ஞாயிறு, 22 ஜூலை, 2018

உறுதியின்மைக் கோட்பாடும் 
பொருள்முதல்வாதமும்!
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
1) உறுதியின்மைக் கோட்பாடு (uncertainty principle)
இயற்பியலில் மிகவும் அடிப்படையான கோட்பாடு.
டாக்டர் வெர்னர் ஹெய்சன் பெர்க் இதை
உருவாக்கினார். இதற்காக நோபல் பரிசு பெற்றார்.
1927ல் உருவாக்கிய இந்தக் கோட்பாட்டிற்காக
1932ல் நோபல் பரிசு பெற்றார்.

2) உறுதியின்மைக் கோட்பாட்டை நான் படித்து 45
ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம் அதற்கு
அவ்வளவு செல்வாக்கு கிடையாது.

3) இதற்கு தமிழ்நாட்டில் எப்போது செல்வாக்கு
ஏற்பட்டது? தமிழ்நாடு மாநிலப் பாட வாரியமானது
(TN State Board) 12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில்
உறுதியின்மைக் கோட்பாட்டை அறிமுகப்
படுத்தியதில் இருந்து இக்கோட்பாடு கல்விப்
புலத்தில் செல்வாக்குப் பெற்றது. இது சுமார்
15, 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

4) உறுதியின்மைக் கோட்பாடு ஒரு இயற்பியல்
கோட்பாடு. ஆனாலும் இயற்பியல் பாடத்தில்
ஏன் இது இடம் பெறவில்லை? ஏன் வேதியியல்
பாடத்தில் இடம் பெற்றது?

5) உறுதியின்மைக் கோட்பாடு குவான்டம்
இயற்பியலில் வருவது. 12ஆம் வகுப்புப்
பாடத்திட்டத்தில் குவான்டம் இயற்பியலை
வைக்க முடியாது. எனவே இயற்பியல்
பாடத்தில் அது இல்லை.

6) வேதியியல் பாடத்தில் applied part என்ற
அடிப்படையில் உறுதியின்மைக் கோட்பாடு
இடம் பெறுகிறது. ஒரு பரிசோதனையில்
எவ்வளவு நிச்சயமின்மை (uncertainty) இருக்கிறது
என்று கண்டறிந்தால்தான் வேதியியலில்
பரிசோதனைகளின் ரிசல்ட்டை சரியாகக்
கணிக்க முடியும். எனவேதான் வேதியியலில்
உறுதியின்மைக் கோட்பாடு 12ஆம்
வகுப்பிலேயே இடம் பெறுகிறது. 

7) ஆக, உறுதியின்மைக் கோட்பாடு முக்கியமான
ஒரு பொருள்முதல்வாதக் கோட்பாடு ஆகும்.
அனால் அறியப்படாமலும் கற்பிக்கப் படாமலும்
உள்ள கோட்பாடு இது.

8) உறுதியின்மைக் கோட்பாட்டை   வைத்துக்
கொண்டு கடவுளின் இருப்பு நிரூபிக்கப்
பட்டு விட்டதாக கருத்துமுதல்வாதிகள்
சொல்லி வருவது உண்டு. இந்தக் கருத்து
மிகவும் பிரபலமான கருத்து. என்றாலும்
பொருள்முதல்வாத முகாமில் இருந்து,
நியூட்டன் அறிவியல் மன்றத்தைத் தவிர,
இதற்கு மறுப்பு எதுவும் வரவில்லை.

9) அணில் ஆணி இலை ஈக்கள் வகை
பொருள்முதல்வாதத்தின் லட்சணம்
இப்படித்தான் உள்ளது.

10) கருத்துமுதல்வாதத்தின் பிரபலமான
 பதிலளிக்க இயலாத நிலையில்தான்
அணில் ஆணி இலை ஈக்கள் வகை
பொருள்முதல்வாதம் உள்ளது என்று
நிரூபித்துள்ளேன்.
************************************************    

சொன்னால் கோபம் வருகிறது!
சொன்னதை நிரூபித்து உள்ளேன்!
------------------------------------------------------
பொருள்முதல்வாதிகள் என்று உரிமை கோரும்
பலரால், ஆத்திகர்கள் முன்வைக்கும் ஒரு
பிரபலமான கேள்விக்கு பதில் சொல்ல
முடியவில்லை. இந்த பலவீனம் பல
பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.

இதனால்தான் கருத்துமுதல்வாதி தோப்புக்
கரணம் போடச் சொல்லுகிறான். ஒப்பீட்டளவில்
RSS முகாம் வலுவான சித்தாந்த அடித்தளத்துடன்
இருக்கிறது. தனது சித்தாந்தத்தை சரியென்று
நிரூபிக்கும் ஆற்றல் அதனிடம் உள்ளது.

ஆனால் அணில் ஆணி இலை ஈக்கள்
பொருள்முதல்வாதிகள் தங்கள் சித்தாந்தம்
சரியானது என்று நிரூபிக்கும் ஆற்றல் இல்லாமல்
இருக்கிறார்கள்.

நியூட்டன் அறிவியல் கூறிய ஒவ்வொன்றையும்
நிரூபித்து இருக்கிறது. தமிழ்நாட்டில்
பொருள்முதல்வாத மேதைகளாக வலம்
வருவோர், நாத்திக பீடாதிபதிகள் ஆகியோர்
சித்தாந்த ஓட்டாண்டித் தனத்துடன் இருக்கிறார்கள்
என்பதை நிரூபித்து உள்ளேன். மறுக்க முடியுமா?

நியூட்டன் அறிவியல் மன்றம் இருக்கும்வரை
கருத்துமுதல்வாதத்தால் வெற்றி பெற முடியாது
என்று அடித்துக் கூறுகிறோம்.

இயங்கிக் கொண்டேதான், இயக்கத்திற்கு
ஊடேதான் இதற்கு விடை காண முடியும்.
மார்க்சியத்தில் தயார்நிலையிலான தீர்வு
ஏதும் இல்லை.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக