தற்போது உலகெங்கும் ஏற்கப்பட்டு நடைமுறையில் உள்ள
காலண்டர் முறை கிரகோரி காலண்டர் எனப்படும். ஆண்டுக்கு
365.25 நாள் என்பது கிரகோரி கொண்டு வந்த திருத்தமே. இதற்கு
முன்பு ஜூலியஸ் சீசர் உருவாக்கிய ஜூலியன் காலண்டர்
முறை உலகின் பெரும்பகுதியில் நடைமுறையில் இருந்தது.
ஆண்டுக்கு 12 மாதங்கள் என்பது கூட அண்மைக்காலத்
திருத்தமே.அதற்கு முன்பு ஆண்டுக்கு 10 மாதங்களே.
கடைசி மாதமாகிய டிசம்பர் என்பது பத்தாம் மாதம் என்றே
பொருள்படும். நிற்க.
**
உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் அவ்வக்கால
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தத்தம் சொந்த
காலண்டர் முறையைப் பெற்று இருந்தனர். இவை
சந்திர சுழற்சி , சூரிய சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில்
கணிக்கப் பட்டவை. இசுலாமியர்களின் காலண்டர் சந்திர
சுழற்சிக் காலண்டர் ஆகும். தை முதல் நாளை ஆண்டின்
தொடக்கமாகக் கொண்ட தமிழரின் காலண்டர் சூரிய சுழற்சிக்
காலண்டர் ஆகும்.
**
வட்டம் என்பதையும் வட்டத்திற்கு 360 பாகை என்பதையும்
மனித குலம் கண்டு பிடிக்கும் முன்பே காலண்டர் முறை
இருந்தது. மனிதனின் அறிவியல் அறிவு துல்லியம் அடைய
அடைய பழைய தோராயங்கள் திருத்தப் பட்டன.
காலண்டரும் முன்னிலும் துல்லியம் அடைந்து வருகிறது.
**
எனவே பழமையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது
சரியன்று. ஆண்டுக்கு 360 நாட்கள் என்பதெல்லாம்
அறிவியலுக்கு நேர் எதிரானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக