தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கவனத்திற்கு!
குத்துச் செடியின் உயரம் என்னவோ அந்த அளவுதான்!
நுண்மாண் நுழைபுலம் தமிழர்க்கில்லை!
------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------------------------------------------------------
"கலிங்கம் குலையாமலே" என்ற தலைப்பில் ஒரு
குறும் பதிவை எழுதினேன். சோனியாவின் கலிங்கம்
குலையாமலே கலைஞர் காங்கிரசுக்கு முப்பது
தொகுதிகள் தருகிறார் என்று எழுதினேன்.
அப்படியானால் கலிங்கம் குலைந்தால் இன்னும்
அதிகம் தருவார் போலும் என்ற கருத்து தொக்கி நிற்பதை
நுண்மாண் நுழைபுலம் இல்லாதோர் கூட அறிய இயலும்.
எனினும் எவரும் மெலிந்த கண்டனத்தைக் கூடத்
தெரிவிக்கவில்லை. காரணம், கலிங்கம் குலைதல்
என்றால் என்னவென்று புரியவில்லை.
புரியாமல் போய்விடுமோ என்றெண்ணித்தான்
"காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த" என்ற
தாழிசையையும் (கலிங்கத்துப் பரணி, கடைதிறப்பு)
குறிப்பிட்டு இருந்தேன். இருந்தும் பயனிலை.
"கழுவுறு கலிங்கம்" என்ற சங்கப் பாடலையோ,
"இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்கமாம் மதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை" என்ற இரட்டைப்
புலவர்களின் பாடலையோ எத்தனை பேர் அறிந்திருப்பர்
என்று எண்ணும்போது வருத்தம் மேலிடுகிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களின் தமிழறிவு
இத்தன்மைத்தாயதே! இதை உணர்க!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக