ஞாயிறு, 1 ஜூலை, 2018

ISLAMIC TERRORISM COIMBATORE BLAST
================================
கோவையில் 1990களில் ஜிகாதிகளின் நடமாட்டம் காரணமாக கோட்டை மேடு, உக்கடம் போன்ற முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் காவல்துறை ஐந்து check postகளை அமைத்தது.
1996 தேர்தலில் கோவையில் திமுக வேட்பாளர்கள் சி. டி. தண்டபாணி (சட்டசபை) எம். ராமநாதன் (பாராளுமன்றம்) ஆகிய இருவரும் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் திமுக அரசு அமைந்தவுடன், கோட்டைமேடு, உக்கடம் பகுதிகளில் உள்ள ஐந்து check postகளையும் அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தனர்.
வாக்குகள் எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போதே, திமுகவின் வெற்றி உறுதி செய்யப்படுவதற்கு முன்னரே, முஸ்லிம் இளைஞர்கள் ஐந்து தடை மையங்களையும் உடைத்து எறிந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், காவலர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
1996ன் முடிவில் கோவை சிறைச்சாலை வார்டன் பூபாலன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்
ஜனவரி 1997ல் சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஷா மற்றும் பதினைந்து அல் உம்மா பயங்கரவாதிகளும் வெளிவந்தனர்.
பிப்ரவரி 1997 தஞ்சாவூர் சாலியமங்கலம் அருகே மொகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது; தஞ்சை நகர போலீசார் ஜெலடின் குச்சிகள், ஸல்ஃபர், அம்மோனியம் நைட்ரேட், நைட்ரிக் ஆஸிட், சல்ஃபுரிக் ஆஸிட், துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆகியவை அடங்கிய பெரிய பார்சல்களை அரிசி ஆலையில் கைபற்றினர்
1997ல் கோவையில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் அல் உம்மா பயங்கரவாதிகளால் பட்டப்பகலில் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வெடித்த கலவரத்திலும், பின்னர் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையிலும், 17 முஸ்லிம்கள் இறந்தனர்
இதுவே கோவை தொடர் குண்டு வெடிப்புக்கு அச்சாணியாக அமைந்தது.
டிசம்பர் 6,1997ல் சென்னை செண்ட்ரலிலிருந்து சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் வண்டிகளில், கேரளத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பாதுகாப்புப் படை + அல் உம்மா பயங்கரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்ததில், 10 பயணிகள் கொல்லப்பட்டு 70 பேர் படுகாயமடைந்தனர்
டிசம்பர் 9, 1997ல் கோவை புறநகரில் ஒரு சைக்கிளில் வைத்திருந்த குண்டு வெடித்ததில் மூன்று பெண்கள் இறந்தனர். அப்துல் குவாயம், சுல்தான் நாசர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவை அனைத்து நிகழ்வுகளும் திமுக காலத்தியவை காசு, ஓட்டு இவையே திமுக கொள்கை இதில் எவர் உயிர் போனாலும் கவலையில்லை
ஜனவரி 31,1998ல் ஒரு பயங்கரவாத செயல் நிகழ வாய்ப்பிருப்பதாக மாநில உளவுத்துறை அரசாங்கத்திற்கு தகவல் அளித்தது.
பிப்ரவரி 12,1998ல் தான் கொடுத்த தகவலை உறுதி செய்த மாநில உளவுத்துறை அத்வானியின் தமிழக விஜயத்தில் அவரின் தேர்தல் பிரசாரத்தின் போது பயங்கரவாத செயல் நடக்கவிருப்பதாக தகவலளித்தது.
பிப்ரவரி 14,1998ல் மாலை 3. 50 மணி முதல் 4. 30 மணி வரை 11 இடங்களில் 13 குண்டுகள் வெடித்ததில் 10 பெண்கள் 1 குழந்தை உள்ளிட்ட 45 பேர்கள் பரிதாபமாக இறந்தனர். அடுத்த சில தினங்களில் மேலும் சிலர் இறந்து மொத்தம் சாவு எண்ணிக்கை 59-ஆக உயர்ந்தது. படுகாயம் அடைந்தோரின் எண்ணிக்கை 200க்கும் மேல்
பிப்ரவரி 15,1998ல் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களை போலீசார் நெருங்கிய சமயத்தில் அவர்கள் வைத்திருந்த குண்டுகளே வெடித்ததில் 6 அல் உம்மா பயங்கரவாதிகள் இறந்தனர்.
பிப்ரவரி 17,1998ல் அல் அமீன் காலனியில் அல் உம்மா பயங்கரவாதிகள் 4 பேர் தங்கள் மறைவிடத்தில் குண்டு வெடித்ததில் இறந்தனர்
தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு திமுக அரசு ஜிகாத் கமிட்டி, அல் உம்மா ஆகிய பயங்கரவாத இயக்கங்களை தடை செய்தது மக்களின் கடுமையான விமரிசனத்திற்கு ஆளானது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறது அரசு என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பாஷா முதலிய 16 பயங்கரவாதிகளை விடுதலை செய்திருக்கவிட்டால் குண்டு வெடிப்பு நடந்திருக்காது என்றும், உளவுத்துறை கொடுத்த தகவல்களின் பேரில் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமலும் அரசு தவறிழைத்து விட்டது என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்ஜ
காவலர் செல்வராஜ் கொலைக்கு பிறகு நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்த முஸ்லிம்களின் ஈமச்சடங்குகளை வீடியோ எடுத்து அரபு நாடுகளுக்கு அனுப்பி எதிர்கால ஜிகாதிற்காக நிதி திரட்டியதாக பத்திரிகை வட்டாரங்களில் அப்போது சொல்லப்பட்டன. இதனையும் வேடிக்கை மட்டுமே பார்த்தது திமுக அரசு.
விசாரணைஆரம்பம் ஆவதற்கு முன்னர், தமுமுக, திக.,னன, மனித நீதிப் பாசறை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை, குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை வற்புறுத்தினர். அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் அரசு தரப்பு தன்னுடையவாதத்தை சரியாக வைக்கவில்லை
ஆகஸ்ட் 1,2007ல் சிறப்பு நீதி மன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தாரும், மற்றும் தர்மத்தின் பக்கம் நிற்கும் அனைத்து மக்களும் அதிர்ச்சியடையும் வகையில், முக்கிய குற்றவாளியான மதானியையும் அவனுடன் ஏழு பயங்கரவாதிகளையும், விடுதலை செய்தார்.
விடுதலையான மதானிக்கு ஒரு கதாநாயகனை போல மாபெரும் வரவேற்பு திருவனந்தபுரத்தில் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநயக முன்னணியும், கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் போட்டி போட்டுக்கொண்டு மதானியைக் கவருமாறு அவனுக்கு வரவேற்பு அளித்தன.
தமிழகத்தில் இந்த கேடு கெட்ட தீவிரவாதிக்கு ஆதரவாக தினமும் குரல் ஒழிக்கிறது. அவனை சந்திப்பதை பெருமிதமாக எண்ணும் அரசியல் தலைவர்கள் ஒருவர் கூட இவர்களால் கொல்லபட்ட மக்களுக்காக என்றுமே ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக