திங்கள், 23 ஜூலை, 2018

கட்சி கட்டுதலின் லெனினியக் கோட்பாடுகள்!
லெனினும் மென்ஷ்விக்குகளும்!
VANGUARD partyயா?Broad partyயா?
---------------------------------------------------------
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள்
லெனினியக் கோட்பாடுகளைப்  பின்பற்றியே
(Leninist concept of party building) கட்டப்பட்டு உள்ளன.
கட்டப்படவும் வேண்டும். லெனினியக்
கோட்பாட்டின்படி, கம்யூனிஸ்ட் கட்சி என்பது
பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை
(The vanguard of the proletariat) ஆகும்.

இங்கு லெனின் பயன்படுத்திய vanguard என்ற சொல்
பெரும் அரசியல் முக்கியத்துவம் உடையதாகும்.
vanguard என்பது class conscious vanguard fighters of the working
class என்று பொருள்படும்.

மென்ஷ்விக்குகள் கூறிய Broad Marxist party எனப்படும்
பரந்துபட்ட மார்க்சிஸ்ட் கட்சி என்பதை மறுத்து,
Vanguard party என்பதை லெனின் முன்வைத்தார்.

ரஷ்யப் புரட்சிக்கு முன், மென்ஷ்விக்குகள் கூறிய
BROAD PARTYயா அல்லது லெனின் கூறிய
VANGUARD PARTYயா என்று மாபெரும் விவாதமே
பட்டிமன்றம் போல ரஷ்யாவில் நடந்தது.

இறுதியில் ரஷ்யப் புரட்சியின் வெற்றியின்
மூலமாக, லெனின் கூறிய VANGUARD PARTY என்ற
கோட்பாடே வெற்றி பெற்றது. இது ரஷ்யக்
கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு. 
----------------------------------------------------------------------
பின்குறிப்பு: வாசகர்கள் ஆங்கிலச் சொற்களின்
பயன்பாட்டுக்கு மன்னிக்கவும்.
******************************************************
MASS Party, CADRE Party  என்ற சொற்கள் பற்றி மார்க்சியம்
கற்றவர்கள் அறிவார்கள். mass party = வெகுஜனக் கட்சி.
cadre party = முன்னணியினரின் கட்சி. கம்யூனிஸ்ட்
காட்சிகள் உலகெங்கும் முன்னணியினரின்
கட்சியாகவே அதாவது cadre partyயாகவே கட்டப்படும்.
இது லெனினிய போதனை.

திமுக ஒரு வெகுஜனக் கட்சி.  அதிமுக ஒரு
வெகுஜனக் கட்சி. ஆனால் RSS ஒரு வெகுஜன
அமைப்பு அல்ல. அது கேடர்களைக் கொண்டு
கட்டப் படுவதாகும். பாஜக ஒரு வெகுஜனக் கட்சி.

மென்ஷ்விக்குகள் என்ன கூறினார்? கம்யூனிஸ்ட்
கட்சியை ஒரு வெகுஜனக் கட்சியாகக் கட்ட
வேண்டும் என்று கூறினார். லெனின் இதை
மறுத்தார். CADRE PARTYயாகக் கட்ட வேண்டும்
என்றார்.இதுதான் கட்சி கட்டுதலின்
லெனினியக் கோட்பாடு.


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக