ஞாயிறு, 22 ஜூலை, 2018

ஆத்திகத்தின் முதுகெலும்பை முறிக்க வேண்டும்!
கருத்துமுதல்வாதத்தின் குடலை உருவி
மாலை போட வேண்டும்! முடியுமா?
ஆத்திகனின் கேள்விக்கு பதில் என்ன?
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
 கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்கிறான்
கருத்துமுதல்வாதி. பொருள்முதல்வாதம்
இக்கேள்வியின் முதுகெலும்பை முறிக்கும்
பதிலை வைத்திருக்கிறது.

இருக்கட்டும். மார்க்சிய அணில் ஆணி
இலை ஈக்கள் பொருள்முதல்வாதிகள்
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

19ஆம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதத்தை
வைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளுக்கு
விடை சொல்ல இயலாது. இதை அணில் ஆணி
இலை ஈக்கள் பொருள்முதல்வாதிகளும்
அவர்கள் சொல்வதே பொருள்முதல்வாதம் என்று
நம்பும் மதியீனர்களும் உணர வேண்டும்.

கருத்துமுதல்வாத ஆசாமி கேட்கிறான்.
கேள்வி இதுதான்!

மார்க்ஸ் பிறந்த ஜெர்மனியில் பிறந்த விஞ்ஞானி
டாக்டர் வெர்னர் ஹெய்சன் பெர்க். இயற்பியலில்
நோபல் பரிசு பெற்றவர் இவர். இவர்
"உறுதியின்மைக் கோட்பாடு" என்ற
கோட்பாட்டை உருவாக்கினார்.

இதன்படி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு துகள்
எந்த இடத்தில் இருக்கிறது என்று சரியாகச்
சொல்ல முடியாது. இதுதான் உறுதியின்மைக்
கோட்பாடு.

எனவே கடவுள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறார்
என்பது உண்மை. மறுக்க முடியாத உண்மை.
ஆனால் அவர் இன்ன நேரத்தில் இன்ன இடத்தில்
இருக்கிறார் என்று சொல்ல முடியாது. காரணம்
அறிவியல்படி, இடத்தைத் துல்லியமாகச் சொல்ல
முடியாது.

எனவே, கடவுள் இருக்கும் இடத்தைச் சொல்ல
முடியவில்லை என்பதால், கடவுளே இல்லை
என்று கூறுகிறார்கள் நாத்திகர்கள். இது தவறு.

மனித சக்தியால் கடவுள் இருக்கும் இடத்தைச்
சொல்ல முடியாது. இதனால் கடவுளே இல்லை
என்று கூற முடியாது. ஒருநாளும் மனிதனால்
கடவுள் இருக்கும் இடத்தை அறிய முடியாது.
ஆனாலும் கடவுள் இருக்கிறார் என்பது
உண்மையே ஆகும்.
வெர்னர் ஹெய்சன் பெர்க்கின் உறுதியின்மைக்
கோட்பாடு எமது நிலைப்பாட்டை அறிவியல்
வழிப்படி சரி என்கிறது.

இதுதான் கருத்துமுதல்வாதிகள் வைக்கும் வாதம்.
இதை அறிவியல் படித்த ஆத்திகர்கள் சர்வ
சாதாரணமாக, சாதாரண டீக்கடை உரையாடல்
முதல் கருத்தரங்க விவாதம் வரை
முன்வைக்கிறார்கள். இது ஆத்திகர்களின்
பிரபலமான ஆயுதம் ஆகும். கிறிஸ்துவ
மதவாதிகளும் இதே கேள்வியை
முன்வைக்கிறார்கள்.

இக்கேள்விக்கு அணில் ஆணி இலை ஈக்கள்
பொருள்முதல்வாதிகள் என்ன பதில் சொல்லப்
போகிறார்கள்?

19ஆம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதத்தை  
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு திரியும்
பத்தாம் பசலிப் பொருள்முதல்வாதிகளே,
இதற்கு  உங்களிடம் பதில் இருக்கிறதா? 

சென்னை IITயில் ஒரு வகுப்பறையில் நடைபெற்ற
ஒரு கூட்டத்தில், ஒரு மாணவன் இதே கேள்வியைக்
கேட்டபோது, அதற்கு உரிய சமன்பாடுகள்,
விளக்கங்களுடன் நியூட்டன் அறிவியல் மன்றம்
பதிலளித்து இருந்தது. அந்தப் பதிலை இங்கு
வெளியிட இயலாது.

அத்தகைய பதில்கள் TARGETED AUDIENCEக்கு மட்டுமே
உரித்தானவை. General audience, random audienceக்கு
அந்தப் பதில் புரியாது. எனவே அதை இங்கு
எழுதுவது சாத்தியமில்லை. வாசகர்கள்
மன்னிக்கவும்.

கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன்
வகையறாக்களே, மார்க்சிய அணில் ஆணி
இலை ஈக்கள் அன்பர்களே, பதில் கூறுங்கள்.
பதில் கூறி, கருத்துமுதல்வாதத்தின் குடலை
உருவி மாலை போடுங்கள்!
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு: உறுதியின்மைக் கோட்பாடு
11 அல்லது 12ஆம் வகுப்பு வேதியியல் புத்தகத்தில்
உள்ளது. அதன் மீதான கணக்குகளும் (sums)
பாடப் புத்தகத்தில் உள்ளன. இது ஒன்றும் PhD
PORTION அல்ல.
*************************************************
   
   
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக