வியாழன், 7 ஏப்ரல், 2016

உடனடியாக வந்து சந்திக்க வேண்டும்!
வைகோவுக்கு விஜயகாந்த் உத்தரவு!
உத்தரவை ஏற்று விஜயகாந்த் முன் ஆஜரானார் வைகோ!
-------------------------------------------------------------------------------------------
வைகோவின் சாதிவெறிப் பேச்சு தேமுதிகவின் வாக்கு
வங்கியில் பலத்த சேதாரம் ஏற்படுத்தி விட்டால் கடும்
கோபம் அடைந்த விஜயகாந்த், உடனடியாக வைகோ
என் முன் ஆஜராக வேண்டும் என்று சமன் அனுப்பி உள்ளார்.

சமனை ஏற்று விஜயகாந்த் முன் ஆஜரானார் வைகோ.
அப்போது வைகோவை கடுமையாகக் கண்டித்த
விஜயகாந்த் தேமுதிக உள்விவகாரங்களில்  தலையிட நீ யார்
என்று கடுங்கோபத்துடன் கேட்டார். என் கட்சிப் பிரச்சினையை
நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் வைகோ இதில் தலையிட
வேண்டாம் என்றும் விஜயகாந்த் வைகோவை எச்சரித்துள்ளார்.

மேலும் கலைஞரை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை விட்டு
அவரின் சாதியைச் சொல்லி இழிவு படுத்தியதை விஜயகாந்த்
கடுமையாகக் கண்டித்துள்ளார். தனக்கும் பிரேமலதாவுக்கும்
கல்யாணத்தை நடத்தி வைத்த கலைஞரை சாதியைச் சொல்லி
இழிவு படுத்தியதால் தேமுதிகவின் வாக்கு வங்கியில்
ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்தும் விஜயகாந்த் வைகோவை
கடுமையாகக் கண்டித்தும் எச்சரித்தும் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
-------------------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக