ஞாயிறு, 22 ஜூலை, 2018

என் கேள்விக்கு என்ன பதில் என்று
கொக்கரிக்கிறான் ஆர் எஸ் எஸ் கயவாளி!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர்
வெர்னர் ஹெய்சன் பெர்க் கண்டுபிடித்த
கோட்பாடு UNCERTAINTY PRINCIPLE ஆகும்.

இதை வைத்துக் கொண்டு, கடவுள் இருக்கிறார்
என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றன 
ஆர் எஸ் எஸ், இந்துத்துவ சங்கப் பரிவாரங்கள். 

எமது முந்திய பதிவில் RSS கயவர்கள் கேட்ட
கேள்வி உள்ளது.  வாசகர்கள் அதைப் படிக்கவும்.
அந்தக் கேள்விக்கு என்ன பதில் என்று
கேட்கிறான் RSS கயவாளி.

1) பொருள்முதல்வாத வகுப்புகளில் பங்கேற்று
அறிவைப் பெருக்கிக் கொண்ட
பொருள்முதல்வாதிகள் முகநூலில் ஏராளம்.

2) பொருள்முதல்வாத வகுப்பு எடுக்கும்
அறிஞர்களும் ஏராளம்.

3) பொருள்முதல்வாத நூல்கள், அவற்றை எழுதிய
நூலாசிரியர்கள், அந்த நூல்களின் வாசகர்கள்
என்று பொருள்முதல்வாத அறிஞர்களும் ஏராளம்.

என்றாலும் RSS கயவனின் கேள்விக்கு பதில்
வரவில்லை. ஒருவரும் பதில் சொல்லவில்லை.

ஆர் எஸ் எஸ் கயவர்களும், இந்துத்துவக்
கபோதிகளும், சங்கப் பரிவாரப் பிற்போக்குப்
பிண்டங்களும் பதில் என்ன என்று கேட்டு
நெருக்கடி கொடுக்கிறார்கள்.

RSS கயவர்களே,
உங்கள் கேள்விக்கு பதில் சொல்லப்படும்.
முகநூலில் உள்ள பொருள்முதல்வாத அறிஞர்கள்
ஒவ்வொருவரும் பதில் சொல்லுவார்கள். தடுக்கி
விழுந்தால், முகநூலில் பொருள்முதல்வாத
அறிஞர்கள் மீதுதான் தடுக்கி விழ நேரும்.
எனவே நிறையவே பதில்கள் கிடைக்கும்.

பதில் சொல்லுங்கள், பொருள்முதல்வாத
அறிஞர்களே!
****************************************************


ஆர் எஸ் எஸ் கயவாளியின் கேள்வி!
-----------------------------------------------------------------
கடவுள் இருக்கிறார். ஆனால் அவர் இன்ன நேரத்தில்
இன்ன இடத்தில் இருக்கிறார் என்று சொல்ல
.முடியாது. காரணம் "உறுதியின்மைக் கோட்பாடு" 
(uncertainty principle) எனப்படும் இயற்பியல் கோட்பாடு.
எனவே கடவுள் இருக்கிறார் என்பது .உண்மையாகிறது.
இதை நாத்திகர்கள் மறுக்க முடியுமா?

தோப்புக்கரணம் போடு!
-------------------------------------------
இந்தக் கேள்விக்கு நாத்திகர்கள் பதில்
சொல்லாவிட்டால், அவர்கள் தோல்வியை
ஒப்புக்கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும் என்கிறான் நிலப்பிரபுத்துவ
மனநிலை கொண்ட RSS கயவாளி. இன்பாக்சில்
வந்து சொல்கிறான்.

எமது பதில்!
--------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்த இருக்கும்
Advanced பொருள்முதல்வாத வகுப்பில் RSS
உள்ளிட்ட அனைத்து மதவாதிகளின்
கேள்விகளுக்கும் முதுகெலும்பை முறிக்கும்
பதில் வழங்கப்படும். கூட்ட விவரம் பின்னர்
அறிவிக்கப்படும்.


தோழர் உங்கள் ஊரில் புரஃபெஷனல் கூரியர்
சேவை உண்டா? அல்லது VPP சேவை உண்டா?
புரஃபெஷனல் கூரியரில் நாளை அனுப்புகிறேன்.
சரியா? 

உங்கள் முழு அஞ்சல் முகவரியை இங்கு தரவும்,
தொலைபேசி எண்ணுடன். உங்கள் ஊரில்
புரஃபெஷனல் கூரியர் சேவை உண்டா?
இருந்தால் கூரியர் மூலம் அனுப்பி வைக்கலாம். 

புத்தகம் அனுப்பிய பின் வங்கி விவரம் தருகிறேன்.

1) POSITION, MOMENTUM என்னும் இரண்டில் ஒன்றைத்
துல்லியமாக அளவிடும்போது, மற்றதில்
பிரம்மாண்டமான பெரும் பிழை ஏற்படும். 

2) பொருள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அளவிட
முடியும். பொருளில் இருந்து அதன் இயக்கத்தை,
அதன் MOMENTUMஐ பிரித்துத் தனியாக அளவிட
முடியாது.

3) துகள் இயற்பியலில் 6 அச்சுக்களை (coordinates)
கணக்கில் கொள்கிறோம். position coordinates =3;
momentum coordinates = 3. மொத்தம்= 6.   
-----------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக