புதன், 4 ஜூலை, 2018

(4) சொற்காமுகம் மார்க்சியம் ஆகாது!
டெம்ப்ளேட் சிந்தனையும் புறவய மதிப்பீடும்!
GST குறித்த சரியான மதிப்பீடு எது?
எலுமிச்சம் பழத்தை அறுத்து குங்குமத்தை அப்பி
சாம்பிராணிப்புகை போடுவது மார்க்சியம் அல்ல!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
1) உலக வர்த்தகக் கழகம் (WTO), உலக வங்கி,
பன்னாட்டு நிதி மூலதனம், புதிய காலனியக்
கொள்கை போன்ற சொற்களை அனிச்சைச்
செயலாக ஒரு கட்டுரையில் பெய்து விடுவதால்
அக்கட்டுரை மார்க்சியத் தன்மை அடைந்து விடாது.
மாறாக அது சொற்காமுகம் (Phrase mongering) ஆகும். 

2) சொற்காமுகம் எங்கிருந்து பிறக்கிறது? அது
டெம்ப்ளேட் (Template) சிந்தனையில் இருந்து
பிறக்கிறது.பரந்து விரியும் புறநிலையை மறுத்து
குறுகிச் சிறுத்த ஒரு குறிப்புச் சட்டகத்துக்குள்
(frame) சிறைப்பட்டுக் கிடப்பது டெம்ப்ளேட்
சிந்தனை ஆகும். டெம்ப்ளேட் சிந்தனையும்
சொற்காமுகமும் கருத்துமுதல்வாதம் ஆகும்.

3) இதற்கு மாறாக, மார்க்சியமானது புறவய
மதிப்பீட்டை வலியுறுத்துகிறது. எடுத்துக் கொண்ட
பொருளைப்பற்றிய புறவயமான மதிப்பீடு
(objective assessment) இல்லாமல் மார்க்சியப் பார்வை
என்பது சாத்தியமில்லை.

4) GSTயைப் பற்றி இதுவரை மூன்று கட்டுரைகளை
நியூட்டன் அறிவியல் மன்றம் வெளியிட்டு உள்ளது.
புறவய மதிப்பீட்டில் உருவான மார்க்சியப்
பார்வை அக்கட்டுரைகளில் துலக்கமாக
வெளிப்படுகிறது. அக்கட்டுரைகள்
பொருள்முதல்வாத வகைமையைச் சேர்ந்தவை. 

5) உலகமயம் என்பது காரணம் (CAUSE).
GST என்பது விளைவு (EFFECT).
காரணம் விளைவு என்னும் பைனரியில்,
நமது எதிர்ப்பானது காரணத்தை நோக்கிக்
குவிய வேண்டும் என்பதே சரியான பார்வை.

6) உலகமயத்துக்கு முன் இந்தியாவில் FERA என்ற
ஒரு சட்டம் இருந்தது. (FERA =Foreign Exchange Regulation Act).
உலகமயத்தின் பின், இச்சட்டம் மாற்றப்பட்டு
FEMA என்று ஆகி விட்டது.
(FEMA = Foreign Exchange Maintenance Act)
சசிகலா, தினகரன் மீதான FERA சட்டமீறல்
வழக்குகள் FEMA சட்டம் வந்தவுடன் தள்ளுபடி
ஆகிவிட்டன. இது எதை உணர்த்துகிறது?
உலகமயத்துக்கு முன்பு குற்றமாகக் கருதப்பட்ட
ஒரு செயல், உலகமயத்துக்குப் பின் குற்றமாகக்
கருதப் படவில்லை என்பதையே.

7) ஆக, இந்தியப் பொருளாதார வரலாறு எப்படி
இருக்கிறது? உமு, உபி என்று இருக்கிறது.
இப்போது சொல்லுங்கள், ஒரு மார்க்சிஸ்ட்
உலகமயத்தை எதிர்க்க வேண்டுமா? FEMA
சட்டத்தை எதிர்க்க வேண்டுமா? உலகமயத்தை
எதிர்க்காமல் FEMAவை மட்டும் எதிர்ப்பது
அறிவுடைமை ஆகுமா?  எரிவதைப் பிடுங்கினால்
கொதிப்பது அடங்கிவிடும் அல்லவா?

8) இந்தியாவில் 1994 ஜூலைக்கு முன்னால் சேவை வரி
என்ற ஒன்று உண்டா? கிடையாது.நரசிம்மராவ்
பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக
இருந்த மன்மோகன் சிங்தான் முதன் முதலில்
சேவை வரியை இந்தியாவில் கொண்டு வந்தார்.
அன்று மன்மோகன் சேவை வரியைக் கொண்டு
வராமல் இருந்திருந்தால், இன்று GST வந்திருக்க
முடியாது.

9) GST குறித்த எமது ஆணித்தரமான கருத்துக்கள்:
--------------------------------------------------------------------------------------
அ) GSTக்கான வரையறைப்படி (definition)
  அருண் ஜெட்லி கொண்டு வந்தது GSTயே அல்ல.

ஆ) ஏற்கனவே தனித்தனி பாட்டில்களில்
இருந்த பல்வேறு வரி விகிதங்களை ஒரே பாட்டிலில்
அடைத்துக் கொடுக்கிறார் ஜெட்லி.

இ) GSTயின் கோட்பாடு UNIFORM TAXATION. அதுதான்
GSTயின் உயிர். அருண் ஜெட்லியின் GSTயில்
UNIFORM TAXATION இல்லை. மாறாக DIFFERENTIAL
TAXATIONதான் உள்ளது.

ஈ) உலகமயம் என்பது காரணம் (cause).
GST என்பது பின்விளைவு (Consequential effect).

உ) உலகமயம் என்பது சந்தையை மறுபங்கீடு
செய்யும் ஒரு முயற்சி.

ஊ) இந்தியா போன்ற ஏழை நாட்டில் சேவை வரி
விதிக்கக் கூடாது. அடிப்படை சேவைகளான
தொலைபேசி வங்கி போன்ற சேவைகளுக்கு
சேவை வரி விதிக்கக் கூடாது. தொலைபேசி
சேவைக்கு 188 சதம் வரி என்பது பெருங்கயமை.

எ) ஐரோப்பிய நாடுகளைப்போல ஒருபடித்தான
(homogeneous) பொருளியல் வாழ்க்கைத்தரம் உடைய
நாடல்ல இந்தியா. பாரதூரமான பொருளாதார
ஏற்றத்தாழ்வு உடைய பலபடித்தான (heterogeneous)
சமூக அமைப்பைக் கொண்டது இந்தியா. இங்கு
தற்போது GST பொருந்தாது. GSTயைக் கொண்டு
வந்த முயற்சியானது மிகவும் PREMATUREஆன
செயல்.

ஏ) எனவே இந்தியாவுக்கு DIFFERENTIAL TAXATIONதான்
பொருந்தும். இந்த உண்மையை மூன்று ஆண்டுக்கு
முன்பே 2015ல் சொன்னது நியூட்டன் அறிவியல் மன்றம்.

ஐ) கடைசியில் நான் சொன்ன உண்மையை
ஏற்றுக் கொண்டு DIFFERENTIAL TAXATION முறையைத்
தான் தொடர்ந்து  நீட்டித்து உள்ளார் ஜெட்லி.

10) இது GSTயை புறவயமாக மதிப்பீடு
செய்கிறது. இக்கட்டுரையில் கருத்துமுதல்வாதத்திற்கு
இடமில்லை. எமது கட்டுரையின் கருத்துக்களை
மறுப்போர் பின்நவீனத்துவவாதிகளும்
கருத்துமுதல்வாதிகளுமே ஆவர்.

11) மார்க்சியச் சொற்களை அனிச்சைச் செயலாகப்
பெய்து, எலுமிச்சம் பழத்தை அறுத்து குங்குமத்தை
அப்பி, சாம்பிராணிப் புகை போட்டு
சொற்காமுகத்தால் நிரம்பிய கட்டுரை அல்ல இது.
12)  GST பற்றிய எமது கட்டுரை மட்டுமே மார்க்சியப்
பார்வை ஆகும். மறுப்போர் தங்கள் கூற்றை
மெய்ப்பிக்க வேண்டும்.
***************************************************************
                              
 
              

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக