ஞாயிறு, 15 ஜூலை, 2018

தமிழ் மீடியத்தில் படித்துத் தேறிய
துப்புரவுத் தொழிலாளி மகனின்
MBBS படிப்புச் செலவு!
எல் ஐ சி தொழிற்சங்கம் ஏற்றது!
----------------------------------------------------------
திருநெல்வேலியைச் சேர்ந்த துப்புரவுத்
தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக்
கல்லூரியில் MBBS இடம் கிடைத்து உள்ளது.
அந்தக் குடும்பத்தால் இந்தச் செலவை
ஏற்க  முடியாது. ஏற்கனவே பையனின்
தாய் தனது சொற்ப நகைகளையும் அடகு
வைத்துத்தான் மகனைப் படிக்க வைத்தார்.

இந்நிலையில் LIC தொழிற்சங்கமான AIIEA சங்கம்
(AIIEA = All India Insurance Employees Association)
அம்மாணவனின் படிப்புச் செலவை ஏற்றது.

தமிழக அரசியல் கட்சிகளோ, அக்கட்சிகளின்
நெல்லை மாவட்ட அமைப்புகளோ மாணவனின்
செலவை ஏற்க முன்வரவில்லை. யாராவது
செத்தால்தானே அவர்களுக்கு லாபம்.

எல் ஐ சி தொழிற்சங்கம் முன்னெடுத்த
இச்செயல் பாராட்டுக்கு உரியது. 
-----------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக