சனி, 2 ஏப்ரல், 2016

திரிபுரா  மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையே 30 லட்சம்தான்.
பரப்பளவு 10,000 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை அடர்த்தி குறைவு.
99 சதம் மலைவாழ் மக்களே (Tribes). முப்பது லட்சம் மக்கள்
தொகையுள்ள திரிபுராவையும் எட்டுக் கோடி மக்கள் தொகை
உடைய தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது சரியாகாது என்பது என்
தாழ்மையான கருத்து.


1967 திமுக தேர்தல் அறிக்கை என்னிடம் உள்ளது.
அது விக்கிபீடியாவில் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத்
தெரியவில்லை. இருக்க வாய்ப்பில்லை என்பது என் அனுமானம்.
ஏனெனில் விக்கிப்பீடியா என்பது சமீபத்திய வரவு.
என் பின்னூட்டத்தில் உள்ள பிற தகவல்கள் கூட விக்கிப்பீடியாவில்
இருக்க வாய்ப்பில்லை. இருந்தால் அருள்கூர்ந்து எடுத்துக் காட்டவும். 


வைகோ அவர்கள் 1967 காலக்கட்டத்தில் ராஜாஜியின்
சுதந்திராக் கட்சியில் இருந்தார். பாளையங்கோட்டையில்
அட்வகேட் ரோடு என்று ஒரு சாலை உண்டு. அந்தச்
சாலையில்தான், பிரிக்கப் படாத நெல்லை மாவட்டத்தின்
திமுக செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களின்
வழக்கறிஞர் அலுவலகம் இருந்தது. அக்கதவிலேயே
V. கோபால்சாமி MA,BL அட்வகேட் என்ற பெயர்ப்பலகையும்
தொங்கும். பின்னர்தான் இவர் திமுகவுக்கு வந்தார்.
**
1971இல் இவர் நெல்லை மாவட்ட திமாமுக மாவட்டச்
செயலாளராக இருந்தார். திமாமுக என்றால் இன்றைய
தலைமுறைக்குத் தெரியாது. திராவிட மாணவர் முன்னேற்றக்
கழகம் என்று பொருள். அந்தக் காலக் கட்டத்தில் வைகோவின்
தலைமையில் எங்கள் கல்லூரியின் மாணவர்பிரிவுத் தலைவராக
நான் பணியாற்றினேன். அண்ணியார் ரேணுகா B.Sc
அவர்களுடனான வைகோவின் திருமணத்திற்கு நான்
சென்றவன். வைகோ பாதி நேரம் எங்கள் கல்லூரியில்தான்
 கிடப்பார். இன்னும் நிறையச் சொல்ல முடியும். தவிர்க்கிறேன்.
சுதந்திராக் கட்சியில் இருந்தவர்தான் இவர். இதற்கு
நான் கண்கண்ட சாட்சி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக