சனி, 2 ஏப்ரல், 2016

புதிய புறநானூற்றில் ஒரு பாடல்!
அவனை அவர் பாடியது!
-----------------------------------------------------------
கடை வாயில் வந்து யார் நின்றாலும்
அவருள் எவரும் இல்லை என்ற
மறுமொழி பெற்றது இல்லை எனும்
மாண்பு நின்கடைக்கே.

புட்கள் சிலம்பும் வைகறைப் போழ்தில்
அவியனின்  வாயிலில் நின்று
அவனின் யானைகளைப் புகழ்ந்து பாடி
வேண்டிய மட்டும் பரிசில் பெற்ற
மாறோக்கத்து நப்பசலையார்
திருக்குவளை நோக்கியன்றோ
ஆற்றுப் படுத்து கின்றார்.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ
சென்று பயனெதிரச் சொன்னதும் நின்னையன்றோ.

மற்றும் மற்றும் வினவுதும் தெற்றென
கருணாநிதிச் சோழன் இல்லம்
அணித்தோ செய்ததோ கூறுமின் எமக்கே.
-------------------------------------------------------------------------------------------
இரவலர்க்கீவதில் பாரில் எவர்க்கும் ஈடற்ற
திருக்குவளைக் கருணா நிதிச் சோழனை
கலையியல் நிறைஞர் புலவர் வீரை
நல்லாசிரியர் மகனார் பிச்சாண்டியார் மகனார்
இளங்கோவனார் பாடியது.

திணை: பாடாண் துறை: கடைநிலை.
------------------------------------------------------------------------

தேர்தலில் போட்டியிடும் கட்சித் தலைவர்களே,
காங்கிரசாரே!
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி அவர்களின்
புதிய புறநானூற்றுப் பாடலைப்
படித்து விட்டீர்களா?
---------------------------------------------------------------------
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றென
கருணாநிதிச் சோழன் இல்லம்
அணித்தோ செய்ததோ கூறுமின் எமக்கே


யானே இளஞ்சேட்சென்னி; அஃது இலக்கியப்
படைப்பிற்கான புனைபெயர்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக