செவ்வாய், 5 ஏப்ரல், 2016

மின்னல் செய்தி!
---------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் வெளியிட்ட கருத்துக்
கணிப்பை "புதியமுகம்" என்னும் இணைய இதழ்
வெளியிட்டு உள்ளது. இதை இதுவரை 1600 பேர் (1.6k)
பார்த்துள்ளனர். ஏகப்பட்ட querries. இதைத் தயாரிக்க
நான் எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா?
மூன்று நிமிடங்கள். 


ஒவ்வொரு ஆண்டிலும் தேசிய அறிவியல் நாளன்று
(பெப்ரவரி 28) பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக, 
அறிவியல் சொற்பொழிவு நிகழ்த்துவது எமது நடைமுறை. பள்ளிகளில் எப்போதும் 8, 9 வகுப்புகளில்தான் என்னைப் 
போடுவார்கள். 10,11,12 வகுப்பு மாணவர்கள் தேர்வு 
நெருங்குவதால்  அனேகமாக பெப்ரவரி  28இல் 
study holidaysஇல் இருப்பார்கள். 8, 9 வகுப்பு மாணவர்களுக்கு
சொல்லத் தக்கது என்று நான் முடிவு எடுத்து வைத்து 
இருப்பது வானியலும் கணக்கும்தான். கணக்கிலும் 
மாயச்சதுரங்கள் புதிர்கள் என்றுதான் சொல்லுவது என் வழக்கம்.
**
கிரகணம் பற்றிய என் விளக்கம் அத்தகையதே. அறிவியல்சாரா 
(Non-science) பொதுமக்கள் மற்றும் கீழ்வகுப்பு மாணவர்களுக்கு 
இந்த விளக்கம் பெரிதும் பயன் தருவதாக இருக்கிறது என்பது 
என் பட்டறிவு.
**
கல்லூரிகளில் பேசும்போது, குறிப்பாக இயற்பியல்
மாணவர்களிடம் பேசுகையில் வானம்தான் எல்லை என்று 
வகுத்துக் கொள்வதே என் பழக்கம். நிற்க. இதை விட 
எளிமையாகச் சொல்ல வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக