சனி, 2 ஏப்ரல், 2016

தமிழகம் இரண்டு மொழிப்போர்களைச் சந்தித்து உள்ளது.
முதலாம் மொழிப்போரை 1938இல் தந்தை பெரியார்
தலைமையேற்று நடத்தினார். இதில் அன்று சிறுவனாக
இருந்த  கலைஞர் பங்கேற்றார். இதில்தான் தாளமுத்துவும்
நடராசனும் சிறைக் கொடுமைகளால் உயிர் துறந்தனர்.
சென்னை மூலக் கொத்தரத்தில் அவர்களின் நினைவிடம்
உள்ளது. ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகள்
வீரவணக்க நாளின்போது (சனவரி 25) அங்கு சென்று
தாளமுத்து நடராசனுக்கு வீர வணக்கம் செலுத்தி வரும்
பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்.
**
இரண்டாம் மொழிப்போர் 1965இல் காங்கிரஸ் முதல்வர்
பக்தவத்சலம் காலத்தில் நடைபெற்றது. மாணவர்களைக்
காக்கை குருவிகளைப் போலச் சுட்டுத் தள்ளினான்
பக்தவத்சலம். தமிழக ஆட்சியில் இருந்து அன்று (1965)
விரட்டி அடிக்கப்பட்ட காங்கிரஸ் இன்று வரை கோட்டைக்குள்
நுழைய முடியவில்லை. இது வரலாறு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக