புதன், 25 ஜூலை, 2018

சீட்டுக்கட்டு ராணி!
----------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
நன்கு கலைக்கப்பட்ட 52 சீட்டுகள் கொண்ட
ஒரு சீட்டுக் கட்டில் இருந்து, ஒரே ஒரு சீட்டு
உருவப் படுகிறது. உருவப்படும் சீட்டு
சிவப்புச் சீட்டாகவோ அல்லது ராணி
சீட்டாகவோ இருப்பதற்கான வாய்ப்பு என்ன? 

 மனிதகுல வரலாற்றின் மிக எளிய கேள்வி!
விடைகள் வரவேற்கப் படுகின்றன.
******************************************

சரியான விடையும் விளக்கமும்!
----------------------------------------------------------
விடை: 7/13

விளக்கம்:
===========
சிவப்பு சீட்டு= 26 ( ஹாட்டின் 13, டயமண்ட் 13)
ராணி சீட்டு=4
மொத்தம் =30
இதில் சிவப்பு ராணி சீட்டுகள் 2ஐ கழித்தால், மீதி= 28.
வாய்ப்பு = 28/52 =7/13.
-----------------------------------------------------------

எவ்வளவு நேரம் தாமதாகத் தெரியும்?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பந்தயம்
நடைபெறுகிறது. இதை ஒரு தொலைக்காட்சி
செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்புகிறது.
இந்த ஒளிபரப்பின் நிகழ்வுகள் அனைத்தும் அவை
நடைபெறும் அதே நேரத்தில் (same instant of time) தெரியாது.
மிக மிக நுட்பமான தாமதத்திற்குப் பிறகே தெரியும்.
இது ஏன்? எவ்வளவு தாமதம் ஆகும்?

குறிப்பு: Geostationary satalite இங்கு கூறப் படுகிறது.

விடைகளும் விளக்கமும் வரவேற்கப் படுகின்றன.
************************************************************ 

மொத்த விளக்கமும் ஆங்கிலத்தில் அமைந்து
விட்டது.சரி. இதையே தமிழில் எழுத்துவதானால்,
இதற்கு ஆனா நேரத்தை விட 10 மடங்கு அதிக
நேரம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக