வியாழன், 19 ஜூலை, 2018

சரியான விடையும் விளக்கமும்!
----------------------------------------------------------
விடை: கொக்கு உண்மையான தூரத்தை விட,
அதிகமான தூரத்தில் இருப்பதாக, அதாவது
37.3 செமீ தூரத்தில் இருப்பதாக மீனுக்குத்
தோன்றும்.

விளக்கம்:
----------------
கொக்கு என்பது பொருள் (object).
மீன் என்பது பார்ப்பவர் (viewer).
இரண்டும் வெவ்வேறு ஊடகங்களில் உள்ளன.
OBJECTஆகிய கொக்கு அடர்த்தி குறைந்த ஊடகமான
(rarer medium) காற்றிலும்,     
VIEWERஆகிய மீன் அடர்த்தி மிகுந்த ஊடகமான
(denser medium) தண்ணீரிலும் இருக்கின்றன.

கொக்கில் இருந்து புறப்படும் ஒளியானது,
அடர்த்தி குறைந்த காற்றில் இருந்து
அடர்த்தி மிகுந்த தண்ணீருக்குச் செல்கிறது.
இங்கு ஏற்படும் ஒளி விலகல் (refraction) எப்படிப்
பட்டது? கணக்கின் கேள்விக்கான விடை
இதில்தான் இருக்கிறது.

இந்த ஒளி விலகலில், ஒளிக்கதிரானது செங்குத்துக்
கோட்டை நோக்கி வளையும் (bending towards the normal).
படத்தைப் பார்க்கவும். இதன் அர்த்தம் என்னவெனில்,
பொருள் அதிக உயரத்தில் இருப்பதாகத் தோன்றும்.
(Apparent height is more than the real height).
Apparent height AI  > Real height AO. 
     
கணக்கிடுவது எப்படி?
-------------------------------------
தண்ணீரின் ஒளி விலகல் எண் n = 1.33
n = apparent height (divided by) real height.
This means..... Apparent height = n x real height
= 1.33 x 28 = 37.3 cm.
எனவே கொக்கு 37.3 செமீ  உயரத்தில் இருப்பதாக
மீனுக்குத் தோன்றும்.
---------------------------------------------------------------
பின்குறிப்பு: ஒளியானது அடர்த்தி அதிகமான
ஊடகத்தில் இருந்து அடர்த்தி குறைவான
ஊடகத்திற்குச் சென்றால், மேற்கூறிய
சூத்திரம் மாறும். 
விடையளித்தோர்க்கு நன்றி.
****************************************************

      



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக