செவ்வாய், 3 ஜூலை, 2018

(1) GST குறித்த எமது கொள்கைப் பிரகடனம்!
கருத்துக்களால் அல்ல, தேற்றங்களால் ஆனது!
தோல்வியடைந்த uniform taxation!
IAS தேர்வில் GST பற்றிக் கேள்வி கேட்டால் 
அதற்குச் சரியான பதில் இந்தக் கட்டுரையே!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
1) GST என்பது புரிந்து கொள்ள முடியாத புதிர் அல்ல.
அது ஒன்றும் குவான்டம் தியரி அல்ல.
2) GST என்பது ஏற்கனவே இருந்து வந்த மறைமுக
வரிகளை ஒரே வரியாக ஆக்கியுள்ள ஒரு நடவடிக்கை.
3) வீடுகளில் கம்மல் தோடு ஜிமிக்கி மூக்குத்தி என்று
இருந்த நகைகளை எல்லாம் உருக்கி ஒரு
சங்கிலியாகச் செய்து விடுவார்கள். அதாவது பழைய
நகைகளை அழித்து புதிய நகை உண்டாக்குவார்கள்.
அதையே நாட்டில் செய்தால் அதன் பெயர் GST.
4) சாராம்சத்தில், GSTயை கொண்டு வந்தது ஒரு
நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை மட்டுமே.
வரி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சீர்திருத்தம்.
(A REFORM IN TAX ADMINISTRATION).
5) நிர்வாக சீர்திருத்தம் என்பதன் பொருள் என்ன?
GSTயானது அரசின் பொருளாதாரக் கொள்கையில்
எவ்விதமான மாற்றத்தையும் செய்யக் கூடியதல்ல
என்பதுதான் பொருள்.
6) ஆக, இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையில்
GSTயால் எந்த மாற்றமும் இல்லை. இது வெறும்
வரி வசூல் சார்ந்த ஒரு நிர்வாக நடவடிக்கையே.
(No change in economic policies)
7)எனவே GSTயை விதந்து ஓதுவதற்கோ அல்லது
வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பதற்கோ
ஒன்றுமில்லை என்பது பொருளாதார காமன்சென்ஸ்
உள்ளவர்களுக்குப் புரியும்.
8) இந்தியர்களின் சமூக பொருளியல் வாழ்க்கைப்
பயணத்தில் GST ஒரு மைல்கல். இதை இயல்பாக
இந்தியர்கள் கடந்து செல்வார்கள்.
9) ஏற்கனவே ஐமுகூ (UPAI &II) ஆட்சிக் காலத்தில்
சேவை வரி என்ற முற்றிலும் புதிய கோட்பாடு
1994 ஜூலை முதல் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்
பட்டது. 2012இல் ப சிதம்பரம் நிதியமைச்சராக
இருந்த போது, சகட்டு மேனிக்கு எல்லா சேவைகளும்
சேவை வரி வலைக்குள் (TAX NET) கொண்டு வரப்பட்டன.
இதன் விளைவு 2012க்குப் பிறகு சேவை வரியைப்
பொறுத்து எதிர்மறைப் பட்டியலின் ஆட்சி
(Negative List regime) நடைபெற்று வருகிறது.
10) டெலிகாம் சேவையும் வங்கி சேவையும் இந்திய
மக்களுக்கு இலவசமாக அல்லது மிகவும் குறைந்த
கட்டணத்தில் (5 சத வரி) வழங்கப்பட வேண்டும்.
இவை அகக்கட்டுமான (infrastructure) சேவைகள்.
ஒரு பக்கம் கோடிக்கணக்கான ஜன்தன்
அக்கவுன்டுகளைத் திறப்பதும் மறுபுறம் அவற்றுக்கு
18 சதம் சேவை வரி விதைப்பதும் முழுமூடத்தனம்
அல்லவா?
11) அஞ்சல் சேவைகளும் ஸ்பீட் போஸ்ட்டும்
வரி இல்லாமல் வழங்கப் படுகின்றன. ஸ்பீட்
போஸ்ட் சேவையை வரி விதிக்கக் கூடாத
நெகட்டிவ் லிஸ்டில் வைத்தார் புண்ணியவான்
சிதம்பரம். ஸ்பீட் போஸ்டுக்கு வரி இல்லை
என்னும்போது டெலிகாம் சேவைக்கு வரி,
அதுவும் 18 சத GST வரி என்பது என்ன நியாயம்?
12) GSTயின் கோட்பாடு ஒருசீரான வரிவிதிப்பு ஆகும்.
அதாவது UNIFORM TAXATION. GSTக்கு முன்பு
இந்தியாவில் உள்ளது DIFFERENTIAL TAXATION ஆகும்.
13) தற்போது இந்த 2017இல் இந்தியா UNIFORM
TAXATIONக்கு தயாராக இல்லை; இப்போது
கொண்டு வருவது PREMATURE நடவடிக்கை
என்பது எமது நிலைபாடு.
14) ஆகக் கடைசியில் எமது கோட்பாடுதான்
வெற்றி அடைந்துள்ளது. அருண் ஜேட்லி தோற்று
விட்டார். ஆம், இந்திய ஆளும் வர்க்கம்
முற்றிலுமாகத் தோற்று விட்டது.
15) அருண் ஜேட்லி கொண்டு வந்த GSTயில்
ஒருசீரான வரி விகிதம் (Uniform tax rate) இல்லை.
ஐந்து துண்டங்களாக (five tax slabs) அதாவது,
பூஜ்யம், 5 சதம், 12 சதம், 18 சதம், 28 சதம்
என ஐந்து வரி விகிதங்கள் உள்ளன. இத்தகைய
வரித் துண்டங்கள் (slabs) differential taxation ஆகும்.
16) இதனால்தான் ப சிதம்பரம் அலறுகிறார்:
"ஐயோ ஜேட்லி கொண்டுவந்த GSTயில் UNIFORM
TAXATIONஏ இல்லையே! இது GSTயே இல்லை" .என்கிறார்.
17) சிதம்பரத்தின் கருத்துப்படி, ஒரே ஒரு
STANDARDISED வரி விகிதம் மட்டுமே
(with marginal plus and minus) இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால்தான் அது GST!
18) அருண் ஜேட்லியின் GSTயில் 5 துண்டங்கள் (SLABS)
உள்ளனவே! இதில் எது STANDARDISED TAX RATE என்று
கேட்கிறார் சிதம்பரம்.
19) இந்தியாவில் தற்போது UNIFORM TAXATION
சாத்தியமில்லை என்பதை நன்கு உணர்ந்த
ஜேட்லி, தற்போது நடப்பில் உள்ள DIFFERENTIAL
TAXATION முறையையே கையாண்டு GSTயை
அறிமுகம் செய்துள்ளார். சிதம்பரத்தின் PURITAN
APPROACH 2006இல் தோல்வி அடைந்ததில் இருந்து
பாடம் கற்றுக் கொண்ட ஜேட்லி, நாணலாய்
வளைந்து GSTயை நிறைவேற்றி விட்டார்.
20) ஆக, எமது கோட்பாடாகிய
"தற்போதைய நிலையில் UNIFORM TAXATION
இந்தியாவுக்குப் பொருந்தாது"
என்ற கோட்பாட்டையே ஏற்றுச் செயல்படுத்திய
அருண் ஜேட்லி அவர்களுக்கு நன்றி.
----------------------------------------------------------------------------------------
தொடரும்...அடுத்து இரண்டாம் பகுதி....
*******************************************************************

முக்கிய அறிவிப்பு!
---------------------------------
இக்கட்டுரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு
2015ல் இதே நாளில் எழுதியது. GST என்றால் என்ன
என்றே பலருக்கும் தெரியாத நிலையில்,
ஆதரிப்பதா எதிர்ப்பதா என்றே பலருக்கும்
தெரியாத நிலையில் எழுதப்பட்ட கட்டுரை.
இக்கட்டுரை மட்டுமே மார்க்சியப் பார்வை ஆகும்.
இதைத்தவிர மற்ற எதுவும் மார்க்சியப் பார்வை
ஆகாது என்று அடித்துக் கூறுகிறோம். இதை
மறுப்பவர்கள் தங்களின் மறுப்பை நிரூபிக்க
வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக