செவ்வாய், 31 ஜூலை, 2018

லெனினியம் என்பது தவறு!
----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
(1) பஸ் வருகிறது என்று எழுதினான் பையன்.
தப்பு தப்பு, பஸ் என்று எழுதக் கூடாது.
ஸ் என்பது கிரந்த எழுத்து. எனவே தமிழ்
மரபுப்படி, பசு வருகிறது என்று எழுத வேண்டும்
என்று திருத்தினான் தகப்பன். தனித்தமிழ்த்
தகப்பன்.

பசு வருகிறது என்று எழுதிய நோட்டை
வகுப்பில் ஆசிரியரிடம் காட்டினான் மாணவன்.
பையனின் முதுகுத்தோலை உரித்தார் வாத்தியார்.

(2) லெனின் என்று எழுதக் கூடாது; அது தப்பு
 தனித்தமிழ் ஆர்வலர். எப்படித்தப்பு என்று
கேட்டார் மார்க்சிஸ்ட் கிளைச் செயலாளர்.

லகரம்  மொழிமுதல் வராது என்றார் த த.
(த த = தனித்தமிழ் ஆர்வலர்). அதாவது
ல என்ற எழுத்தில் ஒரு வார்த்தை தொடங்கக்
கூடாது என்றார் த த. அப்படியானால் என்ன
செய்ய வேண்டும் என்றார் மார்க்சிஸ்டு.

இலெனின், இலெனினியம் என்றுதான் எழுத
வேண்டும் என்கிறார் த த. அது மட்டுமல்ல,
மார்க்ஸ் என்று எழுதுவது தவறு; மார்க்குசு
என்றுதான் எழுத வேண்டும் என்றார் த த. 

மார்க்ஸ் ஜெர்மனியில் பிறந்தார் என்று எழுதுவது
தப்பு. ஜெர்மனி என்பதை யேர்மேனி என்றோ
செருமனி என்றோதான் எழுத வேண்டும் என்றார் தத.

விஜி, ராஜி, ஜானகி, ஹேமா, ஜோசப் ஸ்டாலின்
என்றெல்லாம் தப்புத் தப்பாக எழுதக்கூடாது
என்கிறார் தத.

விசி, ராசி, சானகி,ஏமா, யோசேப்பு இசுடாலின்
என்றுதான் எழுத வேண்டுமாம்.

ரஷ்யா தப்பு; உருசியா சரி.
டிசம்பர் தப்பு; திசம்பர் சரி.
ஜூன் ஜூலை தப்பு; யூன் யூலை சரி.
ஆகஸ்ட் தப்பு; ஆகத்து சரி.
லூயி மன்னன் தப்பு; இலூயி மன்னன் சரி.

இதெல்லாம்தான் தனித்தமிழ்.

*************************************************  

இணையம் வழங்கும் தமிழருக்கான அறிவுச்
செல்வங்களில்  ஒன்று விக்கிப்பீடியா.
இது தமிழனுக்குப் பயன்படாத நிலையில்
உள்ளது. காரணம் தனித்தமிழ் ஆட்கள்.
இதை முழுவதும் கைப்பற்றிக் கொண்டு
வாசிக்க முடியாத தமிழில், புரிந்து கொள்ள
முடியாத தமிழில் எழுதுகிறார்கள்.
   

        
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக