சனி, 9 ஏப்ரல், 2016

1091 பிளான் இட்லி போன்றது. 1275 பிளான் தோசை போன்றது.
இரண்டுக்கும் மூல ஆதாரம் ஒரு கரண்டி மாவு மட்டுமே.நிற்க.
1091 பிளான் தனி நபர்களுக்கானது. அதாவது பெரும்பாலும்
மாதாமாதம் கட்டணம் செலுத்தும் தனிப்பட்ட
சந்தாதாரர்களுக்கானது. ஆனால், 1275 பிளான் மொத்தமாகக்
கட்டணம் செலுத்த விரும்பும் (lumpsum or bulk payment) வாடிக்கையாளர்களுக்கானது.
**
1091 பிளானில் இரண்டு ஆண்டுகளுக்குச் சேர்த்து மொத்தமாகப்
பணம் செலுத்தினால் சலுகை எதுவும் கிடையாது.
1091 X 24 = 26184 செலுத்த வேண்டும். ஆனால், 1275 பிளானில்,
இரண்டு ஆண்டுகளுக்குச் சேர்த்து மொத்தமாகக் கட்டணம்
செலுத்தினால் சலுகை உண்டு. 1275 X 24 = 30600 செலுத்தத்
தேவையில்லை. பதிலாக, 26775 மட்டும் செலுத்தினால் போதும்.
அதாவது, ரூ 3825 லாபம். அதாவது வருஷத்துக்கு ரூ 2000 லாபம்
(தோராயமாக). இன்னும் சொல்லப்போனால், மாசத்துக்கு
ரூ 200 லாபம் (தோராயமாக). இந்த இடைப்பட்ட இரண்டு ஆண்டு
காலத்தில் நேரிடும் எந்தக் கட்டண உயர்வும், இந்த பிளானில்
உள்ளவர்களைப் பாதிக்காது.
**
எனவே LUMPSUM PAYMENTஐ விரும்பும் சந்தாதாரர்களுக்கு
இந்த 1275 பிளான் ஏற்புடையது. இவாறு நீண்டகாலப்
பயன்பாட்டுக்கு உரிய ஒரு பிளானில், குறுகிய கால பிளானான
1091க்கு உரிய சலுகைகளைத் தர முடியாது. இதில் எவ்வித
ஏமாற்றும் இல்லை. PROFIT IS OUR MOTTO என்பது தனியார்
நிறுவனங்களின் தத்துவம். SERVICE IS OUR MOTTO என்பது
BSNLஇன் தத்துவம். அதற்காக, BSNLஐ தர்ம சத்திரமாக
நடத்த முடியாது. 
**
எனவே, BSNL ஐ நிபந்தனையின்றி ஆதரிப்பது தேசப்பற்று
மிக்க, சமூக உணர்வு உடைய குடிமக்களின் கடமை.
தோழமையுடன்,
நியூட்டன் அறிவியல் மன்றம்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக