திங்கள், 16 ஜூலை, 2018

நோபல் பரிசு, ஏபெல் பரிசு இரண்டையும் வென்ற 
உலகின் தலை சிறந்த கணித நிபுணர்களில் ஒருவரான 
டாக்டர் ஜான் நாஷ் மறைவு
மூன்றாம் ஆண்டு நினைவு  அஞ்சலி!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------------
டாக்டர் ஜான் நாஷ் மற்றும் அவரின் துணைவியார் ஆகிய
இருவரும் கடந்த ஜூன் 23, 2015 அன்று ஒரு கார் விபத்தில்
அமெரிக்காவில் மரணம் அடைந்தனர். இவ்விருவரின் மறைவுக்கும்
நியூட்டன் அறிவியல் மன்றம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது.

டாக்டர் ஜான் நாஷ் (Dr John Nash, age:86)ஓர் அமெரிக்கக் கணித
நிபுணர். 1994இல் பொருளாதாரத்தில் நோபல் நினைவுப் பரிசை
வென்றார். GAME THEORY என்ற அவரின் கோட்பாடு இன்றளவும் பயன்படுகிறது. அது அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

தமது மறைவுக்குச் சில நாட்கள் முன்புதான், அவர் ஏபெல்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். ஏபெல் பரிசு கணித
மேதைகளுக்கு வழங்கப் படும் பரிசாகும். நார்வே நாட்டின்
கணித மேதை நியல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின்
பெயரால் நார்வே நாடு வழங்கும் பரிசு இது.

Non-cooperative games பற்றிய டாக்டர் நாஷ் அவர்களின்
கோட்பாடு NASH EQUILIBRIUM என்று அழைக்கப் படுகிறது.
இக்கோட்பாடு சமூக அறிவியலின் எல்லாத் துறைகளிலும்
இன்றளவும் பயன்படுகிறது.

------------------------------------------------

கணிதமும் தர்க்கமும் (Math and Logic)
மூக்குத்தி உள்ள லட்டு எது? கண்டுபிடியுங்கள்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
கணிதமும் தர்க்கமும் நெருங்கிய தொடர்பு உடையவை.
ஒன்றில் மற்றொன்றின் கூறுகள் அடங்கி உள்ளன.
எந்த ஒரு தர்க்க ரீதியான பிரச்சினையையும் கணித
வழியில் தீர்க்க முடியும்.
**
இங்கு ஒரு எளிய கணக்கு தரப் பட்டுள்ளது. இதைத்
தர்க்கம் சார்ந்து தீர்க்க இயலும். தீர்த்து மகிழவும்.
**
பன்னிரண்டு லட்டுகள் உள்ளன. அவை பார்ப்பதற்கு
ஒன்றுபோல் தோன்றும். இந்தப் பன்னிரண்டு லட்டுகளில்
ஒரே ஒரு லட்டு மட்டும் சற்று எடை கூடியது. காரணம்
அதற்குள் ஒரு தங்க மூக்குத்தி ஒளித்து வைக்கப்
பட்டுள்ளது. உங்களிடம் ஒரு தராசு தரப்படும். அதைப்
பயன்படுத்தி, மூன்றே மூன்று முறை மட்டும் நிறுத்துப்
பார்த்து, மூக்குத்தி உள்ள லட்டைக் கண்டுபிடிக்க
வேண்டும். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
**



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக