புதன், 18 ஜூலை, 2018

இவரைத் தெரியுமா?
இவர்தான் இந்திய என்ஜிஓ அரசியலின் தந்தை!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
===========================================
இந்திய என்ஜிஓ அரசியலின் துருவ நட்சத்திரமாகத்
திகழ்ந்தவர் பேராசிரியர் ரஜனி கோத்தாரி.
87 வயது வரை வாழ்ந்த இவர் 2015ல்தான்
மறைந்தார்.

இந்திரா காந்தியுடன் நட்புடன் இருந்தவர் இவர்.
பின்னாளில் நெருக்கடி நிலையின்போது
ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்தார்.

பேராசிரியர்; அறிஞர்; மாபெரும் சமூக விஞ்ஞானி;
கோட்பாட்டாளர் (Theoretician), நிறைய நூல்களை
எழுதியவர் ஆகிய விவரங்களை இவரைப் பற்றிய
எந்தக் கட்டுரையிலும் காணலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான
விஷயம் என்னவெனில், இவர்தான் இந்திய என்ஜிஓ
அரசியலின் தந்தை என்பது. இந்த உண்மை
அவரைப் பற்றிய எந்தக் கட்டுரையிலும்
சொல்லப்பட்டு இருக்காது. அதற்குத்தான்
நியூட்டன் அறிவியல் மன்றம் தேவைப் படுகிறது.

இந்தியாவில் என்ஜிஓ அரசியலைத் தோற்றுவித்து
வளர்த்து, ஆற்றலும் திறமையும் நிறைந்த
மிகப் பலரை என்ஜிஓ செயல்பாட்டாளர்களாக
ஆக்கியவர் இவர். பியூசிஎல் என்னும்  என்ஜிஓ
அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக
இருந்தவர் இவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
போர்டு பவுண்டேஷன் என்னும் நிறுவனத்துடன்
நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர்.

முன்னாள் மார்க்சியர்களும் இந்நாள் மார்க்சிய
எதிர்ப்பாளர்களுமான எஸ்வி ராஜதுரை,
அ மார்க்ஸ் ஆகியோரின் ஆசான் இவர்தான்.

மார்க்சியத்துக்கு மாற்று (Alternate to Marxism) என்பதை
இவர் முன்மொழிந்தார். சாதியே இந்தியாவின்
தீர்மானிக்கிற பாத்திரம் என்ற   கருத்தை
வலியுறுத்தியவர். பகுஜன் சமாஜ் போன்ற
பல்வேறு சாதிக் கட்சிகள் இந்தியாவில் உருவாக
இவர் அடித்தளம் அமைத்தவர்.வர்க்க அரசியலை
சாத்திய அரசியலாக மாற்றியதில் வெற்றி பெற்றவர்.

தத்துவார்த்தத் தளத்தில் இவரை எதிர்த்து
முறியடிக்கும் வல்லமை பெற்ற ஆளுமைகள்
அன்று இந்தியாவின் இடதுசாரி முகாமில்
ஒருவர்கூட இல்லை. இது கசப்பான உண்மை.

வர்க்கமாக ஒன்று சேர்வதைத் தடுத்து சாதியாகப்
பிரிந்து செல்லும் போக்கு இன்றைய இந்தியாவில்
1980க்குப் பின்னர் உருவாகி வலுப்பெற்று நிலைத்து
நிலைபேறு உடையதாகி விட்டது. இந்தப்  போக்கை
உருவாக்கியவர் ரஜனி கோத்தாரியே. 

இவரின் Politics in India என்ற புத்தகத்தை நான்
படித்திருக்கிறேன்.இவரின் புத்தகங்கள் நிறைய
உள்ளன. அவற்றைப் படித்தால்தான் அவரின்
கொள்கைகளை அறிய முடியும்.

அவரின் நூல்களைப் படிக்க விருப்பமா? எல்லாம்
ஆங்கில நூல்கள். அ மார்க்சைச் சென்று
பாருங்கள். அவரின் வீட்டு ஷெல்பில் ரஜனி
கோத்தாரியின் புத்தகங்கள் அடுக்கி
 வைக்கப்பட்டு இருக்கும். 

அ மார்க்ஸ் மட்டுமல்ல, யோகேந்திர யாதவ்
தெரியுமா? அவரும் ரஜனி கோத்தாரியின்
மாணவர்தான்; சீடர்தான்.இந்தியாவின் சிறந்த
அறிவுஜீவிகளை எல்லாம் ரஜனி கோத்தாரி
பிடித்து வைத்துக் கொண்ட பிறகு, மார்க்சிய
முகாமுக்கு எங்கிருந்து ஆள் கிடைப்பார்கள்? 

இவரைத் தவிர்த்த என்ஜிஓ அரசியல் என்பது
இந்தியாவில் இல்லை. என்ஜிஓ அரசியலை
விமர்சிக்கும் எவர் ஒருவருக்கும் இவரே
தாக்குதலின் முதல் இலக்காக இருக்க வேண்டும்.
ஆனால் அப்படியில்லை என்பது யதார்த்தம்.

நியூட்டன் அறிவியல் மன்றம் தனது தாக்குதலின்
இலக்காக ரஜனி கோத்தாரியை வைத்துள்ளது.
இதை நீங்கள் ஆதரிக்காத பட்சத்தில் உங்களின்
கான்ட்டிய விலகல் வெளிச்சத்துக்கு வந்து விடும்.
----------------------------------------------------------------------------------

மார்க்சியத்துக்கு மாற்றாக சாதியை வைத்தவர் !
-----------------------------------------------------------------------------------------
ஆங்கில இந்து ஏடு ரஜனி கோத்தாரியின் மறைவை
ஒட்டி ஒரு இரங்கல் கட்டுரையை 2015ல் எழுதி
இருந்தது. அதில் இப்படிக் குறிப்பிடப் பட்டு உள்ளது.
படியுங்கள்.

"சமூக விஞ்ஞானத் துறை முழுவதும் மார்க்சிய
சித்தாந்தத்தின் ஆதிக்கம் நிலவியது. ரஜனி
கோத்தாரிதான் மார்க்சியத்துக்கு மாற்றாக
சாதியத்தை முன்வைத்தார். ஆரம்பத்தில் இவரின்
கருத்து அலட்சியத்துடன் பார்க்கப் பட்டது.
காலப்போக்கில் சாதிய ரீதியிலான கட்சிகள்
தோன்றி, வலுப்பெற்று ஆதிக்கம் செலுத்தத்
தொடங்கியதுமே, இவரின் கருத்து சரியானது
என்று  பட்டது"

ஆங்கில இந்து ஏட்டின் கட்டுரை அடுத்த கமெண்டில்.  

 நான் திமுகவுக்கு நற்சான்றிதழ் வழங்குவதாக
கற்பனை செய்துகொண்டு, அந்தக் கற்பனையின்
அடிப்படையிலேயே கருத்துத் தெரிவித்துக்
கொண்டு இருக்கிறீர்கள். இதற்கு நான் பொறுப்பாக
முடியாது. இது  உங்களைப் போன்றவர்களுக்கு
மட்டும் எழுதப்படும் கட்டுரை அல்ல. புதிய
வாசகர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம்
திராவிடக் கட்சிகள் பின்நவீனத்துவக் கட்சிகள்
அல்ல என்ற தகவலை எழுத வேண்டியது உள்ளது.
இதற்காக திமுகவை ஆதரிப்பதாக நினைத்துக்
கொண்டால், நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?
திமுகவின் வர்க்கத்தன்மை, வர்க்க அடித்தளம்
ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பதிவல்ல இது.

தோழர் வீரா,
ரஜனி கோத்தாரி மார்க்சிய முகமூடி எதையும்
அணியவில்லை. அவர் தம் இளம் வயதுகளிலேயே
மார்க்சியத்துக்கு மாற்றை முன்மொழிந்தவர்.
பல்கலைக்கழக வட்டாரத்திலும், அகாடமிக்
வட்டாரத்திலும் அவர் பகிரங்கமாக  மார்க்சியத்தை
எதிர்த்துச் சமர் புரிந்தவர். அந்தச் சமரில் வெற்றியும்
பெற்றவர். அவர் தன்னை மார்க்சியராக என்றுமே
அடையாளப் படுத்தியதில்லை.

என்மீது ஏன் பழி போட முயல்கிறீர்கள்? இந்தப்
பதிவில் நான் எங்கே திமுகவை ஆதரித்துள்ளேன்? 

நான் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன்.
நாம் இருவரும் சேர்ந்து மதுரைக்குச் சென்று
அஞ்சா நெஞ்சனைச் சந்திப்போம். அவரிடம்
பின்நவீனத்துவம் பற்றிய  திமுகவின் நிலைபாடு
என்ன என்று கேட்போம். அவர் கொடுக்கும்
பதிலை வாங்கிக் கொண்டு, மதுரை ராஜாஜி
மருத்துவமனையில் பக்கத்து பக்கத்து பெட்டில்
படுத்துக் கொண்டு எலும்பு முறிவு சரியாகும்
வரை இதைப்பற்றி .விவாதிக்கலாம். சரியா?

தோழர், பின்நவீனத்துவம் பற்றி ஏற்கனவே
10 கட்டுரைகளை எழுதி உள்ளேன். அவற்றை
ஒவ்வொன்றாக வெளியிட என்னை நீங்கள்
அனுமதிக்க வேண்டும். ஒரே கட்டுரை
சர்வரோக  நிவாரணியாக இருக்க இயலாது.
எனவே அருள்கூர்ந்து சற்றுப் பொறுமையுடன்
இருக்கவும்.
  



 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக