விஞ்ஞானம் என்றால் என்ன?
எதை விஞ்ஞானம் என்று சொல்லலாம்?
எதைச் சொல்லக் கூடாது?
நியூட்டன் செய்த தப்பைத் திருத்தியது யார்?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
நியூட்டன் காலத்தில் அவர்தான் அறிவியலின்
சக்கரவர்த்தி; அவர்தான் கடவுள். எனவே
நியூட்டனுக்கு எதிராக எவரும் எதுவும் பேசுவது
கடினம்.
நியூட்டன் காலத்தில் அறிவியலின் வெளிச்சம்
படாத விஷயங்கள் ஏராளம். ஒலியின் வேகம்
(velocity of sound) என்ன என்று நியூட்டன் காலத்தில்
யாருக்கும் தெரியாது. எனவே நியூட்டனே அதைக்
கண்டுபிடிக்க முனைந்தார்.
நியூட்டன் கோட்பாட்டு இயற்பியலாளர் மட்டுமல்ல
அவர் பரிசோதனை இயற்பியலாளரும் ஆவார்.
(He is a theoretical physicist as well as an experimentalist). எனவே அவர்
ஒலியின் வேகத்தைக் கண்டறியும் ஒரு
பரிசோதனையைச் செய்து, காற்றில் ஒலியின்
வேகம் 279 m/s (at NTP) என்று கண்டறிந்தார்.
(NTP = Normal Temperature and Pressure). இந்தப்
பரிசோதனையின்போது காற்றில் ஒலி
செல்லும்போது வெப்ப மாறுதல் அடைவதில்லை
(isothermal) என்று நியூட்டன் அனுமானித்தார்.
ஆனால் நியூட்டனின் இந்த விடை (279 m/s)
நடைமுறையில் சரிவரவில்லை. பல்வேறு
பரிசோதனைகளிலும் இந்த மதிப்பைப்
பயன்படுத்தினால் தவறான விடைகள் வந்தன.
இந்நிலையில் பிரெஞ்சு விஞ்ஞானி லாப்லேஸ் ஒரு
பரிசோதனையைச் செய்து ஒலியின் வேகத்தைக்
காண முயன்றார். காற்றில் ஒலி செல்லும்போது
வெப்ப மாறுதல் அடைவதில்லை (isothermal)
என்ற நியூட்டனின் அனுமானத்திற்குப் பதிலாக,
வெப்ப மாறுதல் அடைகிறது (adiabatic) என்ற
அனுமானத்தை மேற்கொண்டு பரிசோதனை
செய்தார். அப்போது அவருக்கு காற்றில் ஒலியின்
வேகம் (at NTP) 332 m/s என்ற விடை கிடைத்தது.
இதுவே சரியான விடை என்று பல்வேறு
பரிசோதனைகள் நிரூபித்தன.
1) நியூட்டன்: v = 279 m/s at NTP (isothermal)
2) லாப்லேஸ்: v = 332 m/s at NTP (adiabatic).
அந்தக் காலத்தில் நியூட்டன் சக்கரவர்த்தி என்றால்.
லாப்லேஸ் ஒரு சிற்றரசர்தான். மேலும் இங்கிலாந்தும்
பிரான்சும் பகை நாடுகள்; தற்போதைய இந்தியா
பாகிஸ்தான் போல. நியூட்டன் இங்கிலாந்து நாட்டவர்.
லாப்லேஸ் பிரான்சுக்காரர். என்றாலும், நியூட்டனின்
தவறை அன்று சுட்டிக்காட்டித் திருத்த முடிந்தது.
இதற்கு அறிவியல் இடமளிக்கிறது. இதுதான்
அறிவியல்.
எது நடைமுறையில் நிரூபிக்கப் படுகிறதோ
அதுதான் சரியென்று அறிவியலில் ஏற்கப்படும்.
வேறு துறைகளில் இது நடக்குமா? நடக்கச்
சாத்தியம் உண்டா? செல்வாக்கு உள்ள ஒருவரின்
தவறை வேறொருவர் சுட்டிக் கட்ட இயலுமா?
குறிப்பாக, அரசியலில் இது சாத்தியமா?
டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது
நடந்த ஒரு சம்பவம். டாக்டர் கலாமுடன் உச்சநீதிமன்ற
நீதிபதி ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது
கலாமின் உதவியாளரும் (இவர் ஒரு சாதாரண
class I officer) அங்கிருந்தார்.
கலாம் அவரிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில்
தம் கருத்தைத் தெரிவித்து, இது சரிதானா என்று
கேட்டார். அதற்கு அந்த அதிகாரி, "சார், நீங்கள்
சொல்வது தவறு" என்று கூறி அது எப்படித் தவறு
என்றும் கூறினார். கேட்டுக் கொண்டிருந்த
உச்சநீதிமன்ற நீதிபதிக்கு மாரடைப்பே வந்து
விட்டது. அது எப்படி, ஒரு ஜனாதிபதி சொல்வதை
சாதாரண அதிகாரி ஒருவர் மறுத்துப் பேச
முடிகிறது என்று ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்
அந்த நீதிபதி.
கனம் நீதிபதி அவர்களே,
அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி. விஞ்ஞானத்தில்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எதுவும் இல்லை.
சரி தவறு .மட்டுமே உண்டு. இதுதான் அறிவியல்.
எது சரி எது தவறு என்று பரிசீலித்துப் பார்க்க
இடமளிப்பதும், தவறை நிராகரித்து சரியை
மட்டுமே ஏற்றுக் கொள்வதும்தான் அறிவியல்.
இதற்கு இடமளிக்காத எதுவும் அறிவியல் அல்ல.
*******************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக