சனி, 14 ஜூலை, 2018

கூட்டுத்தொகை என்ன?
----------------------------------------

1,2,3,.... என்று வரிசையாகச் சொல்லிக்
கொண்டே வந்தான் குமார். அவன் சொன்ன
ஒவ்வொரு எண்ணின் வர்க்கத்தையும்
1,4,9,.... என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டே
வந்தான் மணி.இறுதியில் 50 என்று குமார் முடிக்க
2500 என்று முடித்தான் மணி.

மணி சொன்ன எல்லா எண்களின் கூட்டுத்தொகை
என்ன? அதாவது 1,4,9,............2500 வரையிலான எண்களின்
கூட்டுத்தொகை என்ன?

ஜனனி ஐயரின் அலைநீளம் என்ன என்பதைத்
தோராயமாகவேனும் வாசகர்கள் கூற வேண்டும்.

ஹோவர்ட் ரோர்க்! இவன்தான் நாவலின்
கதாநாயகன். இளைஞன். கட்டிடப் பொறியியல்
பயிலும் மாணவன். இவனை non conformist என்கிறார்
அந்த நாவலைப் படித்தவர். (பார்க்க: முந்திய கமென்ட்).
நன்கு கவனிக்கவும்: conform (confirm அல்ல).
Non conformist என்றால் என்ன?

ஒவ்வொரு மார்க்சிஸ்டும் non conformistஆக இருக்க
வேண்டுமா? சமூகத்தை மாற்ற வேண்டும்
என்று விரும்புகிற ஒரு மார்க்சிஸ்ட் எப்படி
conformistஆக இருக்க முடியும்? வாசகர்கள்
விளக்கலாம்.

மார்க்சிய முகாமில் பொருள்முதல்வாத வகுப்புகளை
பலரும் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் யார் எவரேனும்
டேவிசன், ஜெர்மர் பற்றி என்றாவது ஒருநாள்
கூறி இருக்கிறார்களா? இல்லை, இல்லவே இல்லை.
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே தான் நடத்தும்
பொருள்முதல்வாத வகுப்புகளில் அறிவியலைக்
கற்பிக்கிறது.
    



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக