ஞாயிறு, 8 ஜூலை, 2018

பொருள்முதல்வாத வகுப்பு
எப்படி இருக்க வேண்டும்?
வகுப்பு நடத்துவோர் கவனத்திற்கு!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
1) அறிவியல் இல்லாமல் பொருள்முதல்வாதம் இல்லை.
எனவே பொருள்முதல்வாத வகுப்பில்
அறிவியலும் தத்துவமும் கற்பிக்க வேண்டும்.

2) அறிவியல் 50 சதம்; தத்துவம் 50 சதம்.
அறிவியலே இல்லாமல் கற்பிக்கப்படும் எதுவும்
பொருள்முதல்வாதம் கிடையாது.

3) பொருளின் பண்புகள் (properties of matter) என்று
இயற்பியலில் ஒரு பாடம் உண்டு. அதைக்
கற்பிக்க வேண்டும்.

4) velocity, pressure, viscosity, surface tension, density, momentum 
இவை பற்றியெல்லாம் கற்பிக்க வேண்டும்.

5) வகுப்பு எடுக்கும் கட்சித் தோழரால் இப்பாடங்களைக்
கற்பிக்க இயலாமல் இருக்கும். எனவே அறிவியல்
பாடங்களைக் கற்பிக்க, அறிவியல் ஆசிரியரை
நியமித்துக் கொள்ள வேண்டும்.

6) எனக்கும் அறிவியல் தெரியாது; அறிவியல் தெரிந்த ஆசிரியர்களையும் நான் நியமிக்க மாட்டேன்.
பொருள்முதல்வாத வகுப்பு என்ற பெயரில்
ஜனங்களை முட்டாள் ஆக்குவேன் என்ற
மனப்பான்மையை ஒழிக்க வேண்டும்.

7) அறிவியல் இல்லாமல் நடத்தப்படும் வகுப்புகள்
பொருள்முதல்வாத வகுப்புகள் அல்ல.

8) பொருள்முதல்வாத வகுப்பில் அறிவியலை
நடத்திடுங்கள் என்று சொன்னதுமே தீயை
மிதித்தது போல் அலறுபவன் எவனும்
மார்க்சிஸ்ட்டே அல்ல.

9) தொட்டதெற்கெல்லாம் மார்க்சியம் ஒரு
விஞ்ஞானம் என்று கூச்சல் போடுவதால்
மார்க்சியம் விஞ்ஞானம் ஆகி விடாது.

10) இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும்;
நடைமுறைக்கு சரிப்படாது என்று சொல்பவர்கள்
ஒன்று செய்யலாம். என்ன அது? பேசாமல்
RSSகாரன் நடத்தும் பொருள்முதல்வாத
வகுப்புக்கு ஆட்களை அனுப்புங்கள்.

11) ஆம், RSSன் சிலபசில் பொருள்முதல்வாதமும்
உள்ளது என்கிறான் RSSகாரன். பொருள்முதல்வாதம்
தெரிந்தால்தான் மார்க்சியத்தைக் களத்தில்
சந்திக்க முடியும் என்கிறான் RSS அறிவுஜீவி.

12) அவன் ஆயத்தமாக இருக்கிறான்; தொடர்ந்து
தன்னை தன் அறிவைப் புதுப்பித்துக்
கொள்கிறான்.திருமணம் செய்து கொள்ளாமல்,
குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளாமல் அதிகபட்ச
அர்ப்பணிப்புடன் RSS சித்தாந்தத்தை வெற்றி பெறச்
செய்ய அவன் உழைக்கிறான். அவனிடம் இருந்து
கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது,
பொருள்முதல்வாதம் உட்பட.
****************************************************** 

மதியம் 12.30 மணி வாக்கில் இந்தப் பதிவு எழுதப்
பட்டது. இப்போது மாலை 5.30 மணி. ஐந்து மணி
நேரம் ஓடி விட்டது. வலதுசாரி, இடதுசாரி இரு
தரப்பில் இருந்தும் பதில் வரவில்லை. இது
என்ன நியாயம்?

தோழர் காலன்துரை அவர்களுக்கு.
இதில் பூடகம் எதுவும் இல்லை. இது ஒரு கணக்கு.
கணினியில் பயன்படும் கணக்கு சார்ந்த ஒரு கேள்வி.
வகுப்பறைகளில் கணினி அறிவியல் படிக்கும்
மாணவர்கள் இது போன்ற கணக்கைச் செய்கிறார்கள்.
கணக்கின் விடையைக் கேட்கிறேன். அவ்வளவே.
வாசகர்கள் விடையளிக்க வசதியாக, விடையை
நான் முன்கூட்டியே கூறுவதில்லை. அது பின்னர்
வெளியிடப்படும்.

இது போன்ற கணக்குகளை கடந்த 4 ஆண்டுகளாக
2014 முதல் கேட்டு வருகிறேன். தாங்கள் கருத்துத்
தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. விடையை
இன்னும் சில மணி நேரம் கழித்து வெளியிடத்
தாங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். 

விடையளிக்க வசதியாக ஒரு குறிப்பு (clue)
-------------------------------------------------------------------------
இதற்குச் சரியான விடையளிப்போர் பதினாறும்
பெற்றுப் பெருவாழ்வு வாழ்வர்.

என்னுடைய கால்குலேட்டரில் தற்போது
டெசிமல் settings வைத்திருக்கிறேன். அவரவர்
தேவைக்கு என்ன தேவையோ அதை வைத்துக்
கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும்
settingsஐ மாற்றிக் கொள்ளலாம். கணக்கில்,
ராமன் ஒரு செட்டிங்ஸ் வைத்துள்ளான்.
அது லட்சுமணனுக்குத் தெரியும். எனவேதான்
இருவரின் தொகையும் (1000. 4096) ஒத்துப்
போகின்றன.

வஞ்சப்புகழ்ச்சி என்பது ஓர் அணி!
---------------------------------------------------------------
1) புகழ்வது போலப் பழிப்பதும்
2) பழிப்பது போலப் புகழ்வதும்
வஞ்சப்புகழ்ச்சி ஆகும். நமது எழுத்துக்களில்
பல்வேறு அணிகள் பயிலும்.

பதிவில் பயிலும்
அணி யாது என்றும் அது அவ்வணியாகுமாற்றைப்
புலப்படுத்துக்க என்றும் கேள்வி கேட்கத்
தொடங்கினால், தமிழ் இலக்கியத்தில் பட்ட  

இதோ விடை!
விடையும் விளக்கமும்!
------------------------------------------
விடை: 1000 என்ற ஹெக்சா டெசிமல் நம்பர்
4096 என்ற டெசிமல் நம்பருக்குச் சமம்.
லட்சுமணன் தர வேண்டிய தொகையை
ஹெக்சா டெசிமல் (Hexa decimal) முறையில்
ராமன் குறித்து வைத்திருந்தான். பண வரவு
செலவுத் தொகைகளை ஹெக்சா டெசிமல்
முறையில் ராமன் குறித்து வைப்பது
லட்சுமணனுக்குத் தெரியும். இதுதான் விடை.

1000 (hexadecimal) = 4096 (decimal).
ஹெக்சா டெசிமல் என்பது 16ஐ அடிப்படையாகக்
கொண்ட ஒரு எண்முறை (number system based on 16).
மனிதர்கள் உருவாக்கிய எண் முறைகளை
வைத்துக் கொண்டு கணினிகளால் வாழ முடியாது.
எனவே கணினிகள் ஹெக்சா டெசிமல், ஆக்டல்,
பைனரி போன்ற எண் முறைகளையும்  (number systems)
பயன்படுத்துகின்றன.

இதில் 1000 என்ற ஹெக்சா டெசிமல் நம்பரை
நான் தேர்ந்தெடுத்தேன். இது எவ்வளவு
அற்புதமான செலக்சன் என்பது கணினி பற்றி
அறிந்தோர்க்குத் தெரியும். மிகவும் யதார்த்தமாகத்
தோன்றும் ஒரு நம்பர் 1000 (ஹெக்சா). வேறு ஒரு
நம்பரை நான் தெரிவு செய்து கணக்கை
உருவாக்கி இருந்தால், வாசகர்களுக்கும் கஷ்டம்;
எனக்கும் கால்குலேட்டரின் உதவி தேவைப்பட்டு
இருக்கும்..

இந்த 1000 (ஹெக்சா) அப்படி அல்ல. 16x 16x16 என்ற
பெருக்கலில், மனக்கணக்காக என் வேலை
முடிந்து விடுகிறது.

ஹெக்சா டெசிமல் முறையில் A, B, C, D, E, F என்ற
எழுத்துக்களும் எண்களாகக் கருதப்படும்.
உதாரணமாக, 4600 என்ற டெசிமல் எண்ணை
11F6 என்றுதான் ஹெக்சா  டெசிமலில் எழுத
முடியும். இங்கு F என்ற எழுத்து எண்ணாக
வருகிறது பாருங்கள்.

-------------------------------------------------------------------  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக