வியாழன், 12 ஜூலை, 2018

பொருள்முதல்வாதமும் சார்பியல் கோட்பாடும்!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
நியூட்டனின் அறிவியல் வரையிலும்
பொருள்முதல்வாதத்தில் இடம் பெற்றுள்ளது.
மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் ஆகியோர்
தங்களின் முயற்சியில் நியூட்டனின்
அறிவியலை பொருள்முதல்வாதத்தில்
சேர்த்தனர்.

1905ல் ஐன்ஸ்டின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை
வெளியிட்டார். 1915ல் பொதுச்சார்பியல்    
கோட்பாட்டை வெளியிட்டார்.எனினும் 1921ல்தான் 
ஐன்ஸ்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அதன் பிறகே அவர் உலகெங்கும் அறிமுகம்
ஆனார். அவரின் சார்பியல் கொள்கைகள்
கவனிக்கப் பட்டன.

முன்னதாக 1919 மே 29ல் முழுச் சூரிய  கிரகணம்
ஏற்பட்டது. நவீன அறிவியலின்  வரலாற்றில்
இந்தத் தேதி மறக்க முடியாத ஒன்று. இந்தச் சூரிய
கிரகணத்தின்போதுதான் ஐன்ஸ்டினின்
சார்பியல் கோட்பாடு பரிசோதனைக்கு
உட்படுத்தப் பட்டது. சரியானது என்று நிரூபிக்கப்
பட்டது. ஆர்தர் எட்டிங்டன் என்னும்  விஞ்ஞானி
தலைமையிலான குழு  ஆப்பிரிக்கக்
கடற்கரைக்கு அப்பாலுள்ள கினியா வளைகுடாவில்
உள்ள பிரின்சிபி என்னும் தீவுக்குச் சென்றது.

இன்னொரு விஞ்ஞானிகளின் குழுவை பிரேசில்
அருகிலுள்ள சோப்ரல் என்னும் இடத்துக்கு
எட்டிங்டன் அனுப்பினார்.  எட்டிங்டன்
குழுவினரின் ஆய்வு முடிவுகள் ஐன்ஸ்டினின்
சார்பியல் கொள்கையை நிரூபித்தன.

1) வெளி, காலம் இரண்டும் தனித்தனியானவை
அல்ல. அவை ஒன்றிணைந்தே இருக்கின்றன.
2) காலம் என்பது நான்காவது பரிமாணம் ஆகும்.
3) வெளி வளைந்து இருக்கிறது. அது சமதளமாக
இல்லை (not plane).
இவை மட்டுமல்ல; இன்னும் நிறைய விஷயங்கள்
ஐன்ஸ்டினின் சார்பியல் கொள்கையில் உள்ளன.

இவற்றை எல்லாம் உள்ளடக்கிய
பொருள்முதல்வாதம் மட்டுமே
கருத்துமுதல்வாதத்தைக் களத்தில்
சந்தித்து முறியடிக்கும்.

ஹைதர் அலி காலத்து அணில் ஆணி இலை
ஈக்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதில்
பயனில்லை.

எனினும் பொருள்முதல்வாதத்தில் அறிவியல்
என்றதுமே அடிவயிற்றில் கத்திக்குத்து
விழுந்தது போல் ஆகி விடுகிறார்கள் சிலர்.
தீயை மிதித்தது போல் அலறுகிறார்கள் சிலர்.
வாயில் கொழுக்கட்டையை அடைத்துக்
கொள்கிறார்கள் சிலர்.இளக்காரம் கொண்டு
திரிவோர் சிலர். மனநோயாளியாக மாறிப்
போய்விடுவோர் சிலர்.

இவர்களின் எதிர்ப்பை முறியடித்துத் தான்
பொருள்முதல்வாதத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
எவர் தடுத்தாலும் அந்தப் பணி தொடரும்.
***************************************************

1) POKE என்பது ஒரு கவன ஈர்ப்புச் செயல்பாடு.
   உங்களை POKE செய்பவர் உங்களின் கவனத்தை
ஈர்க்கிறார்.
2) உங்களின் நட்புப் பட்டியலில் உள்ள அத்தனை
நண்பர்களுக்கும் உங்கள் பதிவு போய்ச் சேராது.
இதுதான் முகநூலின் மெக்கானிசம் (அதாவது
முகநூல் செயல்படும் முறை). POKE செய்வதன்
மூலம் உங்களின் பதிவுகளை அவரால் படிக்க
இயலும்.
3) சிலரின் பதிவுகளைத் தவற விடக்கூடாது என்று
நினைப்பவர்கள், அத்தகைய சிலரை POKE
செய்வார்கள். இதன் மூலம் அப்பதிவுகளை
அவர்களால் படிக்க இயலும். இதற்காகத்தான்
பலரும் POKE செய்கிறார்கள்.
4) முகநூல் கணக்கு முடங்கும் நிலையில்,
பாதிக்கப்பட்டவர் "என்னை POKE செய்யுங்கள்"
என்று கேட்டுக் கொள்வார். இதன்படி அவரின்
நண்பர்கள் அவரை POKE செய்வார்கள். இதன்
மூலம் முகநூல் கணக்கு முடங்காமல்
தப்பிக்கும்.
5) நீங்கள் விரும்பினால் உங்களை POKE செய்தவரை
திருப்பி நீங்களும் POKE செய்யலாம்.
6) ஒருவரின் பதிவுகளை விரும்பாதவர்களும்
அவரை POKE செய்வதுண்டு. புகார் கொடுக்க
வசதியாக, இம்மாதிரி POKE செய்வதும் உண்டு.   
 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக