வெள்ளி, 13 ஜூலை, 2018

பூமியின் அலைநீளமும்
சந்திரனின் அலைநீளமும்!
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
பருப்பொருளும் அலையாக இருக்கிறது என்கிறார்
லூயி டி பிராக்லி. பெரிய பொருளுக்கும்
இது பொருந்துமா என்று பார்க்கலாம்.

இப்பொருளில் எழுதப்பட்ட எமது முந்தைய
கட்டுரைகளைப் படித்துப் புரிந்து
கொண்டவர்களிடம் இக்கேள்வி வைக்கப்
படுகிறது.

பூமியும் ஒரு பொருள்தானே! சந்திரனும் ஒரு
பொருள்தானே! அப்படியானால் பூமி, சந்திரனின்
அலைநீளம் என்ன? செய்து பார்ப்போம்.

கேள்வி-1:
-------------------
பூமியின் நிறை 6 x 10^24 kg; அது சூரியனைச் சுற்றும்
வேகம் 30.3 kmpersecond. பூமியின் அலைநீளம் என்ன?

கேள்வி-2:
----------------
சந்திரனின் நிறை 7.35 x 10^22 kg. சந்திரன் பூமியைச்
சுற்றும் வேகம் 1022 km per second). சந்திரனின்
அலைநீளம் என்ன?


இவ்விரண்டு கணக்குகளையும் செய்யுங்கள்.
பருப்பொருள் அலைநீளம் பற்றிய துல்லியமான
புரிதல் கிடைக்கும்.

வாசகர்களிடம் இருந்து விடைகள் வரவேற்கப்
படுகின்றன. வருமா என்று நிச்சயமில்லை.
எனவே எமது விடைகள் இங்கு படமாக
உள்ளன. காகிதத்தில் எழுதி மொபைல்
காமிராவில் படம்   எடுத்தது.

பூமியின் அலைநீளம், சந்திரனின்  அலைநீளம்
இரண்டும் 10^-63( 10 to the power of minus 63 மீட்டர்)
என்ற அளவில் உள்ளன. இதன் பொருளை உணர
10^-63 என்பதன் பொருளை உணர வேண்டும்.
*************************************************** 
பூமி, சந்திரன், கிரிக்கெட் பந்து, பாயும் சிறுத்தை
ஆகிய எல்லாப் பொருட்களின் அலைநீளம்
கண்டு பிடிக்கலாம். அலைநீளம் கண்டு பிடிக்க
ஒரு நிமிட நேரம் மட்டுமே ஆகும். அலைநீளம்
கண்டு பிடிக்காமல் quantum physics புரியாது.
மணிக்கணக்காய் படிப்பதுடன்
கணக்குகளையும் நிறையச் செய்ய வேண்டும்.
இக்கணக்குகளை 12ஆம் வகுப்பு மாணவனால்
செய்ய இயலும். calculation அவனின் சிலபஸில்
உள்ளது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக