சனி, 2 ஏப்ரல், 2016

இலங்கை எறிந்த கருணாகரன் தன்
இசைவெஞ் சிலையின் வலி கேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணாகரன் தன்
களப்போர் பாடத் திறமினோ.
------------------------------------------------------------------
பொருதடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே
போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்.

கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்று எடுத்து உடுப்பீர்
நீள் பொற் கபாடம் திறமினோ.
-------------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி அவர்கள்
செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியை
அடியொற்றி
தமிழ்க்கோட்டைப் பரணியை இயற்றி வருகிறார்.

2016 மே 21 அன்று
சென்னை தமிழ்க் கோட்டையில் (புனித ஜார்ஜ் கோட்டை)
வாழும் வள்ளுவர் அவர்கள்
ஆறாம் முறையாக
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் திருநாளன்று
இளஞ்சேட்சென்னியின் பரணி
அரங்கேற்றம் நடைபெறும்!
தமிழ்ப் புலவோரும் ஆர்வலரும் வருக! வருக!!
-------------------------------------------------------------------------------------------
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக