சனி, 14 ஜூலை, 2018

விளையாட்டாக இந்தக் கணக்கைச் செய்து
கோள்களைப் பற்றிய அறிவை மூளையில் சேமியுங்கள்!
அரியர்ஸ் வைக்கும் வாசகர்கள் கவனத்திற்கு!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
நமது சூரியக் குடும்பத்தில் ஒரு புதிய கோளை
விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருப்பதாக
கற்பனை செய்வோம்.

இந்தக் கோள் சூரியனில் இருந்து 1,200,000,000 கிமீ
120 கோடி கிமீ தொலைவில் இருப்பதாக வைத்துக்
கொள்வோம். இந்தக் கோள் சூரியனை ஒரு முறை
சுற்றி வருவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

மிகவும் எளிய கணக்கு. கெப்ளரின் 3ஆம் விதியைப்
பயன்படுத்தி விடை காணலாம். கெப்ளரின்
மூன்றாம் விதி வரும் கணக்குகளை ஏற்கனவே
பார்த்துள்ளோம். எனவே இதைச் செய்ய முடியும்.
மேலும் இது 12ஆம் வகுப்பு இயற்பியல்
பாடத்திட்டத்துக்கு உட்பட்டதுதான்.

உணவின் ருசி அதைச்  சாப்பிடும்போதுதான்
தெரியும். The proof of the pudding is in the eating. 
எனவே கணக்கைச் செய்க! இந்தக் கணக்கைச்
செய்வதுதான் கெப்ளருக்கு நாம் செலுத்தும்
மரியாதை!

துணைக்கேள்வி: சட்டப்பேரவையில்தான்
துணைக் கேள்வி கேட்க வேண்டுமா? நியூட்டன்
அறிவியல் மன்றமும் கேட்கும். கணக்கில்
கூறப்பட்ட அந்தக் கற்பனைக் கோளானது 
நமது சூரிய மண்டலத்தில் எந்தக் கோளை
அடுத்து இருக்கும்? அதாவது எந்த இரண்டு
கோள்களுக்கு இடையில் இருக்கும்?
***************************************************

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக