செவ்வாய், 5 ஏப்ரல், 2016

எங்கள் தொகுதியின் வேட்பாளர் ஒரு கணித நிபுணர்!
வாக்களிக்க அவர் தரும் பணம் எவ்வளவு?
ஒரு எளிய கணக்கு!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------
எங்கள் தொகுதியில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களில் ஒருவர் கணித நிபுணர். அவர் தமக்கு 
வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் தலைக்கு இவ்வளவு 
பணம் வழங்கப் போவதாக அறிவித்தார். இதற்கான தேர்தல் 
ஆணையத்தின் அனுமதியை அவர் பெற்றிருந்தார் என்று 
கருதிக் கொள்ளுங்கள்.

தொகுதியில் ஒரு கூட்டம் போட்டார். அங்குள்ள பள்ளியில் 
படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனின்  கணிதப் புத்தகத்தை 
எடுத்து, அதிலுள்ள ஒரு கணக்கை வாசித்தார். அந்தக் 
கணக்கு செங்கோண முக்கோணத்தின் பரப்பு பற்றிய கணக்கு.

இந்தக் கணக்கின் விடை என்னவோ, அதைப் போல் 
பத்து மடங்கு ரூபாய் தருவதாக வாக்களித்தார். கணக்கு 
கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அப்படியானால் அவருக்கு
வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் கிடைக்கும்?

கணக்கு இதுதான்:
------------------------------
ஒரு செங்கோண  முக்கோணத்தின் கர்ணம் 10 அலகுகள்.
கர்ணத்தின் மீது வரையப்பட்ட செங்குத்துக் கோடு 6 அலகுகள்
என்றால் அந்தச் செங்கோண முக்கோணத்தின் பரப்பு என்ன?

The hypotenuse of a right triangle is 10 units. The altitude drawn to the 
hypotenuse is 6 units. Now find the area of the triangle.

இப்போது சொல்லுங்கள். கணித நிபுணருக்கு வாக்களிக்கும் 
எனக்குக் கிடைக்கும் பணம் எவ்வளவு? 
---------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: சரியான விடை அளிக்கும் ஒவ்வொருவருக்கும் 
கணித நிபுணர் வாக்களித்த அதே தொகையை நியூட்டன் 
அறிவியல் மன்றம் வழங்கும்.
--------------------------------------------------------------------------------------------------

   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக