செவ்வாய், 5 ஏப்ரல், 2016

தெளிவின்மை இருக்குமாயின் அது தகாது. எனவே கணக்கில்
கூறிய முக்கோணத்தை அதன் அளவுகளுடன் படமாக இங்கு
தந்துள்ளேன். கர்ணம் BD  = 10 அலகுகள். கர்ணத்தின் மீதான
செங்குத்துக் கோடு AC = 6 அலகுகள்.   

எதிர்முனையில் இருந்து

நிறைய மாணவர்கள் 1/2 X bh ( area = half the base multiplied by the
altitude) என்ற சூத்திரத்தின் அடிப்படையில்,
1/2  X 10 X 6 = 30 square units என்று விடை எழுதி, இந்த
30ஐ 10ஆல் பெருக்கி 300 ரூபாய் என்று விடை எழுதுவார்கள்.
இதில் ஒரு தெளிவான தர்க்கம் இருந்த போதிலும்,
இவ்விடை தவறானதாகும். இன்னும் சொல்லப் போனால்,
இந்த விடையைத் தான் மாணவர்கள் எழுதிக் கொண்டு
இருக்கிறார்கள்.  

முக்கோணம் ADBயின் பரப்பு என்ன என்பதுதான் கேள்வி.
இது செங்கோண முக்கோணமாக இல்லையென்றால் இந்தக்
கணக்கே உருவாகி இருக்க முடியாது.

தர்க்கரீதியாக சரியானதாகத் தோன்றும் இன்னொரு விடை
240 ரூ என்பதாகும். முக்கோணத்தின் பரப்பு 24 சதுர அலகு
என்ற விடையைச் சிலர் எழுதுகின்றனர். முக்கோணத்தின் கர்ணம்
10 அலகு என்பதால், முக்கோணத்தின் அளவுகளாக 6,8,10
அலகுகளைக் கொண்டு, 1/2 X bh சூத்திரத்தைப் பயன்படுத்தி,
1/2 X 6 X 8 = 24 சதுர அலகுகள் என்ற விடைக்கு வந்து சேர்கின்றனர்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக