வெள்ளி, 27 ஜூலை, 2018

தமிழ் செத்துக் கொண்டு இருக்கிறது!
தமிழ் வாழ வேண்டுமானால்,
குட்டி முதலாளித்துவம் சாக வேண்டும்!
குவான்டம் இயற்பியல் குறித்து தமிழில்
ஒரு மயிரும் இல்லை!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
1) தமிழ் வாழ வேண்டும் என்றால். சமூகத்தின்
உற்பத்தியில் தமிழ் இடம் பெற வேண்டும்.

2) உற்பத்தியில் இடம் பெறுவது என்றால் என்ன
என்று அறியாமல் இக்கட்டுரையின் கருத்தைப்
புரிந்து கொள்ள இயலாது.

3) சமூகத்தின் சமகால உற்பத்தியில் தமிழ் இல்லை.
பல்லாண்டு காலமாக உற்பத்தியோடு தொடர்பற்ற
நிலையில்தான் தமிழ் உள்ளது.

4) இந்த நிலை நீடித்தால் தமிழ் செத்து விடும்.

5) எனவே தமிழைக் காலத்துக்கு ஏற்றவாறு
புதுப்பித்து, தமிழுக்குப் புதிய இலக்கணம் சமைத்து,
அதை சமகாலத் தமிழாக மாற்ற வேண்டும்.

6) இந்த முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு
தமிழ்நாட்டில் இருக்கிறது. எதிர்ப்பவர்களில்
பெரும்பாலோர் தமிழர்கள்; மூடத்தமிழர்கள்.

7) எதிர்ப்பவர்கள் அனைவரும் குட்டி முதலாளித்துவ
வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். வேறு எந்த
வர்க்கத்திலும் எந்த  எதிர்ப்பும் இல்லை.

8) அ) அறிவியல் அறியாதோர்
ஆ) மார்க்சியம் அறியாதோர்
இ) ஆங்கிலம் அறியாதோர்
என்ற மூவகையினர் தமிழைப் புதுப்பிக்கும்
முயற்சிக்கு எதிராக இருக்கின்றனர்.

9) ஆங்கிலம் வெறும் மொழிதானே! மொழி என்பது
அறிவாகுமா? என்ற புளித்து நுரைத்துப்போன
கேள்வியுடன் பலரும் கைகளில் கம்புடன்
வரக்கூடும்.

10) ஒரு பிரெஞ்சுக்காரனைப் பொறுத்தமட்டில்,
ஆங்கிலம் அவனுக்கு மயிருக்குச் சமம்.
அறிவைப் பெற அவன் ஆங்கிலம் கற்க வேண்டிய
தேவை இல்லை. அவனுடைய பிரெஞ்சு மொழி
தனித்தியங்க வல்லது. உலகின் நவீன அறிவுச்
செல்வங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டது.

11) ஜெர்மன் மொழி பேசும் ஒருவனைப் பொறுத்த
மட்டில், ஆங்கிலம் அவனுக்கு உதிர்ந்த மயிருக்குச்
சமம். ஆங்கிலத்தில் இருந்து அவன் பெற வேண்டியது
ஒரு மயிரும் இல்லை. எனவே அவன் ஆங்கிலத்தைப்
புறக்கணிப்பான். ஆங்கிலத்தின் மேன்மை பற்றி
எவன் பேசினாலும் அவனுடைய நாக்கில்
சூடு போடுவான் ஜெர்மன் மொழி பேசுபவன்.

12) ஜெர்மன், பிரெஞ்சு மட்டுமல்ல, ஏனைய
ஐரோப்பிய மொழிகள் அனைத்துக்குமே
ஆங்கிலம் தேவையில்லை. அவை ஆங்கிலத்தைச்
சாராமல் தனித்து இயங்க வல்லவை. சிறந்த
உதாரணம் ரஷ்ய மொழி.

13) ஆனால் தமிழின் நிலை அப்படி அல்ல. தமிழால் 
தனித்து இயங்க இயலாது. உலகின் நவீன
அறிவியல் செல்வங்கள் எதுவும் தமிழில் இல்லை.
பிற மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்
படவும் இல்லை. மொழிபெயர்ப்புக்குப்
பெருந்தடையாக முன் சொன்ன குட்டி
முதலாளித்துவம் இருக்கிறது.

14) நவீன அறிவியலின் ஒரு பகுதியான குவான்டம்
இயற்பியல் குறித்து ஜெர்மன் மொழியில் ஒரு லட்சம்
நூல்கள் இருக்கின்றன. பிரெஞ்சில் ஒரு லட்சம்
நூல்கள் இருக்கின்றன.ரஷ்ய மொழியில் ஒரு
லட்சம் நூல்கள் இருக்கின்றன. தமிழில் எத்தனை
நூல்கள் இருக்கின்றன?

15) தனித்தமிழ் என்ற முகமூடிக்குள்  தங்களின்
தமிழ் எதிர்ப்பைத் தந்திரமாக மறைத்துக்
கொண்டிருக்கும்  தமிழ்ப் பகைவர்களே
இதற்கு உங்கள் பதில் என்ன?

16) பின்தங்கிய மொழிகளை வளர்ச்சி அடையச்
செய்த லெனினும் ஸ்டாலினும் அம்மொழிகளுக்கு
தக்க அறிஞர்களைக் கொண்டு புதிய இலக்கணம்
செய்வித்தனர். நன்னூலுக்குப் பிறகு தமிழுக்கு
வேறு இலக்கணமே இல்லை.

17) யாம் சமைக்க இருக்க இருக்கும் புத்திலக்கணம்
எழுத்து சொல் பொருள் யாப்பு அணி இயக்கம் என்னும்
ஆறு இலக்கணங்களைக் கொண்டிருக்கும்.

18) அத்துச் சாரியை அறுத்து எறியப்படும். இன்று
வழுவாகக் கருதப்படும் பல வழுவமைதியாக
ஏற்கப்படும். (அனைத்தும் அல்ல) ஒரு, ஓர் குறித்த
விதிகள் மாற்றி அமைக்கப்படும்.  பிறமொழிச்
சொற்களைத் தமிழில் ஏற்பது குறித்த புதிய விதிகள்
சமைக்கப்படும். சுருங்கக் கூறின், காலத்துக்கு
ஒவ்வாத பலவும் தீயிட்டுப் பொசுக்கப்படும்.

19) இது அனைத்தும் எப்போது நடைமுறைக்கு வரும்?
நடைமுறை சாத்தியமானதுதானா மாற்றத்துக்கான
இப்புதிய முன்மொழிபுகள்?

20) தற்போது உள்ள குட்டி முதலாளித்துவத்
தற்குறிகளை அடக்கி ஒடுக்காமல் இதற்கு
வாய்ப்பே இல்லை. குட்டி முதலாளித்துவத்தை
ஓடுக்கினால் தமிழ் வாழும்; இல்லையேல் செத்துச்
சுண்ணாம்பாகப் போகும்.
*****************************************************
பின்குறிப்பு: கிரந்தத்தை எதிர்ப்பவன் தமிழை
அழிக்க நினைக்கிறான்.

 மார்க்சிஸ்டுகளைத் தவிர வேறு எவருக்கும்
மொழி குறித்த அறிவியல் புரிதல் கிடையாது.
எனவே மார்க்சிஸ்டுகளைத் தவிர வேறு எவரும்
மொழி குறித்து பேசக் கூடாது.

தமிழுக்குப் புதிய இலக்கணம் சமைக்கப்
போகிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.
புத்திலக்கணத்தில் ஆறு கூறுகள் இருக்கும்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, இயக்கம்
என்று ஆறு இலக்கங்களைக் கொண்டிருக்கும்
எமது புத்திலக்கணம். 


அவை அரிச்சுவடி அம்சங்கள். அவற்றால் பெரிய
பயன் எதுவும் இல்லை. மேலும் அவர் ஒரு பழமைவாதி.
அவருக்கு மார்க்சியக் கண்ணோட்டம் அறவே
கிடையாது. எனவே அவற்றால் பயன் எதுவும் இல்லை.

ஒரு ஓர் என்பனவற்றை உயிர் உயிர்மெய்
பாகுபாடின்றி எவ்விடத்தும் பயன்படுத்தலாம்.
இது எமது புத்திலக்கணத்தில் வரும்.

அருகில், சுவரில் என்ற பொருளில் அருகாமை, சுவற்றில்
என்று எழுதுவோருக்கு ஆறுமாதக் கடுங்காவல்
தண்டனை விதிக்க யாம் விரும்புகிறோம்.  

பிசிக்குசு என்று எழுத வேண்டும் என்கிறான்
கிரந்த எதிர்ப்பாளன். பிசிக்ஸ் என்பது கூடாதாம்.

தலைச் சுற்றல், கிறுகிறுப்பு என்று டாக்டரிடம்
போகிறோம். டாக்டர் stamla beta என்று ஒரு மாத்திரையை
எழுதுகிறார் டாக்டர். என்ன இந்த stamla beta?
இது ஏன் தமிழில் இல்லை?

இந்த stamla beta மருந்தைத் தயாரிக்கும் ஆலை
சென்னை பெருங்குடியில் உள்ளது (என்று வைத்துக்
கொள்வோம்). இந்த மருந்துத் தயாரிப்பில்,
அதற்கான சூத்திரம், செய்முறை இப்படி ஏதாவது
தமிழில் உள்ளதா?   ஏன் இல்லை? உற்பத்தியில்
தமிழ் இல்லை என்பதன் பொருள் இதுதான்.
   

திருநெல்வேலி தாழையூத்தில் சிமெண்டு ஆலை
உள்ளது. இங்கு டன் டன்னாக சிமென்டு
தயாரிக்கப் படுகிறது. சிமெண்டு தயாரிக்கும்
சூத்திரம்,செய்முறை தமிழில் உள்ளதா?
தூத்துக்குடி ஸ்பிக் உர ஆலையில் தமிழ்
எங்காவது பயன்படுகிறதா? கக்கூசில் கூட
GENTS, LADIES என்றுதானே எழுதப் பட்டுள்ளது!
உற்பத்தியில் தமிழ் இல்லை என்பதன் பொருள் இதுதான்.

ஐரோப்பிய மொழிகளில் பொதுத்தன்மை
நிறையவே உண்டு. எல்லா மொழிகளிலும்
தவறாமல் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள் உண்டு.
எனவே பெரும்பாலும் ஒரு மொழியில் உள்ள
சொல்லை, வேறொரு மொழியில் உச்சரிப்பு
குன்றாமல் எழுத இயலும். ஏன் இந்திய
மொழிகளிலும் இது சாத்தியம். தமிழில் மட்டும்
சாத்தியம் இல்லை. கிரந்த எதிர்ப்பு என்பது
பழமைவாதம். தமிழை அழிக்கும் நோக்கம்
உடையது.


"கட்டுமரம்" என்ற தமிழ்ச்சொல்லை ஆங்கிலம்
எடுத்துக் கொண்டிருக்கிறது. மிளகுத் தண்ணீர்
என்ற சொல்லை (அதாவது மிளகு ரசத்தை),
குரு என்ற சொல்லை (Guru = teacher) ஆங்கிலம்
எடுத்துக் கொண்டுள்ளது.
 
Physics = பிசிக்குசு
ஸ்டாலின் = இசுடாலின்
ஸ்டான்லி மருத்துவமனை = இசுடான்லி மருத்துவமனை
குஷ்பு = குசுப்பு
VIJI = விசி
Raji = ராசி
காரல் மார்க்ஸ் = காரல் மார்க்குசு
இப்படி எழுதுவது கோமாளித்தனம்.   

ஜெர்மனியும் ஆங்கிலமும்!
----------------------------------------------
பின்வரும் சொற்கள் இரண்டு மொழியிலும்
கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளன.
English ...................German
------------------------------------
1. Physics ..................Physik
2. Mathematics ...........Mathematik
3. University .............Universitaten
4. Chemistry...............Chemie
5. and .........................und.

இவை சில உதாரணங்களே. ஐரோப்பிய
மொழிகளுக்கு இடையிலான பொதுத்தன்மை
பற்றி என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
இங்கு பாருங்கள்: ஜெர்மனி ஆங்கிலம் இரண்டு
மொழிகளுக்கு இடையில் மேற்குறித்த
5 சொற்கள் எந்த அளவு ஒன்றுக்கொன்று
நெருக்கமாக உள்ளன என்பதைக் கவனிக்கவும்.
ஜெர்மன்காரனுக்கு கிரந்தம் தேவையில்லை.
தமிழ் மொழிக்கு கிரந்தம் தேவை.

     

கிரந்த எதிர்ப்பாளர்கள் கிணற்றுத் தவளைகள்.
அவர்கள் குண்டுச் சட்டியில் குதிரை
ஓட்டுபவர்கள். வெளியுலகம் எப்படி இருக்கிறது
என்று அவர்களுக்குத் தெரியாது. பிற மொழிகள்
பற்றி எதுவுமே அறியாதவர்கள் கிரந்த
எதிர்ப்பாளர்கள். சுருங்கக் கூறின், கிரந்த
எதிர்ப்பு தற்குறித்தனத்தில் இருந்து பிறக்கிறது.
(ஒரு சில விதிவிலக்குகள் தவிர)

ஸ்பானிஷ் (spanish) என்று ஒரு மொழி. இது பிரபலமான
மொழி. பெருங்கூட்டத்தால் பேசப் படும் மொழி.
இதற்கும் ஆங்கிலத்துக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.
நிறையச் சொற்கள் இரு மொழிகளிலும்
இருக்கும். காரணம் இரண்டு மொழிகளும்
லத்தீன் வேர்ச் சொற்களை அதிகம் கொண்டவை.
எனவே பிசிக்குசு என்று எழுத வேண்டிய அசிங்கம்
ஸ்பானிஷில் இல்லை.

சென்னைவாசிகள் பிர்லா கோளரங்கம் சென்று
முழு சந்திர கிரகணம் பாருங்கள். சக்தி மிக்க
தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்.

சந்திர கிரகணம் ஜூலை 27, 2018.
சென்னையில் நன்கு தெரியும்!
---------------------------------------------------------
1) கிரகணம் என்றால் மறைப்பு என்று பொருள்.
அதாவது மறைக்கப்படுத்தல் என்று பொருள்.

2) சூரியன், பூமி, சந்திரன் இந்த மூன்றும்
கிரகணத்துடன் தொடர்பு உடையவை.

3) கிரகணம் என்றாலே, சூரியன்தான் எப்போதும்
மறைக்கப்படும். ஏனெனில் சூரியனுக்கு மட்டும்தான்
சுய ஒளி உண்டு. Source of light எதுவோ அதைத்தானே
மறைக்க முடியும்!

4) சந்திர கிரகணம் என்றால் சூரியன் மறைக்கப்
பட்டு சந்திரன் இருட்டாகி விடுவது என்று பொருள்.

5) சூரியனை மறைப்பது யார்? பூமி மறைக்கிறது.

7) பூமி மறைப்பதால், சந்திரனுக்குக் கிடைக்க
வேண்டிய சூரிய வெளிச்சம் கிடைக்காமல்
போய் விடுகிறது. இதனால் சந்திரன் இருட்டாகி
விடுகிறது. இதுதான் சந்திர கிரகணம்.
*******************************************************


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக