வெள்ளி, 20 ஜூலை, 2018

தோல்வி அடைந்த மாணவர்கள் எத்தனை பேர்?
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
50 மாணவர்கள்  தேர்வெழுதிய ஒரு பள்ளித் தேர்வில் தேறியவர்களின் விவரம் வருமாறு:-

ஆங்கிலத்தில் தேறியவர்கள் = 25
கணிதத்தில் தேறியவர்கள் = 18
அறிவியலில் தெரியவர்கள்= 14
ஆங்கிலம் கணிதம் இரண்டிலும் தேறியவர்கள் = 8
கணிதம் அறிவியல் இரண்டிலும் தேறியவர்கள்= 5
அறிவியல் ஆங்கிலம் இரண்டிலும் தேறியவர்கள்=7
மூன்று பாடங்களிலும் தேறியவர்கள் = 3

அப்படியானால் மூன்று பாடங்களிலும் தேர்ச்சி
அடையாத மாணவர்கள் எத்தனை பேர்?

(பத்தாம் வகுப்பு எளிய கணக்கு)
விடைகள் வரவேற்கப் படுகின்றன.

செட் தியரி இல்லாமல் இந்தக் கணக்கைச்
செய்ய முடியுமா?
-------------------------------------------------------------
Set theory, Venn diagram  மூலமாக இந்தக் கணக்கை
எளிதில் செய்து விடலாம். ஆனால் என் கேள்வி
இதுதான்: செட் தியரி இல்லாமல் இது போன்ற
கணக்கைச் செய்ய முடியுமா?

செட் தியரி கண்டுபிடிக்கும் முன்பு நமது
முன்னோர்கள் இந்தக் கணக்கை எப்படிச்
செய்தார்கள்? அல்லது செய்யத் தெரியாமலே
இருந்தார்களா?

பல CBSE பள்ளிகளில் செட் தியரி 9ஆம் வகுப்பில்
பாடமாக இருந்தும்கூட, அதை நடத்துவதே இல்லை.
IITயில் படித்த பத்ரி சேஷாத்ரி செட் தியரி
தேவையில்லை என்கிறாரே!

செட் தியரி இல்லாத கணித உலகத்தை என்னால்
கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் வாசகர்களிடம்
இருந்து விடைகள் வரவேற்கப் படுகின்றன.
****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக