வெள்ளி, 13 ஜூலை, 2018

ஜனனி ஐயர், துலுக்காணம் இருவரின்
அலைநீளம் என்ன?
பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
அண்ணா பல்கலையில் ஒரு ஸ்மார்ட்  வகுப்பறையில்
ஒரு பேராசிரியர் வகுப்பு எடுக்கிறார்.
கருத்துமுதல்வாதத்தை விளக்கும் வகுப்பு அது.

Liberating Philosophy என்ற தலைப்பில்
உரை நிகழ்த்துகிறார் பேராசிரியர்.
ஆதிசங்கரர் முதல் இமானுவேல் கான்ட் வரை
என்பது உரையின் துணைத்தலைப்பு.
இந்த உரை ஆங்கிலத்தில் இருக்கும். படக்
காட்சிகளுடன் கூடிய உரை இது. அதாவது
Power point presentation.

வகுப்புக்கு நேரமாகி விட்டது என்பதால், இளம்பெண்
ஜனனி ஐயர் ஓட ஆரம்பிக்கிறார். அவரின் நிறை
52 கிலோகிராம். ஓடும்போது அவரின் வேகம்
மணிக்கு 5 கிலோமீட்டர். இது ஒரு காட்சி.

இன்னொரு காட்சியைப் பார்ப்போம்.
சென்னை சேலையூரில் ஒரு வகுப்பு நடக்கிறது.
இது பொருள்முதல்வாத வகுப்பு. ஒரு தோழரின்
வீட்டில் நடக்கிறது. மூத்த பொருள்முதல்வாதி
மாசாணமுத்து வகுப்பு எடுக்கிறார். அணில்
ஆணி இல்லை ஈக்கள் என்று அரிச்சுவடி
வகுப்பு எடுத்து கின்னஸ் சாதனைக்குத் தன்னைத்
தகுதியாக்கிக் கொண்டவர் மாசாணமுத்து.

இந்த வகுப்பில் கரும்பலகையோ ப்ரஜக்டரோ
Power point presentationஓ இப்படி எதுவும் கிடையாது.
சுவரில் ஹைதர் அலியின் படம் ஓட்டப் பட்டு
இருக்கும். அதை பார்த்துக் கொண்டே
மாசாணமுத்து உரை நிகழ்த்துவார்,
அவ்வளவுதான்.

வகுப்புக்குச் செல்ல வேண்டிய துலுக்காணம்
நேரமாகி விட்டதை உணர்கிறான். கட்டணக்
கழிப்பிடத்தில் காத்துக் கிடந்ததால் நேரம்
விரயமாகி விட்டதால் மூச்சு வாங்க ஓட்டமாக
ஓடுகிறான் துலுக்காணம்.

துலுக்காணத்தின் நிறை 72 கிலோகிராம்.
ஓடும்போது துலுக்காணத்தின் வேகம்
மணிக்கு 3 கிமீ.  

இப்போது ஜனனி ஐயர், துலுக்காணம் இருவரின்
அலைநீளம் என்ன என்று பார்க்கலாமா?
வாசகர்களிடம் இருந்து விடைகள் வரவேற்கப்
படுகின்றன.

அலைநீளம் கண்டுபிடிக்கும் கணக்குகளை
நிறையவே பார்த்தோம். அந்த வரிசையில் இது
கடைசிக் கணக்கு. வாசகர்கள் விடையளிக்க
வேண்டும்.
*************************************************
      

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக