மோகனே. சிதம்பரம் அதைப் பரவலாக்கினார்.
இந்தியாவில் முதன் முதலில் GSTயை அறிமுகப்
படுத்தியவர் மன்மோகன் சிங். 1994 ஜூலையில்
மன்மோகன் நிதியமைச்சராக இருந்தபோது,
இந்தியாவில் முதன் முதலில் GSTயைக் கொண்டு
வந்து மொத்தமே மூன்று சேவைகளுக்கு 5 சதம்
சேவை வரி விதித்தார்.
தொலைபேசி சேவை (Telephone Bills),
ஆயுள் இன்சூரன்ஸ் அல்லாத பிற இன்சூரன்ஸ்
(Non life insurance) மற்றும் வரித்தரகு (tax brokerage)
ஆகிய மூன்றுமே அவை.
மொத்த GDPயில் (GDP = Gross Domestic Product)
சேவைத்துறை 40 சதம் பங்களிப்பதால், சேவை
வரியைக் கொண்டு வருவதாக மன்மோகன்
.
ஆக, GST என்பது 1994ல் தொடங்கி, 2016ல்தான்
நிறைவடைகிறது என்பதை அறிய வேண்டும்.
குறைந்தது 22 ஆண்டுகளின் படிப்படியான
முயற்சியில்தான் இன்று GST நடைமுறைக்கு
வந்துள்ளது. இதைத்தான் ரோமாபுரி ஒரு
நாளில் கட்டப் பட்டதல்ல என்று கூறினோம்.
GST குறித்த முழுநிறைவான மார்க்சியப்
பார்வை இது மட்டுமே. இக்கட்டுரையின்
கருத்துக்களுடன் முரண்படும் எதுவும்
மார்க்சியம் ஆகாது.
பின்குறிப்பு
----------------------------
இக்கட்டுரை மூன்று ஆண்டுக்கு 2015ல்
இதே நாளில் எழுதப்பட்டது. இது மீள்பதிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக