புதன், 6 ஏப்ரல், 2016

1) சென்னையில் நல்ல டெலஸ்கோப்புகள் கிடைப்பதில்லை.
எனவே மும்பையில் வாங்கிக் கொள்ளலாம். 
2) celestron eq  114 என்பது பரவலாகப் பயன்படுத்தப் படும்
டெலஸ்கோப்புதான். அதை வாங்கும்போது, அந்த tripod
வலுவானதாக இருக்கிறதா, குறிப்பாக, மூன்று கால்களும்
வலிமையாக இருக்கிறதா என்பதைச் சோதித்துப்
பார்ப்பது நல்லது.
3) celestron eq 114 Newtonian telescope வகையைச் சார்ந்தது.
4) skywatcher telescope in India  என்று Googleஇல் தேடிப்
பார்க்கலாம். அதுவும் பரவலாக வாங்கப் படுகிறது.
5) Galeleon TELESCOPE வகையும் வாங்கப் படுகிறது.
6) celestron eq 114 குறித்து மேலும் விவரங்கள் கேட்டு இருக்கிறேன்.
7) மும்பையில் வாங்கி விடுவது மேல்.

நான் தமிழ் வழியில் பள்ளிக்கல்வி படித்தபோது,
வடிவியல் (Geometry) பாடப்புத்தகத்தில் converse என்பதற்கு
மறுதலை என்று எழுதப்பட்டு இருந்தது. அவ்வாறே கற்றுக்
கொடுக்கப்பட்டது, இது பசுமரத்தாணியாய் மனத்தில்
பதிந்து அறிவினில் உறைந்தும் விட்டது.  

negation  என்ற சொல்லுக்கு "நிலைமறுப்பு" என்ற சொல்,
நான் அறிய அரை நூற்றாண்டு காலமாகப் புழக்கத்தில் உள்ளது.
மார்க்சிய இலக்கியங்களில், இயங்கியல் விதிகளில்,
negation of negation என்பதற்கான தமிழாக்கமாக நிலைமறுப்பின்
நிலைமறுப்பு என்ற சொல் பரவலாகப் பயின்று, இன்று
நிலைபேறு உடையதாகி விட்டது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக